Jaya Jaya Sankara Hara Hara Sankara – Who helped our Bhagawathpadhal in his mission of Vaideeka Dharma Samsthapanam? Sri Periyava answers.
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another divine drawing and audio. Rama Rama
இந்திரன், ஸரஸ்வதி அவதாரங்கள்: அரசு ஸஹாயமின்றியே ஆசார்யாள் பணி
குமாரில பட்டருக்கு ஸஹாயம் செய்வதற்கே இந்த்ரன் ஸுதன்வா என்ற பெயரில் ஒரு ராஜாவாக பூலோகத்தில் பிறந்தானென்று சில புஸ்தகங்களில் இருக்கிறது. யஜ்ஞ கர்மாநுஷ்டானம் தேவர்களின் ப்ரீதிக்கானது என்றால், தேவராஜனான இந்த்ரன் அதைப் புத்துயிரூட்டுபவருக்கு ஸஹாயம் செய்யப்போவது இயற்கைதானே?
இன்னொரு விஷயமும் சொல்லிவிட வேண்டும். குமாரில பட்டர் ஏதோ ஓரளவுக்கு ராஜ ஸஹாயத்தினால் பௌத்தர்களை ஜயித்திருப்பாராயிருந்தாலும், நம்முடைய ஆசார்யாள் அரச பலம் என்பதே கொஞ்சங்கூட இல்லாமல், தம்முடைய அறிவு பலத்தாலும், அநுபவ பலத்தாலும் மட்டுமேதான் வேதாந்தத்துக்கு ஜயம் பெற்றுக் கொடுத்தார். பௌத்த – ஜைன மதங்கள் பெரும்பாலும் ராஜபலத்தில் பரவினவை தான். அப்புறம் மறுபடி வைதிகத்துக்குத் திருப்பும்போதும் அப்பர், ஞான ஸம்பந்தர் ஆகியோர் அப்போதிருந்த பல்லவ, பாண்டிய ராஜாக்களை முதலில் மாற்றியதிலேயே ராஜ்யம் பூராவும் மாறிற்று என்று பார்க்கிறோம். ஆசார்யாள் சரித்ரத்தில் அப்படி எதுவுமில்லை. அவர் நாளில் பெரிய பெரிய ராஜாக்களே இல்லை. அக்காலத்தில் சக்ரவர்த்தியாக எவனும் இருந்து வர்ணாச்ரம தர்மங்களைப் பரிபாலனம் பண்ணாததாலேயே ஸமூஹ ஒழுங்கு முறைகள் கெட்டுப் போயிருந்ததற்கு ஸூத்ர பாஷ்யத்திலேயே ‘ரெஃப்ரன்ஸ்’ இருக்கிறது.1
மற்ற தேவர்கள் ஈச்வராவதாரத்துக்கு ஸஹாயம் பண்ணவும் ஸேவை பண்ணவும் மநுஷ லோகத்துக்கு வரும் போது தேவராஜா வராமலிருக்கலாமா? அதற்காக அவனுக்கும் ஒரு சின்ன ‘பார்ட்’ கொடுத்தாற்போலிருக்கிறது! ஆசார்யாளுக்குப் பெரிய ஸஹாயம் பண்ணிய குமாரில பட்டருக்கு அவன் கொஞ்சம் ஸஹாயம் பண்ணினான்.2
பிறருடைய பெரிய ஸஹாயம் கிடைத்தே கார்யம் முடிக்க முடிகிறது என்றால் அது அவதாரத்துக்குக் குறைவு தானே? அதனால்தான் போலிருக்கிறது, ஆசார்யாளுக்கு பௌத்த நிராகரணத்தில் ரொம்ப ஸஹாயம் செய்த குமாரில பட்டரும் மண்டனமிச்ரருமே வேதாந்தத்தையும் ஒரே கண்டனமாகப் பண்ணி, இதற்கு எதிர்க் கண்டனம் ஆசார்யாள் ஒருத்தரே எவர் ஸஹாயமுமில்லாமல் முழுக்கப் பண்ணி அவர்களை ஜயித்து அவதாரத்தின் பெரிய சக்தியைக் காட்டும்படி ஏற்பட்டிருக்கிறது!
இந்த இரண்டு பேரிலுங்கூட ஆசார்யாள் குமாரில பட்டரிடம் அதிகம் வாதப்போர் செய்ய வேண்டியிருக்கவில்லை. அவருடைய தேஹ வியோக ஸமயத்தில்தான் ஆசார்யாள் அவரை ஸந்தித்ததே. மண்டன மிச்ரருடன் தான் 21 நாள் விடாமல் வாதப் போர் நடத்தி ஜயித்தார்.
குமாரில பட்டர் பெரிய க்ரந்த கர்த்தாவாகவும், மண்டன மிச்ரர் பெரிய அநுஷ்டான கர்த்தாவாகவும் இருந்தார்கள். கர்மாநுஷ்டானம் நிறையப் பண்ண வேண்டுமென்றால் க்ருஹஸ்தராகத்தான் இருக்க வேண்டும். அப்போது பத்னி இருந்துதானே ஆகணும்? அதனால்தான் ப்ரம்மா மண்டன மிச்ரராக வந்தபோது ஸரஸ்வதியும் ஸரஸவாணி என்ற பெயரில் அவதரித்து அவருக்குப் பத்னியானாள்.
இன்னொரு காரணமும் உண்டு. அறிவுக் கடலாக, ஸர்வஜ்ஞராக ஆசார்யாள் இருந்து காட்ட வேண்டியிருந்தது. அவரைப் பரீக்ஷித்துப் பார்த்து அவர் ஸர்வஜ்ஞர் என்று தீர்ப்புக் கொடுக்க ஒருத்தர் இருக்க வேண்டுமல்லவா? யார் அப்படி இருக்க முடியும்? அறிவுத் தெய்வமான, வித்யாதி தேவதையான ஸரஸ்வதிதானே? அதனாலும் அவள் அவதரிக்க வேண்டியிருந்தது.
குமாரில — மண்டனர்கள் பிறந்து பெருமளவு பௌத்த நிராகரணம் செய்த பின்னரே ஆசார்யாள் அவதரித்தது.
அதாவது தேவர்கள் வந்து ப்ரார்த்தித்துக் கொண்ட பிறகும் ஸுமார் ஐம்பது வருஷம் தள்ளியே ஸ்வாமி அவதரித்திருக்க வேண்டும். நன்றாகப் பசித்துச் சாதம் போட்டால்தான் முழு ஸத்தும் உடம்பில் ஒட்டும் என்கிற மாதிரி நன்றாகக் காக்க வைத்து அவதாரம் பண்ணினார் போலிருக்கிறது!
தேவர்கள் கொடுக்க வேண்டிய ‘பெடிஷன்’ வந்தாகிவிட்டது! யோக்யதாம்சமுள்ள ஒரு தம்பதி அவதார புத்ரனைப் பெறுவதற்குக் கொடுக்க வேண்டிய பெடிஷனும் அப்புறம் வந்தது.
‘அவதார புத்ரனுக்கு அப்பா அம்மாவான அந்தப் புண்யசாலிகள் யார்? பரம புண்யமான அவதாரம் எப்படி ஏற்பட்டது? எந்தப் புண்யகாலத்தில், எந்த தேசத்தில், எந்த ஊரில் நடந்தது?’ — பார்ப்போம்.
____________________________________________________________________________________________________________________________
1 I.3.3.33
2 க்ரகசன் என்ற காபாலிகன் பெரிய கோஷ்டி சேர்த்துக் கொண்டு ஆசார்யாளைப் பரிவாரத்தோடு அழிப்பதற்கு வந்தான்; அப்போது எதிர்த்தாக்குதல் நடத்த மன்னன் ஸுதன்வன் வந்தான்; ஆயினும் ஆச்சார்யாள் ஒரு ஹூங்காரம் செய்தே அக்காபாலிகர்களை விரட்டி விட்டார் என்று ஒரு நிகழ்ச்சி மாதவீய சங்கர விஜயத்தில் காண்கிறது.
_______________________________________________________________________________________________________________________________
Incarnations of Indra & Saraswati: Acharya’s mission completed without help from any king
It is mentioned in some books that Indra was born on the earth as a king by the name Sudhanva [सुधन्वा], to only render assistance to Kumarila Bhatta [कुमारिल भट्टः]. If the duty of performing holy sacrifices is done for satisfying the Devas, then is it not natural that the king of Devas should himself come and help the person who is giving a new life to that tradition?
One more thing should also be mentioned. While Kumarila Bhatta might have conquered the Buddhists with some amount of royal help, our Acharya secured victory for Vedanta only on the strength of his own intellect and experiences, and without the help of the state, even to a little extent. The religions of Buddhism and Jainism had spread, predominantly with the strength of royalty. We see that later on, people came back to the Vedic path; it happened because Appar, Jnanasambandhar et al. initially converted the Pallava kings and Pandya kings of those times, due to which the entire kingdoms returned to Vedic ways. There is no such thing in the history of Acharya. There were no great kings during his days. There is indeed, a reference in the explanatory commentary on Sutras (सूत्र भाष्यम्) itself that the systems and order among the masses had actually degraded during those days, mainly because there was no emperor, who could regulate the caste order!1 (वर्णाश्रम धर्मः)
When other Devas came down to the human world to assist and render service to the incarnation of Eswara, can the king of Devas remain absent? It appears that he was also given a small part! He rendered help to a small extent to Kumarila Bhatta, who had rendered great service to Acharya.2
Would it not be a shortcoming for an incarnation if it happened that its purpose could be accomplished only with huge support from others? Probably, that is why, it looks like that Kumarila Bhatta and Mandana Mishra [मण्डन मिश्र:] – who greatly helped Acharya in expelling Buddhism had also condemned the Vedanta vehemently; and Acharya, had to carry out the entire counter attack single-handedly – without any help – and won them over, thereby demonstrating the full strength of the incarnation!
Even between these two, Acharya did not have to engage much in debate with Kumarila Bhatta. It was when Kumarila Bhatta was about to give up his life that Acharya actually met him. It was with Mandana Mishra that he ceaselessly carried out the war of words for 21 days, and won.
While Kumarila Bhatta was a renowned author of books [ग्रन्थकर्ता], Mandana Mishra was well-known for his religious observances [अनुष्ठान-कर्ता]. To carry out the prescribed duties [कर्मानुष्ठानम्] extensively, one has to be a householder [गृहस्थः]. Then there should be a wife, isn’t it? That is why, when Brahma came as Mandana Mishra, Saraswati also was born as Sarasavani [सरसवाणी] and became his wife.
There is one more reason. Acharya had to demonstrate that he was an ocean of knowledge and an all-knowing person [सर्वज्ञः]. So there had to be a person who would test him and pronounce the judgement that he was indeed all-knowing. Who could that be? Can it be anyone other than Saraswati – the Goddess of knowledge and education? On account of this also, she had to incarnate.
Acharya’s incarnation took place only after Kumarila and Mandana were born and had driven away Buddhism to a large extent.
That is, Swamy must have incarnated only about fifty years after the Devas appealed to Him. Just as full nourishment will be absorbed by the body only if food is served when the person is very hungry, He [Swamy] made them wait for a long time and then incarnated!
The ‘petition’ to be given by the Devas had reached! The petition from the couple who had the deserving characteristics to beget the incarnate, was also received later.
‘Who were the fortunate ones who would be the father and mother to the incarnate? How did that most sacred incarnation take place? During which holy period, in which state and place did it happen?’ – Let us see.
_____________________________________________________________________________________
1 I.3.3.33
2 There is an event described in Maadhaveeya Shankara Vijayam [माधवीय शंकर् विजयम्], where a Kaapalika [कापालिकः] by the name Krakacha [क्रकच] came with his huge group to annihilate Acharya; At that time Sudhanva came there to carry out the counter attack; Notwithstanding that, Acharya himself chased them away by making just a ‘hum’ sound (हुङ्कारः).
_____________________________________________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
Leave a Reply