Beautiful poem on Anusham by Smt Bhuvana Prakash

To me – simple words touch my heart – this is one such lovely poem on Mahaperiyava! Thank you Bhuvana for sharing this in FB.

Periyava Sharanam!

உற்றே தான் நோக்கிடினும் சற்றே கரம் தந்து
உய்ந்திட வழி சொல்லும் குருநாதா
பற்றிட்டேன் பதம் இரண்டை விட்டிலேன் உமை என்றும்
அருள் மழை பொழிந்திடும் குருநாதா

சின்னஞ்சிறு சிரிப்பும் மழலை மொழி பேச்சும்
எனை என்றும் காத்திடும் குருநாதா
பதும முகம் மலர பவள இதழ் சிந்தும்
ஆசிகள் உடன் வருமே குருநாதா

சின்னஞ்சிறு பதங்கள் மெல்ல எனை ஈர்க்க
கவசமாய் வந்திடும் குருநாதா
தன்னந்தனி காட்டில் அரணாக காத்தெம்மை
அணைத்திட்டு வழி காட்டும் குருநாதா

தங்க கரம் இரண்டும் ஆசிகள் நல்கிட
அங்கம் தனை காத்த குருநாதா
தாயென உடன் இருந்து தரிசனம் தந்திட்ட
ஹரிஹர ப்ரம்மமே குருநாதா



Categories: Bookshelf

Leave a Reply

%d bloggers like this: