97. Sri Sankara Charitham by Maha Periyava – Acharya’s Differentiation

Jaya Jaya Sankara Hara Hara Sankara – How Bhagawathpadhal established Gnana Marga highlighting the drawbacks of Meemamsa and other related philosophies has been beautifully explained in this chapter by Sri Periyava.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another impressive drawing and audio. Rama Rama.


ஆசார்யாளின் பாகுபாடு

கர்மாநுஷ்டான விஷயமாகவோ ஆசார்யாள் செய்திருக்க வேண்டிய பௌத்த மத கண்டனத்தில் பெரிய பாகத்தைப் பூர்வ மீமாம்ஸகரான குமாரில பட்டர் பண்ணி விட்டார்! ஆசார்யாளுக்குக்குக் கர்மா என்பது முதல் படிதான். அது சித்தத்தைப் பரிசுத்தி செய்வதற்கு மாத்ரமே. அப்படி பரிசுத்தியான பிறகு ஞான விசாரம் பண்ணி, ஞானத்தினால்தான் மோக்ஷமடைய முடியும் என்பது ஆசார்யாள் கட்சி. அதனால் முதல் படியிலேயே அடியெடுத்து வைக்க வொட்டாமல் புத்த மதம் தடுக்கிறதே என்ற அளவுக்குத்தான் அவர் சண்டைபோடுவது. குமாரில பட்டருக்கோ கர்மாநுஷ்டானம் முதல்படி மட்டுமல்ல. அதுதான் முழு மார்க்கமுமே! ஞானம் என்பது வேண்டவே வேண்டாம், கர்மாவினாலேயே மோக்ஷம் என்பது அவர் கட்சி. அதனால் அவருக்குத்தான் புத்த மதத்திடம் முழு அபிப்ராயபேதம் கர்மா விஷயமாக இருந்தது. பௌத்தம் வைதிக கர்மாவை ஆக்ஷேபிப்பதை அவர் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் அலசிக் கண்டனம் செய்தார். ஜைமினியின் மீமாம்ஸா ஸுத்ரங்களுக்கு சபர ஸ்வாமி என்பவர் செய்துள்ள பாஷ்யங்களுக்கு குமாரில பட்டர் எழுதியுள்ள வார்த்திகங்களில் இந்தக் கண்டனம் நிறைய வருகிறது.

ஸ்வாமி வேண்டியதில்லை என்ற பௌத்தக் கொள்கையை உதயனரும், கர்மா வேண்டியதில்லை என்ற அவர்களுடைய கொள்கையைக் குமாரிலரும் நன்றாகத் தாக்கித் தகர்த்தது போக பாக்கிதான் ஆசார்யாள் செய்ய வேண்டியிருந்தது.

உதயனர் ஆசார்யாளுக்குக் கொஞ்ச காலம் பிற்பட்டு வந்தவர். குமாரிலர் ஆசார்யாளுக்கு ஸுமார் ஐம்பது வருஷம் முந்திப் பிறந்திருக்கலாம். அவருடைய கடைசிக் காலத்தில் யுவாவாக இருந்த ஆசார்யாள் அவரை ஸந்தித்திருக்கிறார். அந்தக் கதையெல்லாம் பின்னால் சொல்கிறேன். அதாவது குமாரிலபட்டர் ஆசார்யாளின் senior contemporary.

ஈச்வரன் ஆசார்யாளாக அவதரிப்பதற்கு ஸுமார் ஐம்பது வருஷம் முந்தியே ஈச்வர குமாரனான குமாரஸ்வாமி குமாரில பட்டராக அவதரித்து அப்பாவின் கார்யத்தில் கணிசமான பங்கைத் தாமே செய்து முடித்து விட்டார்!

ஆனாலும், ரொம்ப விசித்ரமாகத் தோன்றும் — பௌத்த கண்டனத்தில் ஆசார்யாளின் கார்யத்தை வெகுவாகக் குறைத்து உபகாரம் பண்ணிய மீமாம்ஸகர்கள், நையாயிகர்கள் (ந்யாய மதஸ்தர்கள்) ஆகியவர்களைத்தான் ஆசார்யாள் நிரம்பக் கண்டித்தது! ந்யாய மதமும் பல ஆத்மாக்களைச் சொல்லுவதால் ஒரே ஆத்மாவாக நிறைந்துவிடும் அத்வைத மோக்ஷத்தைச் சொல்லவில்லை. அதனால் அதைக் கண்டிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் இந்தக் கண்டனம் அவ்வளவு அதிகமில்லை. ஆசார்யாள் அதிகம் கண்டித்தது மீமாம்ஸையைத்தான். அதற்கடுத்தபடி அவர் நிறையக் கண்டித்தது ஸாங்க்ய மதத்தை. ப்ரம்மம் – மாயை என்று வேதாந்தம் சொல்கிற மாதிரியே அது புருஷன் – ப்ரக்ருதி என்று சொல்கிற மாதிரித் தோன்றும். ஆனாலும் அது வேதாந்த தாத்பர்யத்திற்கு விரோதமாகப் போவதே. அதே ஸமயத்தில் அதன் வேறு சில கொள்கைகள் வேதாந்தத்திற்கும் ஸம்மதமானவை. இப்படி இருப்பதாலேயே அது எப்படி அத்வைதத்துக்கு வித்யாஸப்படுகிறதென்றும், அந்த வித்யாஸங்களிலுள்ள குறைபாடுகள் என்னவென்றும் நன்றாக இனம் பிரித்துக் காட்டி விளக்க வேண்டியிருந்தது. அதனால் ஸாங்க்யத்தையும் மீமாம்ஸைக்கு அடுத்தபடி ஆசார்யாள் நிறையக் கண்டனம் செய்தார். ஆனாலும் ஸாங்க்யம் அறிவாளிகளில் சில பேரோடு மட்டும் முடிந்துபோகும் ஒரு தத்வ சாஸ்த்ரம்தான். அது நமக்கு இங்கே விஷயமில்லை. ஜனங்களின் நித்யப்படி நடைமுறை வாழ்க்கையிலேயே கலந்து வருவதான கர்மாநுஷ்டானங்களைக் கொண்ட மீமாம்ஸைதான் ஸமூஹத்தை பாதிப்பது. அதனால் அவதாரத்தின் கார்யங்களில் அதுதான் முக்யமானது. ஒரு ஸ்டேஜ்வரை கர்மாநுஷ்டானம் இருந்தே ஆக வேண்டும். அது இல்லாவிட்டால் ஜீவனையும், ஸமூஹத்தையும் ஒழுங்குமுறையில் கொண்டு வரவே முடியாது. ஆனால் கடைசி ஸ்டேஜ் வரையிலும் அதுவேதான் என்றும் பண்ணி விடக் கூடாது. ஒரு ஸ்டேஜ் ஆன பின் அதுபோயே ஆக வேண்டும். அப்போதுதான் ஸத்ய ஸத்யமான ஆத்மாவில் சேரமுடியும். அதனால் ரொம்பவும் நுட்பமாக அலசி ஆராய்ந்து பார்த்து, எதுவரை எந்த அளவில் கர்மாநுஷ்டானங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கவும் வேண்டும்; அதையே லக்ஷ்யமாக்கி விடுவதில் என்னென்ன தப்புக்கள் என்பதையும் ஸவிஸ்தாரமாக எடுத்துச் சொல்லித் தள்ளவும் வேண்டும். நன்றாக இப்படிப் பாகுபாடு பண்ண வேண்டும். மீமாம்ஸையில் கார்யமாக அநேகம் இருப்பதை எடுத்துக் கொள்ளும்போதே ஸித்தாந்தமாக அதில் இருப்பதில் உள்ள ஏராளமான குறைபாடுகளையும் புரிய வைத்துத் தள்ளும்படிச் செய்ய வேண்டும். இப்படிச் செய்தவரே நம் ஆசார்யாள். கர்மாநுஷ்டானம்தான் ஸாதாரண ஜனங்களுக்கு முடிந்தது, ஸாதகர்களுக்கும் அதுதான் ஆரம்பப் படி என்பதால் ஆசார்யாள் ச்ரௌத-ஸ்மார்த்த கர்மாக்களை ஆதரித்து ஊக்கி வளர்த்தாலும், ஞானத்தை மீமாம்ஸை அடியோடு தள்ளிவிட்டுக் கர்மாவே எல்லாமும் என்று பிடித்துக் கொண்டிருந்ததால் ஞானத்தையே மோக்ஷமார்க்கமாகக் கொண்ட ஆசார்யாள் அதையே அதிகம் கண்டனமும் செய்ய வேண்டியிருந்தது.

காலில் அடி, நடக்க முடியவில்லை என்றால் மருந்து போட்டுக் கட்டிக் கொண்டால்தான் விந்தி விந்தியாவது நடக்க முடியும். அப்படித்தான் ஜன்மாந்தர கர்மாவால் அடிபட்டு நாம் மோக்ஷமார்க்கத்தில் நடக்க முடியாதபோது கர்மாநுஷ்டானத்தால் மருந்துக் கட்டுப் போட்டுக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த வழியில் போக ஆரம்பிப்பது. அதற்காக, ‘கால் நன்றாக ஸரியாகிக் கட்டைப் பிரித்துப் போட்டு வேகமாக நடப்பதென்பதே கூடாது; எப்பவும் கட்டுப் போட்டுக் கொண்டேதான் விந்தி விந்திப் போக வேண்டும்’ என்றால்? கட்டிக் கட்டி வைப்பதிலேயே கட்டுப் புண் வந்து புரையோடி அடியோடு நடக்க முடியாமல்தான் போகும். ‘கட்டுப் போனபின் ஞான மார்க்கத்தினால்தானே லக்ஷ்யமான மோக்ஷத்திற்கு ஸுகமாக, வேகமாகப் போய்ச் சேர முடியும்? இவர்கள் (மீமாம்ஸகர்கள்) இப்படி இடைஞ்சலாகப் பண்ணுகிறார்களே!’ என்பதால் ஆசார்யாள் அவர்களை நன்றாகக் கண்டனம் செய்ய வேண்டியிருந்தது.

பழம் தரவில்லையென்று குமாரஸ்வாமி அப்பாவைப் படுத்தி உருட்டி ஸந்நியாஸியாகப் போனாரல்லவா? அப்பாக்காரர் அவருக்குக் கீழ்ப்படிந்து போகும்படி ஆயிற்றல்லவா? பதிலுக்கு இப்போது அவர் ஸந்நியாஸமே கூடாது என்று வாதம் பண்ணும் மீமாம்ஸகரானபோது அப்பா அவரை நன்றாகக் கண்டனம் பண்ணி ஜயித்துக் காட்டிவிட்டார்! அவர் (குமாரஸ்வாமி) இன்னொரு ஸமயத்தில் ப்ரம்மாவை ஜெயிலில் போட்டு, அதன் தொடர்ச்சியாக அப்பாக்காரர் தன்னிடம் தலைவணங்கி உபதேசம் வாங்கிக் கொள்ளவும் பண்ணினார். இப்போது அப்பா அந்தப் ப்ரம்மாவையே அவருக்கு (குமாரிலபட்டருக்கு)ப் பக்க பலமாக மண்டனமிச்ரர் என்று அனுப்பினார். குமாரில பட்டருக்குக் கடைசிக் காலத்தில் தாமே ஞானோபதேசம் பண்ணினார்.

மண்டனமிச்ரர் எழுதியதாக மீமாம்ஸைப் புஸ்தகம் எதுவும் கிடைக்கவில்லை. ‘மீமாம்ஸாநுக்ரமணிகா’ முதலான புஸ்தகங்கள் எழுதிய மண்டனமிச்ரர் இவரில்லை என்றும், இதே பேருள்ள இன்னொருவர் என்றும் பண்டிதர்கள் அபிப்ராயபடுகிறார்கள். அவர் அத்வைத புஸ்தகமாகவும் ‘ப்ரஹ்ம ஸித்தி’ என்று ஒன்று எழுதியிருக்கிறார். ஆச்சர்யாள் கொள்கைகளுக்கு அது கொஞ்சம் வித்தியாசமாகப் போகும். நம் கதையில் வருகிற மண்டனமிச்ரர் பிற்காலத்தில் ஆச்சார்ய சிஷ்யராகி ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டபின் எழுதிய அத்வைத புஸ்தகங்கள் தான் நமக்குக் கிடைத்திருக்கின்றனவே தவிர அவர் பூர்வத்தில் மீமாம்ஸா விஷயமாக எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனாலும் கார்ய ரூபத்தில் அவர் நிறைய யஜ்ஞாதி அநுஷ்டானங்கள் செய்தும், மாற்று ஸித்தாந்திகளுடன் வாதச் சண்டைகள் போட்டும் அந்த மார்க்கத்தை நன்றாக வ்ருத்தி செய்து கொடுத்திருக்கிறார். ஆசார்யாள் அவரையும் ஜயித்து, அதோடு நிற்காமல் அவருக்கு ஸந்நியாஸம் கொடுத்துத் தம்முடைய ப்ரதான சிஷ்யர்களில் ஒருவராகவே ஆக்கிக் கொண்டார்.

__________________________________________________________________________________________________________________________

Acharya’s differentiation

As regards the matter of practising one’s prescribed duties [कर्मानुष्ठानम् – Karmanushtanam], a major portion of the condemnation of Buddhism – which ought to have been done by Acharya – was already completed by Kumarila Bhatta [कुमारिल भट्टः], the Purva Meemamsika [पूर्व मीमाम्सकः]!  For Acharya, Karma is just the first step.  It is meant only for purifying one’s thoughts.  It is Acharya’s stand that after purification [of the mind], it was possible to attain liberation only by doing self-introspection [ज्ञान-विचारम्], thereby gaining superior knowledge [ज्ञानम्].  Therefore, his fight was limited to the fact that Buddhism was preventing people from taking even the first step.  Whereas, for Kumarila Bhatta, observance of one’s duties was not just the first step but was the entire path!  His stand was that there was no need for jnanam at all and that emancipation [मोक्षम् – moksham] can be achieved by only observing one’s duties.  Thus, it was he who had a complete difference of opinion with Buddhism, with regard to observing one’s prescribed duties.  He refuted the objections of Buddhism against performance of Vedic duties, by analysing them with great vigour and clarity.  These arguments are largely found in the Vārtikam [वार्तिकम्], the explanatory notes written by Kumarila Bhatta to the commentary written by one person by name Sabara Swamy [शबर स्वामि] for the Meemamsa doctrines of Jaimini [जैमिनि].

Acharya had to only address the remaining issues, after the Buddhist principle of ‘no need for God’ and ‘no need for doing one’s prescribed duties’ were attacked and destroyed by Udayana [उदयनः] and Kumarila Bhatta respectively.

Udayana was born some time after Acharya. Kumarila would have been born approximately fifty years before Acharya.  Acharya, as a youth, has met him [Kumarila] in his last days. I will narrate those stories later. This is to say that Kumarila Bhatta was a senior contemporary of Acharya.

About fifty years before Eswara incarnated as Acharya, Kumaraswamy – the son of Eswara – incarnated as Kumarila Bhatta and completed a major portion of his father’s work!

Though it may appear strange, Acharya had strongly criticised only the Meemamsikas, Naiyyayikas [नैय्यायिकाः – belonging to Nyaya religion] etc. who had helped him in substantially reducing his task of condemning Buddhism! Since Nyaya religion talked about several souls [आत्मा], it did not mention about Advaita moksha – the merger with that one, all pervading atma. Therefore, it had to be refuted. Still, this condemnation was not much.  It was only Meemamsa which was strongly disapproved by Acharya. Next to that, it was Sankhyam [साङ्ख्यम्] religion which was largely condemned by him. It may appear that it [Sankhyam] explained Purusha [पुरुषः-the Supreme Being] and Prakruti [प्रकृति- matter] in the same way as Vedanta talks about Brahmam and Maya.  However, it was contrary to the intent of Vedanta. Simultaneously some of its other principles were in alignment with Vedanta also.  Since this was the situation, Acharya had to explain well how these principles differed from Vedanta philosophy and highlight the shortcomings of the [Sankhyam] religion due to these differences. That is why, next to Meemamsa, he condemned Sankhyam more.  However, Sankhyam was a philosophy, which was limited to a few intellectuals.  That is not a matter of concern to us here. It was Meemamsa which affected the society, as it was integrated with the discharge of prescribed duties in the day to day life of the people.  Therefore, this was the most important one of the various tasks of the incarnation.  Up to a certain stage, it is definitely necessary to practice one’s prescribed duties [कर्मानुष्ठानम्].  If it is not there, it would not at all be possible to bring the living being and the community to a disciplined order.  But it should also not be such, that it is the only thing till the last stage.  After a certain stage, it should undoubtedly be discarded. Then only it would be possible to merge with the absolute truth of the Atma. Therefore, it is necessary to determine up to what extent discharging of duties should be undertaken, by minutely analysing and examining the matter.  It is also necessary to highlight and put forth the drawbacks in taking that itself as the final objective and discard them.  It has to be clearly differentiated this way. While acknowledging that there are several procedures in Meemamsa which are worth accepting, it is also necessary to explain the shortcomings in their principles, and clarify them, so that they are discarded. It was our Acharya who did it that way. Ordinary people can only follow acts of practising one’s duties. Even though Acharya encouraged and fostered the undertaking of procedures based on faith and traditions, since it was the first step for practitioners, he, who adopted acquiring jnanam as the only path for salvation, had to condemn Meemamsa a lot, because it discarded jnanam entirely and rigidly stuck to karmanushtanam alone.

Say there is an injury to the leg that prevents one from walking; it would be necessary to apply some medicine and bind it with a bandage, so that it would be possible for the person to at least limp.  Similarly, when we are not able to walk towards the path of moksha due to the injury of accumulated karma over many births, it would be necessary to apply the medicine and bandage of discharging one’s duties (karmanushtanam), and start at least to limp on that path.  However, how would it be if it is said that one should never get the injury fully cured or have the bandage removed so as to walk properly, but should always have the bandage, and only keep limping?  If the bandage is kept bound all the time, the wound will only get infected and will totally prevent the person from walking.

‘The goal of moksha can be attained speedily and comfortably only if the [worldly] bonds are discarded. Meemamsakas are posing obstacles to this’ – was the contention of Acharya due to which he severely condemned them.

Did not Kumaraswamy throw a tantrum at his father and leave as a Sanyasi when he was denied the fruit?  Did it not happen that the father had to submit to him?  In return, when he [Kumaraswamy], became a Meemamsika who advocated that Sanyas was not at all required, the father strongly condemned him and proved victorious!  Also, he [Kumaraswamy], once locked up Brahma in jail, and subsequently, made the father bow to him and receive his teachings.  Now, the father sent the same Brahma in the form of Mandana Misra, to support him [Kumarilabhatta].  He [Acharya] gave jnana upadesa to Kumarila Bhatta in his [Kumarilabhatta’s] last days.

No book is available on Meemamsa, which could be attributed to have been written by Mandana Misra.  Scholars opine that he is not the author of books like ‘Meemasa Anukramanikā’ [मीमांसानुक्रमणिका], but someone else by the same name.  He has written ‘Brahma Siddhi’ [ब्रह्म सिद्धि], an Advaita book. It goes slightly different from the principles of our Acharya.  We have the books written on Advaita by the Mandana Misra of our story, only after he became a disciple of Acharya and took up Sanyas; he does not seem to have written any on Meemamsa during the previous stage of his life. Nevertheless, by conducting activities in the form of several yajnas [यज्ञाः] and by debating with philosophers of contrary schools, he has helped that path expand well.  Acharya won over him and not stopping with that, initiated him into Sanyas and made him one of his primary disciples.
_____________________________________________________________________________________________________________________________
Audio




Categories: Deivathin Kural

Tags: ,

2 replies

  1. Jai Ma

    Offering humble prostrations at the Holy Feet of Sri Mahaswamigal, it is not fair to paint “Buddhism” with a broad brush, and Srimat Shankara also was specific in his critique of specific Buddhist authors, like Nagarjuna, or the Yogacara.

    SriSri Mahaswami is intimately familiar with all these “schools” and had recommended to a physics profesor study Nagarjuna should he desire deeper into the mysteries pertaining to his own field.

    Srimat Shankara Bhagavatpada also was very selective in what and whom he was criticizing re: Buddhist dogma and authors, to the extent that he has been accused of being a “prachanna bauddha”, a crypto-buddhist, himself!!

    Nagarjuna should be studied very carefully, because the great Tibetan commentators, regardless of their immeasurable sadhana, miss the nuances of the Sanskrit and the cultural context implicit in Nagarjuna’s writing, e.g. the managalacharana of the Mulamadhyamika Karika. For example, using phrases like “prapancopa shamam shivam” taken from the Upanishads, and therefore a direct challenge to the learned vaidikas, of whom he also was one!!

    Sri Shankara used terms like ” parama vainashika” for Nagarjuna, but this has a nuanced meaning and is not a discourteous attack at it might seem at first sight. Rather, it is summing up Nagarjuna’s viewpoint, sahanyonyena vA siddhir- vinAnyena vA yayoH / na vidyate tayoH siddhir katham nu khalu vidyate // Then, ekibhavena vA siddhir…. nAnA bhavena vA yahoH etc.

    It is not as condemnatory as one might suppose, and hardly aas ugly and discourteous as the terms used for Srimat Bhagavatpada by learned Madhva sannyasis like Vadiraja! How many indecent terms, that should not have come out of the mouth of any bhakta of SrimanNarayana emerged from so many Madhvas out of excessive zeal, and was repeated repeatedly in sectarian idiocy by the Gaudiya Vaishnavas, many centuries later.

    Again, with Yogacara, he was very specific, with respect to particular aspect of doctrine, e.g cittamAtratA, and whose interpretation, of such, which led him to be accused of being a crypto-buddhist. And SriSri Mahaswamigal also finds close correspondence with Advaita Vedanta.

    It not correct to lump “Buddhism” under one heading, just as there is nothing like “Hinduism”. SriMahaswamigal HIMSELF offers evidence from the Mahabharata that the Shaivas, Pancaratras, etc. were not considered vaidika marga at that time, but today have become part of the orthodox tradition. Indeed, the Gorakhnath panthis were firmly outside the vaidika marga, and today are counted as “staunch Hindus”. They buddhists became Vajrayanis and ALL Mahayana paths were subsumed into this, and not just in India, but also in parts of SE Asia, including Thailand, that we now think as a SthaviravAda preserve. THings are much more complex than we choose to assume.

    And with Vajrayana, a whole different set of ideas come into play. Purification, such as NGONDRO, is very much a part of spiritual life, and MUCH more imperative than any Hindu is requred to undergo!! Even fro other sects, ritual purification is mandatory, and continuous part of daily practice. Devotion, and the concept of Supreme Deity is very much present, and not just in Vajrayana (not yet Tibetan but hugely Indian), but in all phases of Chinese (and, later Japanese) Buddhism that began to blossom by 742, a date not accepted in traditional chronology.

    By not interacting thoughtfully and rationally with many positive aspects of the many schools of Buddhism that evolved spontaneously from the Indian society, much was lost, that would have strengthened us for the trials by fire to come, during the Muslim invasions that began in 712, and would continue. The Buddhist also lost out by calling their teachers heretics, knotless heretics, and similar crude and foolish terms. I am very well-versed in the histories of Vikramashila vihara and the specific scholars and sages coming out of it, as well as the specifics of its destruction in 1207.

    Today, we have the situation where brahmans have been chased out of Tamil Nadu, where they form less than 1% of the population, and out of 44K temples, only 6K temples are serviced by brahmana purohits. Six temples are devoted to minor screen actresses, with full aupacharika puja, and this only can happen in TN!!!!!

    Brahmans, or rather dvijabandhunAma, in India have become the most ardent enemies of the Sanatana Dharma and of Bharat Mata. The recent riots are a well-planned war to break India and led by divjabandhus from the front and in the international arenas, maligning the nation in every way.

    The massive wave of proselytization today in TN, AP, Odisha, etc. is facilitated by “Hindus”. because we chose to mock and ignore the lessons that could have come from a sincere interaction with the many Buddhist sects. “We are always right” is a vicious and poisonous mindset identical with the Muslim one,

    What harsh lesson has God been is teaching us for 1000 years?. And we never learn. Even the many lessons taught by the arising of the Virashaivas in TN, and the south, were not taken to heart, and hence the Muslims came in force!! Then the Europeans. WE ARE NOT ALWAYS RIGHT.

    pranam

  2. அற்புதமான சித்ரம்! தத்ரூபமாக ! பெரியவா பூர்ண அனுகிரகம்! தெளிவான பேச்சு எழுத்தில் புரியுமா போல்! ஜய ஜய சங்கரா….

Leave a Reply

%d bloggers like this: