Thanks to Sudhan for this lovely photo!
Thanks to Sri Matam for sharing acharya’s anugraha bashanam from Thenambakkam.
தமிழ் புத்தாண்டு அனுக்ரக பாஷனம்.
குருர் பிரம்மா குரூர் விஷ்ணு: குருர்தேவோ மகேஸ்வர:
குரு ஷாக்ஸாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
गुरुर्ब्रह्मा गुरुः विष्णु: गुरुर्देवो महेश्वरः|
गुरुः साक्षात् परम् ब्रह्म तस्मै श्रीगुरवे नमः||
குரவே சர்வ லோகானாம் பீஷஜே பவரோகினாம்
நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நமஹ
गुरवे सर्वलोकानां भिषजे भवरोगिनाम्|
निधये सर्वविद्यानां श्रिदक्षिणमुर्तये नमः||
ஆதித்யாய ச சோமாய மங்களாய
புதாய ச குரு சுக்ர சனிப்யச்ச
ராஹவே கேதவே நம:
आदित्याय चा सोमाय मंगलाय बुधाय च|
गुरुशुक्रशनिभ्यश्च राहवे केतवे नमः||
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதகே
சரணே த்ரயம்பிகே தேவி
நாராயணி நமோஸ்துதே
सत्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके |
शरण्ये त्र्यम्बकेदेवी नारायणि नमोस्तुते ||
சித்திரை மாதத்தில் இருந்து பங்குனி மாதம் வரையிலே, சைத்திர மாதத்தில் இருந்து பால்குனி மாசம் வரையிலே சௌர மாதப்படியும், சந்திரமானப்படியும், பல உற்சவங்களை, பண்டிகைகளை, விரதங்களை, பூஜைகளை , ஈஸ்வர பக்தியை வளர்ப்பதற்காகவும், ஆஸ்திகத்தை வளர்ப்பதற்காகவும், அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, என்கிற இந்த அரிய மனிதப் பிறவியிலே,விசேஷ அனுக்ரகத்தை பெறுவதற்காகவும், பஞ்சாங்கங்களின் வழிக்காட்டுதலின்படி, திதி, வார, நக்ஷத்திர, யோக கரணங்கள் என்கிற ஐந்து அங்கங்களுடைய பஞ்சாங்கத்தின் வழிகாட்டுதலின் படி, எந்த விரதத்தை , எந்த பரிகாரத்தை, எந்த பூஜைகளை எந்த உற்சவங்களை, காலையிலே செய்ய வேண்டும், மத்தியானத்திலே செய்ய வேண்டும், ராத்திரியிலே செய்ய வேண்டும், செய்யலாம் என்கிற கால நியமங்களை , நியமத்தோடு அந்த காலங்களில் செய்ய வேண்டும், அதற்கு கால நியமம் என்று பெயர். அதன்படி இந்த வருஷம், இன்றைய தினம், திங்கட்கிழமை அன்று , மற்றும் நாளைய தினம், செவ்வாய்க் கிழமை அன்று இந்த புது வருஷ சௌரமான யுகாதியை இன்றைய தினம் வைதீகமான, சாஸ்திரியமான முறையிலே அனுஷ்டானம் செய்வதும், நாளைய தினம் பூஜை போன்ற உற்சவாதிகளையும், தேவதைகளை ப்ரீர்த்தி செய்யக் கூடிய நாளைய தினமும் , தேவதா, ரிஷி , பித்ருக்கள் என்ற விதத்திலே ஷன்னவதி என்று சொல்லக்கூடிய வருஷத்திலே , 365 நாட்களிலே, இந்த 96 நாட்களை விஷேசமாக, அந்தப் பூர்வீகமானவர்களை நினைவுபடுத்தி, கௌரவப்படுத்தி, ஸ்ரத்தா , பக்தியுடன் பூஜிக்கக் கூடிய அந்த அனுஷ்டானத்தையும், இன்றைய தினமும், நாளைய தினம் சுப்ரபாதம், ப்ரபாதம் என்றால் காலை நேரம். ஸு ப்ரபாதம்-நல்ல காலை நேரம். அந்த வருஷப் பிறப்பானது நமக்கு நல்ல பலன்களை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நல்லதைப் பார்ப்பது. அது கேரள தேசத்திலே விசேஷமாகவும், நம் பிரதேசத்திலே, இந்த விஷு தரிசனம் என்பது ஒரு பழக்கத்திலே இருந்து வருகிறது. நல்லதைப் பார்ப்பது, நல்லதைக் கேட்பது. காலையிலே எழுந்தவுடன்
கராக்ரே வஸதே லக்ஷ்மீ; கரமத்யே சரஸ்வதி
கரமூலே து கௌரீ ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்
என்பதாக நம்முடைய உள்ளங்கையிலே துர்கா, லக்ஷ்மி சரஸ்வதி தேவிகள், த்ரி சக்திகள் -நல்ல வாக்கை கொடுக்கக் கூடிய சரஸ்வதி, நல்ல ஐய்ஸ்வரியத்தை தரக் கூடிய மகாலட்சுமி, நல்ல விஷயங்கள் செய்வதற்கும், தடங்கள் இல்லாமல் ,தைரியத்துடன், நாம் விளங்குவதற்கான சக்தியை அளிக்கக்கூடிய துர்கா தேவி -இப்படி இந்த மூன்ற சக்திகளை த்யானம் செய்வது என்பது ஒரு சம்ப்ரதாயத்திலே சுப்ரபாதமாக இருந்து வந்தது. அதே போன்று பல கோவில்களிலேயும், மட்டத்திலேயும் கோ பூஜை என்பது வழக்கமாக இருந்து வருகிறது. சௌரியப்பட்ட நேரத்திலே, சௌரியப்பட்ட இடத்திலே கஜ பூஜையும் நடைபெறுகிறது.நவராத்திரி போன்ற நேரத்திலே அஸ்வ பூஜையும் நடைபெறுகிறது. ரிக்வேதத்தில் இருக்கக் கூடிய கோ சூக்த்தத்தை கொண்டு கோ பூஜையும்-பசுக்களுக்கு நன்மை ஏற்படவேண்டும் என்கிற மந்திர பாராயணங்களும், அஸ்வ சூக்தம் என்று சொல்லக்கூடிய, அஸ்வ சூக்தத்தின் மூலமாக நவராத்திரி சந்தர்ப்பத்திலே குதிரைகளுக்கு பூஜையும், ஸ்ரீ சூக்தத்தின் மூலமாக கஜ பூஜையும் இப்படி நல்லதைப் பார்ப்பது, சௌபாக்ய திரவியங்களைப் பார்ப்பது
தேஹி சௌபாக்ய ஆரோக்கியம் தேஹிமே பரமம் சுகம்
ரூபம் தேஹி ஜெயம் தேஹி யஷோ தேஹி திவிஷோ ஜஹி
देहि सौभाग्यमारोग्यं देहि मे परमं सुखम्|
रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि||
சங்கடத்தில் இருந்து விடுபட்டு, நல்லத்தைப் பெறுவோம் என்கிறப் பிரார்த்தனையோடு, சௌபாக்ய திரவியங்களை தரிசனம் செய்கிறோம். அதே போன்று ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களிலேயும் , சுப்ரபாத சேவைகள் என்பதாக, அந்த கோபூஜை முதலான பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே இந்த வருஷப் பிறப்பு சந்தர்ப்பத்திலேயே,ஷ்ரமங்களில் இருந்து நீங்கி, மக்களும் இருக்கக் கூடிய இடத்திலே, சிறிது காலம், தற்காப்புக்காக இருக்க வேண்டிய முறையிலே அவர்களும், பத்திரமாக, நல்ல விதமாக, அவரவர்களின் கர்மானுஷ்டானங்களை செய்து கொண்டு, நல்ல பிரார்த்தனைகளையும் செய்து கொண்டு, தனக்காகவும் சரி, தன குடும்பத்திற்காகவும் சரி, தான் வசிக்கக் கூடிய தேசத்திற்காகவும் சரி, லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்கிற விதத்திலே, உலகத்திலே இருக்கக் கூடிய நம்மவர்கள், உலகத்திலே இருக்கும் அனைவர்களும் நம்மவர்கள் என்கிற, லோக கல்யாணத்திற்க்காக, உலகத்திற்கு நன்மை ஏற்பட வேண்டும் என்கிற பிரார்த்தனையும் செய்து
ஸ்வச்திப் ப்ரஜாப்பிய பரிபாலயந்தாம்
ஞாயேன மார்கேன மஹிந்மஹீஷா
கோப்ரம்மநேப்ய:சுபமஸ்து நித்யம்
லோகா: சம்ஸ்தா: சுகினோ பவந்து
स्वस्ति प्रजाभ्यःपरिपलायन्तां न्याय्येन मार्गेण महीं महीशाः|
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं लोकाःसमस्ताः सुखिनो भवन्तु||
இதுதான் தமிழிலேயும் -யான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்திலே, அவரவர்கள் நித்தியபடி ஜபங்கள், பாராயணங்கள் இவற்றை சிறப்பாகச் செய்து, அனைவரும் நாம ஜபத்தையும் செய்து
அச்சுதானந்த கோவிந்தா
பாலம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதி ச
ஜபேத் நாமத்ரயம் நித்யம் மகாரோக நிவாரணம்
இதுபோன்று சுலபமாக இருக்கக்கூடிய, இந்த நேரத்திலே விசேஷமாக பாராயணம் செய்யக் கூடிய பகவன் நாமாக்களையெல்லாம் பாராயணம் செய்து, நவக்ரக தேவதைகள் ; இந்த வருஷப் பிறப்பு தினத்திலே, கோள்கள், நவக்கிரக சஞ்சாரங்கள் என்பது நமக்கு நல்ல பலன்களையே அளிக்க வேண்டும் என்கிற -அவை நல்ல நல்ல என்கிற பிரார்த்தனையோடு, அதே சமயத்திலே, இந்த சந்தர்ப்பத்திலே செய்ய வேண்டிய, செய்யக் கூடிய பொதுக் காரியங்களையும், அல்லது குடும்பத்தின் நிகழ்ச்சிகளிலேயும் வைதீகத்திற்கும், பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, தோண்டும் செய்து, தொடர்ந்தும் செய்து, செய்யும் பொது ரொம்பவும் அத்தியாவசமானதிற்கு முக்கியத்துவம் கொடுத்து, நல்ல முறையிலே அன்புடனும், அன்யோன்யமாகவும், மக்கள் இந்த சமயத்திலே, தேச பக்தியுடனும், தெய்வ பக்தியுடனும்,சமுதாய விழிப்புணர்வுடனும், இந்த இன்னல்களில் இருந்து மீண்டு, மீண்டும் சிறப்பான காரியங்கள் செய்வதற்கான பிரார்த்தனைகளையும் பிரயர்த்தனைகளையும் செய்ய வேண்டும்.
आरोग्यं प्रददातु नो दिनकरः चन्द्रो यशो निर्मलं
भूतिं भुमिसुतः सुधांशुतनयःप्रज्ञां गुरुर्गौरवम्|
काव्यःकोमलवाग्विलसमतुलं मन्दोमुदं सर्वदा
रहुर्बाहुबलं विरोधशमनं केतुः कुलस्योन्नतिम्||
ஆரோக்கியம் பிரததாத் தோ தினகர: -அந்த சூரியனானவர் ஆரோக்கியத்தை அளிக்கட்டும்.
சந்திரோ யசோ நிர்மலம் -அப்பேர்பட்ட பொருளை சந்திரன் அளிக்கட்டும்.
பூதிம் பூதிசுத: -ஐஸ்வரியத்தை செவ்வாய் கிரகமானது அளிக்கட்டும்.
சுதாம்சு தனயக- குரு கெளரவம் -அந்த சந்திரனுடைய , பூதியை அளிக்கட்டும்
பிரக்னான் குரு: நல்ல புத்தி சக்தியை பிரகஸ்பதி பகவான் குரு அளிக்கட்டும்.
கெளரவம் காவ்யஹா -நல்ல மதிப்பை குரு வைக்கட்டம்.
நல்லதையே பேசுவோம், நல்லதையே நினைக்கட்டும் என்ற விதத்திலே, மனதிற்கு கல்மிஷத்தை ஏற்ப்படுத்தாத , நல்ல வாக் விலாசத்தை,நல்ல பேச்சுகளை , நல்ல திறமைகளை சுகம் அளிக்கட்டும். சனீஸ்வர தேவதா கிரகம் எப்பொழுதும் சந்தோஷத்தை அளிக்கட்டும். ராகு பாகு பலம் -உடலிலே நமக்கு எதிர்ப்பு சக்திகளை , ஆரோக்கியத்தை ராகு அளிக்கட்டும். நமக்கு முன்னேற்றங்களுக்குத் தடையாய் இருக்கக்கூடிய ச்ரமங்களை நீக்கி ராகுவானவர் பலத்தை அளிக்கட்டும். கேதுவானவர் நமது குலத்திற்கு, நமது தேசத்திற்கு வளர்ச்சியை, மேன்மையை அளிக்கட்டும். இது போன்ற நல்ல பிரார்த்தனைகள் எல்லாம் குரு பக்தியோடு சேர்ந்து இந்த வருஷப் பிறப்பு பண்டிகையை சிறப்பாகச் செய்து , காஞ்சீபுரத்திலேயும், அனுஷ்டான மண்டபத்திலே அங்கேயும், வழக்கமாகச் செய்வது போல், நாளையும், அந்த விஷு தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். ஆகவே பக்தர்கள் அனைவரும், இந்த புத்தாண்டை நல்ல பக்தி ச்ரத்தையுடன் கொண்டாடி , அந்த குருவனுடுன் அனுக்ரகத்தினுடன். தேவதைகளுடன் அனுக்ரகத்துடன், மேன்மேலும் நல்ல பணிகளிலே ஈடுபடுவதற்கான நல்ல சக்தியை, அம்பாள் அனுக்க்ரகத்தோடு பெற்று மேன்மேலும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதகே
சரணே த்ரயம்பிகே தேவி
நாராயணி நமோஸ்துதே
ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர
Categories: Announcements, Periyava TV, Upanyasam
Leave a Reply