Experience with Mahaperiyava by Sri Ramgopal

 

Sri Ramgopal mama, who is 80 sent me this while I was in travel. Just realized this and posting now. It is very nice of him to take time to type this wonderful experience and sharing with all of us at this age. I promised him that I will fix some typos in this but couldn’t find time – so sharing as I received.. you can still enjoy the experience.

Mama is truly blessed to have a divine experience with Mahaperiyava and blessed to touch the feet of ambal as directed by mahaperiyava.

Mahaperiyava padham sharanam!

 

என் பெயர் என்.ராம்கோபால். வயது 80. பெங்களூரில் இருக்கிறேன். நான் பாரத்

எலக்ரானிக்ஸில் ( Bharath Electronics ) இருந்து 1995 ல் ஓய்வு பெற்றேன்.(Retired)

நானும் என் நண்பர்கள் சிலரும் ஸ்ரீ மஹாபெரியவா முஹாம் இருக்கும் இடங்களுக்கு

சென்று தரிசிப்பது வழக்கம்.  ஒரு சமயம் நவராத்திரியில் விஜய தசமிக்கு முதல் நாள்

பண்டரிபுரத்தில் ஸ்ரீ பெரியவர்கள் தரிஸனத்திற்க்கு சென்றோம். ஸ்ரீ ஜயேந்திர பெரியவா

அவர்கள் பண்டரிநாத் கோவிலில் இருந்தார். ஸ்ரீ மஹாபெரியவா சந்த்ரபாஹு நதியின்

அக்கரையில் இருந்தார்கள். நாங்கள் காலை 9 மணிக்கு படகில் சென்று ஸ்ரீ பெரியவா

தரிசனத்திற்க்கு காத்திருந்தோம். நாங்கள் பெரியவா பக்கத்தில் சென்றதும் நான்

எப்பொழுதும் போல் மதுரை வக்கீல் சுந்தர்ராஜ ஐயரின் தம்பி நாராயண ஐயர் பிள்ளை

ராம்கோபால் என்று  அறிமுகம் செய்துகொண்டேன். பிறகு நான் பெரியவா எனக்கு

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தின் மூல மந்திரம் தெரிந்துகொள்ள ஆசை, அதற்க்கு எனக்கு

அறுகதை இருக்கிறதா என்று விண்ணப்பித்தேன். உடனே பெரியவா தன் முன்னால்

இருந்த தட்டில் இருந்து ஒரு போர்வையை போத்திக்கொண்டு நின்று அனுக்ரஹம்

செய்தார். என் பக்கத்தில் இருந்த ஒருவர் தீபாராதனை காட்டி, பெரியவா

போத்திக்கொண்டு இருக்கும் போர்வையில்  லலிதா ஸஹஸ்ரநாமம் ப்ரிண்ட்

பண்ணியிருக்கு, இப்பத்தான் ஒரு மாமி சமர்ப்பித்தார் என்றார். நான் ஆனந்த

கண்ணீருடன் உணர்ச்சி வசப்பட்டு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன்.

இப்பவும் பூஜை அறையில் ( Google search ) பெரியவா ப்ரிண்ட் பண்ணிய போர்வையுடன்

இருக்கும்  படம் இருக்கிறது.  எந்த புண்யம் பண்ணிய மாமி சமர்ப்பித்தாரோ?

அப்போது யாராவது படம் எடுத்திருந்தால் நமக்கு கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்

பிறகு அன்று மாலை பெரியவாளிடம் உத்தரவு வாங்க சென்றோம். நான் எனக்கு

அனுக்ரஹம் செய்ததற்க்கு சந்தோஷத்தை தெரிவித்தேன். உனக்கு கிடைக்கும்  என்று

ஆசீர்வதித்தார். நீ நாளை காலம்பர வா என்றார். மறுநாள் காலை சென்றோம்.

பெரியவாளும் பாலு ( ஸ்ரீ ஸ்வமிநாத இந்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ) அவற்களும் தான்

இருந்தனர். பெரியவா உன்னுடைய ப்ரோக்ராம் என்ன என்றார். நான் துலஜாபூர்,

கானகாபூர் தத்ராத்ரேயர் பீடம் தரிசனம் செய்துவிட்டு பெங்களூர் போகலாம் என்று

இருப்பதாக சொன்னேன். நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். ஒரு கடிதம்

கொடுக்கிறேன் அதை பெங்களூரில் இருக்கும் ப்ரொபசர் சௌந்தரராஜனிடம்

கொடுக்கனும். அவசரம் ஒன்னுமில்லை, நீ உன் ப்ளேன் படி துலஜாபூர், தத்ராத்ரேயர்

பீடம் தரிசனம் பண்ணு. அப்பரம் பெங்களூரில் போய் கொடுத்தால் போதும் என்று

கூறினார்.நான் பெரியவா உத்தரவுப்படியே பண்றேன் என்றேன்.

 

பிறகு பெரியவா நான் ஸ்நானம், அனுஷ்டானம் பண்ணிட்டு அப்பரம் கூப்படரேன்.

அப்படி உட்காந்திருங்கோ என்று கூரினார். நாங்கள் உட்காந்திருந்தோம்.

அனுஷ்டானம் முடிந்து பாலு அவர்கள் மூலம் கடிதம் எழுதிவிட்டு என்னை கூப்பிட்டு

கடிதத்தை கொடுத்தார்.

இன்னிக்கு விஜய தசமி. துலஜாபூரில் பவானி அம்பாளை கர்ப்பகிரஹத்தில் இருந்து

எடுத்து முகமண்டபத்தில்  மூங்கிலில் உயரத்தில் ஒரு படுக்கை மாதிரி பண்ணி

அதில் படுக்க வைத்திருப்பார்கள். நாளை திரும்ப ப்ரதிஷ்டை பண்ணுவார்கள்

ஏணி கட்டியிருப்பார்கள். அதில் ஏறி அம்பாளின் பாதத்தை தொட்டு நமஸ்காரம்

பண்ணுங்கோ. அங்கு நடக்கும் பஜனையில் கலந்துக்கோங்கோ. அப்பரம்

தத்ராத்ரேயரை தரிசிங்கோ என்றார். நாங்கள் உத்தரவு , ப்ரசாதம் வாங்கிக்கோண்டு

புரப்பட்டோம்.

நாங்கள் ப்ளேன் போட்டபடி நடக்காததால் பண்ட்ராபூரில் இருந்து கிளம்ப மத்யானம்

ஆகிவிட்து. ஸ்ரீ பெரியவா அனுக்ரஹத்தால் ஒரு பஸ் ஏறி துலஜாபூர் சாயங்காலம்

வந்தோம். அங்கு காலரா  இருப்பதால் எங்களை ஊசி போட்டுக்கொண்டால் தான்

உள்ளே அனுமதிப்போம் என்று போலீஸ்காரர் நிருத்திவிட்டார். நாங்கள் ஊசி

போட்டுக்கொண்டால் ஜுரம் வந்தால் வேலைக்கு போகவேண்டும் என்று

கேட்டுக்கொண்டும் அனுமதிக்கவில்லை. ஸ்ரீ பெரியவாளை வேண்டிக்கொண்டோம்.

ஒரு சீனியர் போலீஸ் ஆபீஸர் ஒரு போலீஸை உங்களுடன் அனுப்புகிறேன். நீங்கள்

உள்ளே ஒன்றும் சாப்பிடக்கூடாது (அபிஷேக தீர்த்தம் உள்பட) என்றார். சந்தோஷமாக

ஸ்ரீ பெரியவா சொல்லியபடி அம்பாளின் பாதத்தை தொட்டு நமஸ்காரம் பண்ணி,

பஜனையில் சிறிது நேரம் கலந்துகொண்டுவிட்டு திரும்பி விட்டோம். மறுநாள்

தத்ராத்ரேயரை தரிசித்து விட்டு பெங்களூர் திரும்பினோம். ஸ்ரீ பெரியவா கொடுத்த

கடிதத்தை ப்ரொபசர் சௌந்தராஜரிடம் கொடுத்ததும் அவர் மிகவும் சந்தோஷம்

அடைந்தார்.

பாலு அவர்கள் பூர்வாஸ்ரமத்தில் என்னுடன் நன்றாக பழகி இருக்கிறார்.

சன்யாஸ ஆஸ்ரமம் எடுத்து கொண்ட பின்னும் தரிசனம் செய்துள்ளேன்

ஸ்ரீ பெரியவா அனுக்ரஹத்தால் என் மனைவி,பிள்ளை,மாற்றுப்பெண்,பேரனுடன்

சௌக்யமாக இருக்கிறேன்.

“ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர”

 



Categories: Devotee Experiences

3 replies

  1. Kindly post an English translation. JaiGuruDev.

  2. Jaya Jaya Sankara Hara Hara Sankara. saranam saranam. Janakiraman Nagapattinam,

  3. JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA

Leave a Reply to Lakshmi PrasannaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading