Kaaranam Indri Karunai

Thanks Sri Anand for the share. Beautiful lyrics and great job by Smt Niharika.

Periyava Sharanam!

ராகம் – நாத நாமக்ரியா

விருத்தம்

கருணை என்னும் வாரிதியே
காஞ்சி நகர் பெரும் தவமே
காமகோடி பீடமதன் கதிரொளியே
கண்ணொளியால் அருள் வழங்கும் அத்புதமே
அருமறைத்தேன் பொழிமுகிலே
ஆனந்தப் பெருவெளியில் ஆடுகின்ற பூரணமே
தருணமதை நோக்காமல் காரணமும் கருதாமல்
தண்ணளியால் காமாக்ஷி தாயார் போல் முகமலர்ந்து
பரிவுடனே அபயகரம் காட்டும் ஒரு கற்பகமே
பதமலரே தஞ்சமென்று வந்தடைந்தேன் ஏற்றருளே !!

பல்லவி

காரணமின்றி கருணை புரியும் காஞ்சி பெரியவாளே

அனுபல்லவி

உமை அனுதினமும் தொழுதிட அருள் புரிவாயே

( காரணமின்றி கருணை புரியும் )

சரணம்

அகில நாயகிக்கு தாடங்கம் சூட்டிய பராத்பரன்
அன்னை காமாக்ஷிக்கு பொற்கூரை வேய்ந்த தயாபரன்
வேதநெறி தழைக்க அறப்பணி செய்த குருபரன்
தரணியெல்லாம் திருப்பணி செய்த க்ருபாகரன்

( காரணமின்றி கருணை புரியும் )

சரணம்

ஓர்த்து தெளிந்திடும் ஞான மூர்த்தி
வார்த்து வழிகாட்டும் ஒப்பிலா மூர்த்தி

பார்த்து மகிழ்ந்திடும் லாவண்ய மூர்த்தி
காத்து அருளிடும் கருணா மூர்த்தி

( காரணமின்றி கருணை புரியும் )

இசையமைத்து பாடியவர் – ஸ்ரீமதி நிஹாரிகா

எண்ணம் / எழுத்து – ஆனந்த் வாசுதேவன்

தருமமிகு சென்னை
15th March 2020 | அனுஷம்
Mobile – 9582218808



Categories: Audio Content

2 replies

  1. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA. SARANAM SARANAM.
    JANAKIRAMAN. NAGAPATTINAM

  2. அருமையான படைப்பு பொருள் செறிவுடைய வார்த்தைகளுடன்! ஸ்ரீமதி நிஹாரிகா குரல் வளத்துடன் மேலும் பரிமளிக்கிறது என்றால் மிகையில்லை! பெரியவா சரணம்.

Leave a Reply

%d bloggers like this: