98. Sri Sankara Charitham by Maha Periyava – Reason for incarnation of persons pursuing the path of Karma

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Why did Subramanya Swamy and Lord Brahma incarnate before our Bhagawathpadal? Can someone guess? The master director continues with the riveting screenplay 🙂

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for a scintillating drawing and audio. Rama Rama.


கர்ம மார்க்கக்காரர்களின் அவதாரத்திற்குக் காரணம்

தாம் அவதாரம் பண்ணுவதற்கு முந்தியே குமார ஸ்வாமியையும், ப்ரம்மாவையும் கர்ம மீமாம்ஸகர்களாக அவதரிக்கும்படிப் பரமேச்வரன் அனுப்பி வைத்ததற்கு ஒரு ந்யாயம் சொல்லலாம். இப்போது அவரிடம் வந்து முறையிடுவது தேவர்கள். அவர்களுக்கு ஜனங்களின் கர்மாநுஷ்டானத்தால்தான் லாபம் — தேவர்கள் ஆஹுதி பெறுவது வைதிக கர்மாவில்தான். ஞான மார்க்கத்தில் போகிறவனுக்கு தேவர்களால் ஆகவேண்டியது எதுவுமில்லை. அவன் அவர்களை உபாஸித்து ஆஹுதி கொடுப்பது கிடையாது. அதனால் தேவர்களுக்கு ஞானியைப் பிடிக்காது, கர்மாக்காரன்தான் அவர்களுக்கு ப்ரியமானவன் என்றுகூடச் சொல்வதுண்டு! ‘தேவானாம் ப்ரியன்’ என்றாலே அஞ்ஞானி என்று அர்த்தம் ஏற்பட்டிருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளலாம்!

இப்போது அவர்கள் வந்து முறையிடுகிறபோது, ‘அவர்களுக்கு உபகாரம் செய்வதான கர்மாநுஷ்டானம் அடியோடு அடிபட்டுப் போன ஞானத்தையே சொல்வதற்குத் தாம் அவதாரம் பண்ணினால் அவர்களுக்கு எங்கேயாவது ஆறுதலாக இருக்குமா? யஜ்ஞபாகம் இல்லாமல் இவர்கள் வந்து தவித்துக் கொண்டு ப்ரார்த்திக்கும்போது, நாம் அத்வைத (ஞான) த்தைச் சொல்ல அவதரிக்கிறேனென்றால் அது கருணையாகுமா, [சிரித்து] manners ஆகுமா?’ என்று ஸ்வாமி நினைத்திருப்பார் போலிருக்கிறது! ‘நடுவிலே ரொம்ப காலம் யஜ்ஞாதிகள் குறைந்து போனதற்கு ஈடு செய்வதாக இப்போது ஒரு நாற்பது, ஐம்பது வருஷம் இவர்களுக்கு நிறைய யஜ்ஞபாகம் கிடைக்கட்டும். அதற்காக ப்ரம்மாவும், ஸுப்ரஹ்மண்யரும் போய்க் கர்ம மீமாம்ஸையை நன்றாக விருத்தி பண்ணட்டும். அதிலேயே நம் கார்யத்துக்கும் ஸாதகமாகக் கணிசமான அளவுக்கு பௌத்த நிராகரணமும் ஏற்படட்டும். அப்புறம் நாம் போகலாம்.

‘பௌத்தர்களும் ஏதோ ஒரு வழியில் ஞானம் மாதிரியே சொல்கிறவர்களானதால் நாமும் ஞானம் என்றே ஆரம்பித்தால் எது வைதிகம், எது அவைதிகம் என்று வித்யாஸம் புரியாமல் ஜனங்கள் குழம்பிப் போவார்கள். அதனால் முதலில் இவர்கள் போய்க் கர்மாநுஷ்டானத்தால் பலமான வைதிக அஸ்திவாரம் போட்டுவிடட்டும். அப்புறம் நாம் போய், ‘இந்த அநுஷ்டானங்களிலேயே ஆரம்பியுங்கள். அதனால் பக்வமான பின் ஞானத்தில் போங்கள்!’ என்று வைதிகமான ஞான மார்க்கத்தை எடுத்துச் சொன்னால் லோகம் குழப்பமில்லாமல் புரிந்து கொண்டு முன்னேற முடியும்’ என்று நினைத்தே ஸ்வாமி அந்த இரண்டு பேரை முதலில் அனுப்பினாரென்று வைத்துக் கொள்ளலாம்.

அதன்படி முதலில் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியும், ப்ரம்மாவும் தங்கள் அம்சங்களால் குமாரில பட்டராகவும், மண்டன மிச்ரராகவும் பிறந்து பௌத்தத்தை நன்றாகக் கண்டித்து, கர்ம மார்க்கத்தை வளர்த்தார்கள்.

__________________________________________________________________________________________________________________________

Reason for incarnation of persons pursuing the path of Karma

One justification can be given for Parameswara sending Kumara Swamy and Brahma to incarnate as Karma Meemamsakas, before he himself took his incarnation.  It was the Devas who had now come to Him with a plea.  They gained only when people observed their prescribed duties [कर्मानुष्ठानम् – Karmanushtanam] – Devas get offerings only from the Vedic karmas carried out by the people. A person proceeding on the path of Jnana (superior knowledge [ज्ञानम्]) does not require anything from the Devas.  He does not worship them and invoke them with any offerings (Āhuti – आहुति).  Therefore, it is even said that Devas do not like a Jnani [jñānī – ज्ञानी] and like only those who pursue the path of doing one’s duties!  You can very well appreciate that an interpretation has come about where the name ‘Devanaam Priya­­:’ (देवानाम् प्रियः) refers to an ignorant person (अज्ञानि)!

Now that they have come with an appeal, Swami seems to have thought – ‘Would it be soothing to them, if I were to take the incarnation now and emphasise on the path of Jnana, which completely discards performance of one’s prescribed duties?  When they are suffering without getting their share of offerings through religious sacrifices (यज्ञभाग) and are appealing to me and if I said that I would be incarnating to teach the Advaita Jnana, would it seem to be compassionate (करुणा), (laughing) or [good] manners?’  ‘To compensate for the decline in the conduct of religious sacrifices that has happened for a long time in between, let them now get their share of offerings through yajnas for forty or fifty years.  For that, let Brahma and Subrahmanya Swamy [सुब्रह्मण्य स्वामि] go and develop the path of karma meemamsa [कर्म मीमाम्सा] well.  Let the rejection (निराकरण) of Buddhism happen to a large extent through that itself, contributing considerably in favour of our purpose. I can go later.’

We can take it that Swami sent those two, thinking, ‘In some ways Buddhists also taught something similar to Jnanam [ज्ञानम्] and if I also begin with Jnanam, people might get confused without being able to understand which of these was the Vedic path and which was non-Vedic.  Therefore, let them go first and establish a strong Vedic foundation through Karmanushtanam. Subsequently, if I go and say ‘Begin with these religious duties, and upon attaining maturity, pursue the path of Jnana!’ and thereby explain the Vedic path of Jnana, the world would understand and move forward with clarity’.

Accordingly, to begin with, aspects of Subhramanya Swamy and Brahma were born as Kumarila Bhatta [कुमारिल भट्ट:] and Mandana Misra [मण्डन मिश्र​:] respectively, nurtured the Karma path [कर्म मार्गम्] and strongly condemned Buddhism.
___________________________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. I love sowmya’s artwork which brings out the nuances and emotions in Periyava’s upanyasam through the right symbols and expressions. Like in this one, the homam picture clearly brings out the karma margam and devas above are happy with the havir bhagam, the confused expression of people if they hear similar philosophy from Buddha and Shankara. 🙏

Leave a Reply

%d bloggers like this: