101.1. Sri Sankara Charitham by Maha Periyava – Brahmins of the early Tamilnadu; Tamil in Kerala

Jaya Jaya Sankara Hara Hara Sankara –  How did Kerala come into existence, especially the Namboodris there? Sri Periyava’s evocative explanation continues.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for great pictorial representation of the chapter and audio. Rama Rama


ஆதித் தமிழகத்தின் அந்தணர்கள்
; கேரளத்தில் தமிழ்

சோழ தேசத்திலிருந்து சோழியர்கள் எனப்படும் ப்ராம்மணர்களை அழைத்து வந்து அங்கே அமர்த்தினார். இந்தச் சோழியர்கள் ஆதிகாலத்திலிருந்தே தமிழ் நாட்டைச் சேர்ந்த, தமிழ் மக்களாகவே இருந்த, ப்ராம்மணர்கள். த்ராவிட ப்ராம்மணர்கள். த்ராவிடரும் ப்ராம்மணரும் சத்ரு ஜாதிகள் இல்லை! த்ராவிட ஜாதி என்றும் ஒன்று இல்லை. த்ராவிட தேசம்தான் உண்டு. அதில் வஸித்து வரும் ப்ராம்மணர் உள்பட எல்லாரும் த்ராவிடர்கள்தான். த்ராவிட தேசத்திலிருந்து வடதேசத்துக்குப் போய் ஸெட்டில் ஆன  ப்ராம்மணர்களுக்கே இன்றைக்கும் வடக்கே ‘த்ராவிட்‘ என்ற பெயர் இருக்கிறது! இப்படி ஆதியிலிருந்தே தமிழ் ஜனங்களாக இருந்தவர்கள் தான் சோழிய ப்ராம்மணர்கள். அப்புறம் வடக்கிலிருந்தும் பல ப்ராம்மணர்கள் இங்கு வந்தார்கள். ‘வடமர்’ என்று அவர்களுக்கே பேர். (கைபர் கணவாய் வழியாக என்றைக்குமே எவருமே வரவில்லை! பாரத தேசத்துக்குள்ளேயேதான் ராஜ்யத்துக்கு ராஜ்யம் இடம் மாறுவது). ‘வடமர்’ என்று ப்ராம்மணரில் ஒரு பிரிவை மட்டும் சொல்வதாலேயே மற்றவர்கள் என்றைக்குமே ‘தென்னவர்’களாக இருந்தவர்கள்தான் என்று ஆகிறதல்லவா?

பாரத தேசம் முழுதும் ஆதியிலிருந்து ஒரே இனம்தான். ஆர்ய த்ராவிட இன பேதம் வெள்ளைக்காரன் divide and rule-ல் (பிரித்து ஆள்வதில்) கதை கட்டிவிட்டது. அந்தக் கதையை நிஜம் என்றும், நிஜமான நம்முடைய சாஸ்த்ர, புராணங்களில் இருப்பதைக் கட்டுக் கதை என்றும் எண்ணி வருகிறோம்! இது இருக்கட்டும்.

தமிழ்நாட்டு ப்ராம்மணர்கள் ஸுகஜீவிகள். வடக்கே போகப் போகக் குளிர், வெய்யில் இரண்டும் ஜாஸ்தி. மேற்கே கர்நாடகத்துக்குப் போனால்கூட ஒரே மலைத் தொடராயிருப்பதால் சீதோஷ்ணம் கடுமைதான். தமிழ் நாடு மாதிரி மித சீதோஷ்ணம் அங்கேயெல்லாம் இல்லை. அதனால் மற்ற சீமை ஜனங்கள் கஷ்டங்களுக்கு அதிகம் பயப்பட மாட்டார்கள், ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொள்வார்கள். தமிழ்நாட்டு ப்ராம்மணர்கள் அப்படியில்லை.

நான் சொல்வது பழங்கால ஸமாசாரம். தற்போது தமிழ்நாட்டில் ப்ராம்மணனைத் தீண்டாதானாகப் பண்ணி ஒதுக்கியிருப்பதிலும், இவனுக்கும் ப்ராம்மண தர்மத்திற்கு அடியோடு வித்யாஸமாக ஒரே பேராசை பிடித்துப் போயிருப்பதிலும் எந்த ஸஹாராவானாலும், ஐஸ்லாண்டானாலும் போய் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொண்டு விடுகிறான்!

அந்தப் பூர்வ காலத்தில் ஸுகஜீவிகளாகக் காவேரி தீரத்திலிருந்த சோழியர்கள் மலையாளத்துக்குப் போனார்களா? அங்கே ஓயா மழையும், சகதியும், குறுக்கே குறுக்கே கழியுமாக (ஓடையுமாக) இருந்தது அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. கோபக்காரர் என்று பேர் வாங்கின பரசுராமரிடம் சொல்லவும் பயம். அதனால் ரஹஸ்யமாகத்  திரும்பி ஓடிவந்துவிடலாமென்று  நினைத்தார்கள்.

இவர்கள் இப்படி நினைப்பார்களென்று அவருக்கும் தெரியும். அதனால் என்ன நினைத்தாரென்றால், ‘இவர்களுடைய ஆசாரங்களில் எதையாவது ஒன்றை மாற்றி விடுவோம். அப்படிச் செய்துவிட்டால் இவர்கள் தாய்ச் சீமைக்குத் திரும்பிபோனால் அங்கே இருப்பவர்களுடன் கலந்து வாழ முடியாமல் போய்விடும். வேறு வழியில்லாமல் இங்கேயே இருந்து விடுவார்கள்’ என்று நினைத்தார். ஆகையால் அவர்கள் குடுமியைப் பின்பக்கம் முடிந்து கொள்ளாமல் தலை உச்சியில் சேர்த்து ‘ஊர்த்வசிகா’ என்பதாக முடிந்து கொள்ளும்படிப் பண்ணினார். இன்றைக்கும் நம்பூதிரிகள் அந்த வழக்கத்தைத்தான் பின்பற்றுகிறார்கள்.

ஆனால், ‘இந்த ஒரு வித்யாஸம் மட்டும் சோழ தேச ஜனஸமூஹம் தங்களை ஒதுக்கிவிடும்படிப் பண்ணி விடாது. முக்யமான அநுஷ்டானங்களில் வித்யாஸமில்லாதபோது சிகை எப்படியிருக்கிறதென்பதைக் கொண்டு மாத்ரம் யாரும் நம்மைத் தள்ளிவிட மாட்டார்கள்’ என்று அந்த ப்ராம்மணர்கள் நினைத்தார்கள். அதனால் அவர்களில் ரொம்பப் பேர் ஊர்த்வ சிகையுடனேயே சோழ தேசத்துக்குத் திரும்பி விட்டார்கள். அவர்கள் நினைத்தது போலவே ஜனஸமூஹமும் அவர்களை ப்ரியமாக வரவேற்று வைத்துக் கொண்டது. அந்த ப்ராம்மணர்களின் பரம்பரைக்கு உச்சிக் குடுமியே தங்கிவிட்டது. ‘சோழியன் சிண்டு சும்மா ஆடாது’ என்று அப்புறம் அதை வைத்துப் பழமொழிகூட வந்துவிட்டது!

‘இதென்னடா, இப்படியாகிவிட்டதே!’ என்று பரசுராமர் பார்த்தார். இனிமேல் தமிழ்நாட்டு ப்ராம்மணர்களிடம் போகவேண்டாமென்று, தெலுங்கு நாட்டிலும் கன்னட நாட்டிலும் உள்ள கல்வி – கேள்விகளில் வல்லவர்களான ப்ராம்மணர்களை அழைத்துக் கொண்டு போய் மலையாளத்தில் அமர்த்தினார். தமிழ்நாட்டு ஸுகஜீவிகளைப் போல அவர்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியாமல் திரும்ப ஓடிவிடமாட்டார்களென்று அவருக்கு நம்பிக்கை இருந்தாலும் முன்ஜாக்ரதையாக இன்னொன்றும் செய்தார்- ‘ப்ராம்மணனுக்கு 108 ஆசாரங்கள் இருக்கின்றன. முன்பு அதில் ஒன்றை மட்டும் மாற்றியதால்தான் நம்முடைய திட்டம் தோற்றுப் போயிற்று. இப்போது 108-ல் பேர் பாதிக்கும் மேலே, 64 ஆசாரங்களை இந்த ஆந்திர-கர்நாடக ப்ராம்மணர்கள் விஷயத்தில் மாற்றி விடுவோம். அப்போது இவர்கள் நிச்சயமாக ஊருக்குத் திரும்பிப்போய்க் கலந்து வாழ முடியாது’ என்று தீர்மானம் செய்து அப்படியே மாற்றிக் கொடுத்து விட்டார்.

அவர் ஆசைப்பட்டபடியே அந்த ப்ராம்மணர்கள் அங்கேயே வம்சாவளியாகத் தங்கி அத்யயனம், கர்மாநுஷ்டானம் எல்லாம் சிறப்பாகச் செய்யலானார்கள்.

அவர்களைத்தான் நம்பூதிரிகள் என்று சொல்வது.

மலையாள தேசத்தின் தோற்றுவாயைப் பற்றிக் கூறுவதாகக் ‘கேரளோத்பத்தி’ என்று புஸ்தகம் இருக்கிறது. சில புராணங்களிலும் இந்த ஸமாசாரம் வருகிறது. அவற்றிலிருந்துதான் கதை சொன்னேன்.

நம்பூதிரிகளில் சோழியர்கள் கொஞ்சம் பேரே மிச்சமிருந்தார்கள். பாக்கியெல்லாம் தெலுங்கு ப்ராம்மணர்களும், கன்னட ப்ராம்மணர்களுந்தான். தெலுங்கில் ‘இல்லு’ என்றால் வீடு. கன்னடத்தில் ‘மன’ என்றால் வீடு. தமிழில் இல்லம், மனை என்று இரண்டு வார்த்தைகளும் இருக்கின்றன. நம்பூதிரிமார்களில் சிலர் தங்களைக் குறிப்பிட்ட ஒரு ‘மனா’வைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் தாங்கள் குறிப்பிட்டதொரு ‘இல்ல’த்தைச் சேர்ந்தவர்களென்றும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆசார்யாளின் குடும்பத்திற்கு ‘கைப்பள்ளி மனா’ என்று பேர் என்கிறார்கள்.

‘இல்லம்’ சொல்லிக் கொள்ளும் நம்பூதிரிகள் ஆந்திர தேசத்திலிருந்து வந்தவர்களென்றும், ‘மனா’ சொல்லிக் கொள்பவர்கள் கர்நாடகத்திலிருந்து வந்தவர்களென்றும் பொதுவாகக் கொள்ளலாமென்றும், ஆதித் தமிழ்ச் சோழியர்களின் வந்தவர்களிலும் கொஞ்சம் பேராவது நம்பூதிரிமார்களில் இருந்து, இந்த இரண்டில் ஏதோ ஒரு பிரிவில் வந்திருப்பார்களென்று நினைக்க இடமிருக்கிறது. ஆசார்யாளின் ‘மனா’வும் அப்படித் தமிழ் தேசத்திலிருந்து போனதாகவே இருக்கக்கூடும் என்று நான் பண்ணியுள்ள ‘ரிஸர்ச்’. அப்புறம் சொல்கிறேன்.

ஒரு கேள்வி வரலாம்: ‘கன்னட-தெலுங்கு ப்ராம்மணர்களே நம்பூதிரிகளில் பெரும்பாலோர்; அது தவிர ஏதோ அரபிக்கடல் தீவுகளில் ஆதிவாஸிகளின் பாஷைகளைப் பேசி வந்த செம்படவர்கள்தான் மலையாளத்தில் குடியேறியவர்கள் என்றால் அங்கே உள்ள மலையாள பாஷை எப்படிப் பாதித் தமிழ், பாதி ஸம்ஸ்க்ருதம் கலந்ததாக இருக்கிறது?’ என்று கேட்கலாம்.

மலையாள பாஷை ஆயிரம், ஆயிரத்திருநூறு வருஷம் முந்தித் தோன்றியதுதான்; அதற்கு முன்னால் அங்கே தமிழேதான் இருந்தது என்று தெரிந்தவர்களும் ‘அதெப்படி தமிழே அங்கேயிருந்திருக்க முடியும்?’ என்று கேட்கலாம்.

சொல்கிறேன்: ப்ராம்மணர்களையும் செம்படவர்களையும் மட்டும் கொண்டதாக எங்கேயாவது ஒரு ஜன ஸமூஹம் ஜீவிக்க முடியுமா? தேசத்தைக் கட்டி ஆண்டு பாதுகாக்க ராஜா-ஸைன்யம்; வியவஸாயம், மற்றும் பலவிதமான உடலுழைப்புச் செய்பவர்கள்; வியாபாரம் நடத்துபவர்கள் — ஆகியவர்களில்லாமல் எப்படி ஸமுதாய வாழ்வு ஏற்பட முடியும்? இந்தக் கார்யங்களைச் செய்ய மலையாளத்துக்குப் போய்ச் சேர்ந்தவர்கள் யாரென்றால் தமிழ் ஜனங்கள்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அந்தப் பக்கம் மலையாள தேசமென்றால் இந்தப் பக்கம் பெரும்பாலும் தமிழ்நாடுதானே? அதோடு அந்தக் காலத்திலேயே தமிழர்கள் உன்னதமான நாகரிகம் பெற்றவர்களாகவும், வீர ஸாஹஸமுள்ளவர்களாகவும், வாணிபம் முதலியவற்றில் திறமை மிக்கவர்களாகவும் இருந்தார்கள். நான் தமிழ்நாட்டு ஸுகஜீவிகள் என்று சொன்னது [சிரித்து] ‘பருப்புத் தின்னிப் பார்ப்பானை’த்தான்! மற்றவர்கள் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய நல்ல உழைப்பாளிகளாகவும், த்ருடசாலிகளாகவும் இருந்தவர்களே! அதனால் பிராமணரல்லாதாரில் தமிழர்கள் தான் மலையாள நாட்டில் குடியேறியவர்கள். பொருளாதார ரீதியில் நல்ல விலை போவதாகவும், ஏற்றுமதிகள் செய்து நன்றாகக் கொழிக்க வைப்பதாகவும் உள்ள மிளகு, ஏலக்காய், தேக்கு, கொப்பரை முதலியவை யதேஷ்டமாகக் கிடைக்கும் தேசம் மலையாளம். ‘அந்நிய பதார்த்தம்’ சாப்பிடக் கூடியவர்களுக்கு நீண்ட ஸமுத்ரக் கரையிலும், தடுக்கி விழுந்தால் வரும் கழிகளிலும் ஸம்ருத்தியாக ‘ஜல புஷ்பம்’ (மத்ஸ்யம்) கிடைக்கும். இப்படியிருந்தால் உழைப்பாளிகளாகவும், ஸாஹஸ குணமுள்ளவர்களாகவும் உள்ள ஜனங்கள் வந்து குடியேறுவார்கள்தானே? அப்படித்தான் ஏற்பட்டது. நிறையத் தமிழ் மக்கள் கேரளத்தில் குடியேறினார்கள்.

இப்படி எல்லா ஜாதியாரும் குடியேறியபின், மலையாளத்தின் இயற்கை வளத்தினால் ஸுபிக்ஷமான வாழ்க்கை ஏற்பட்டு, அது நாகரிக ஸமுதாயமாக உருவாக ஆரம்பித்தது. வைதிக வழிகளைப் பின்பற்றிய தமிழ் மன்னர்களான சேரர்கள் அந்த ப்ரதேசத்தில் ஆட்சி நடத்தி நன்றாக நாகரிக அபிவ்ருத்தி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

பெரும்பாலான மக்கள் தமிழர்களாயிருந்ததால் தமிழே அங்கேயும் பாஷையாயிற்று. ஆந்த்ர-கர்நாடக நம்பூதிரிகளும் பொதுஜனத் தொடர்பினால் தமிழே கற்றுக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

_____________________________________________________________________________________________________________________________

Brahmins of the early Tamilnadu; Tamil in Kerala

He [Parasurama] brought Brahmins known as Chozhiyas from the Chola kingdom and made them reside there.  These Chozhias were Brahmins, who belonged to Tamil Nadu right from the beginning and were Tamil people.  They were Dravidian Brahmins.  Dravidians and Brahmins are not rival social groups!  There is nothing as Dravidian caste.  There is only a Dravidian state.  All the people who reside in that state – including Brahmins – are Dravidians.  Brahmins who migrated from the Dravidian state and settled in the north have the name ‘Dravid’ even now!  Chozhia Brahmins were thus Tamil Brahmins right from the beginning.  Subsequently, Brahmins from the north came here.  They are called ‘Vadamas’.  (No one ever came through the Khyber Pass at any point of time! Migration of people happened only within Bharat – from one state to another).  Since one division of the Brahmins alone is referred to as ‘Vadamas’, is it not evident that the rest were obviously ‘Thennavar’? (from the South).

Right from the beginning there was only one race in the entire country of Bharat.  The Aryan-Dravidian division is a story concocted by the British under the ‘Divide and Rule’ policy (dividing the people to gain control over them).  We believe it to be true, and think that the true facts mentioned in our Sastras and Puranas are imaginary tales!  Let this be.

Brahmins of Tamil Nadu are comfort-lovers [सुखजीवी].  As one goes towards north, both heat and cold are severe.  Even if we go west towards Karnataka, the climate is harsh due to the presence of mountain ranges. In those places the climate is not moderate like in Tamil Nadu.  Therefore, people of other places are not much afraid of hardship.  They ‘adjust’.  Tamil Nadu Brahmins are not like that.

What I am saying pertains to older times.  In the present circumstances, where a Brahmin is treated as an outcaste in Tamil Nadu and counting the fact that he has become extremely greedy for money – which is in total contradiction to his prescribed conduct –  he ‘adjusts’ himself everywhere,  be it Sahara or Iceland!

The Chozhias – the comfort-loving beings – moved from the banks of Cauvery to Malayalam.  The incessant rains, [the resultant] mire and the numerous rivulets criss-crossing the land was not compatible to them.  They were also scared to talk to Parasurama, who had earned the name of being ferocious.  So, they thought they should escape secretly.

He [Parasurama] also knew that these people would think on these lines. He thought “Let us change one of their traditional rules of conduct.  If that is done, even if they consider returning to their motherland, they will not be able to mingle and live with the inhabitants there; they will have no other option but to stay here”.  Therefore, he made them wear the tuft as ‘Urdhvashikha’ [ऊर्ध्वशिखा] – the hair tied up not in the rear but at the top of the head.  Even today, Namboodris follow this practice.

However, the Brahmins thought ‘This difference alone will not make the Chola people distance themselves from us. When there is no difference in the important religious practices, we will not be isolated based only on how the tuft is’.  So, many of them returned to Chola state with the Urdhvashikha itself. As anticipated, the community also received them with affection and retained them.  The tuft at the top of the head came to stay that way permanently for these Brahmins.  Referring to that, even a proverb has evolved saying ‘The tuft of a Chozhian, will not sway without reason’!  (“Chozhiyan sindu summaa aadaathu”).

Parasurama was concerned that things happened this way.  Deciding not to approach Brahmins from Tamil Nadu, he brought Brahmins who were well versed in knowledge and religious rituals from Telugu and Kannada regions and made them settle in Malayalam.  Although he had the confidence that these people will not run away like the comfort-loving ones of Tamil Nadu, he did one more thing as a matter of abundant caution.  He thought, ‘There are 108 rules of conduct for a Brahmin.  My earlier plan did not work out because I altered only one of the 108.  Let me now change more than half of them – 64 out of the 108 – in respect of these Andhra-Karnataka Brahmins.  Then, they will certainly not be able to return to their native places and live there’ – and also made those changes.

As  desired by him, those Brahmins continued to stay there for generations and carried out the study of Vedas [अध्ययनम्], observance of prescribed religious practices [कर्मानुष्ठानम्], etc. in an exemplary manner.

They are the Namboodris.

There is a book called, ‘Keralotpatti’ [केरळोत्पत्ति] that describes the origin of the state of Malayalam.  This matter finds a mention in some Puranas also.  I narrated the story only from them.

Among Namboodris, only a few Chozhias remained.  All the rest were only Telugu Brahmins and Kannada Brahmins.  In Telugu ‘Illu’ means house.  In Kannada, ‘Mana’ means house. Tamil has both the words Illam and Manai. Some Namboodris claim that they belong to a particular ‘Mana’ and some others say they belong to a particular ‘Illam’.  The name of Acharya’s family is said to be ‘Kaipalli Mana’.

Though in general, we can assume that Namboodris who associate with the name ‘Illam’ are from Andhra Pradesh and those who associate with the name ‘Mana’ are from Karnataka, there is scope to think that at least some people who came from the ancient Tamil Chozhiya group would have stayed back as Namboodris and become a part of either of these two categories.  I will tell later about the research I have done by which I feel that Acharya’s Mana would have originated only from the Tamil state.

One question may arise: “If majority of the Namboodris were Kannada-Telugu Brahmins and if the others who settled down in the Malayala state were fishermen speaking tribal languages from islands in the Arabian sea, how is it that Malayalam language happens to be a mixture of part Tamil and part Sanskrit”?

The language of Malayalam has come about only a thousand or a thousand two hundred years earlier; Even people who know that only Tamil was there even before, can ask, ‘How is it that Tamil was there?’

Let me explain.  Can a community comprising only of Brahmins and fishermen survive in a place?  How can a society exist without a king’s army to protect the state, or people who engage in activities involving labour like farming, or people who engage in trade and commerce?  The people who went to Malayalam to do all these jobs were the Tamil people.

If the other side of the Western Ghats range is Malayalam, it is mostly Tamil Nadu on this side isn’t it?  Moreover, even in those days, Tamil people were highly civilised, endowed with great valour and bravery and very competent in trade, commerce etc.  The comfort-loving Tamils I mentioned [earlier] was (laughing) only about the ‘Dal [lentil] eating Brahmins’!  Others were quite hard working and strong, and could endure hardship!  So the non-Brahmins who settled down in Malayalam were also Tamil people. On the economic front, Kerala is a region where pepper, cardamom, teak, coconut, etc. are available in plenty; they command very good prices and exporting them is highly profitable.  For people who consume the ‘other food’, ‘jala pushpam’ [जल-पुष्पम् – fish] is available in plenty in the seas and in the large number of canals one encounters everywhere. Under such circumstances, wouldn’t the people who work hard and who have great valour, come and settle down there? That is how it happened.  Many of the Tamil people settled down in Kerala.

Once the people from all castes had settled down, life became prosperous due to the natural resources and the society started evolving into a civilised one.  Cheras, the Tamil kings who followed the Vedic ways, ruled that region and greatly helped in the development of the civilisation.

As most of the people were Tamilians, Tamil became the language there.  The Andhra-Karnataka Namboodris also started talking in Tamil, having learnt it due to their interaction with the general public.

_____________________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. jAYA jAYA SANKARA HARA HARA SANKARA SARANAM SARANAM.
    JANAKIRAMAN. NAGAPATTINAM

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading