96. Sri Sankara Charitham by Maha Periyava – Establishment of God’s doctrines

Jaya Jaya Sankara Hara Hara Sankara – How our Acharyal instilled Bhakthi in the minds of people to negate the effects of Buddhism rather than putting forth tons of arguments has been superbly explained in this chapter by Sri Periyava.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another wonderful drawing and audio. Rama Rama.

கடவுட் கொள்கையை நிலைநாட்டியது

இவற்றில் பக்தி என்பது முன்னேயே சொன்னாற்போல் இயல்பாக ஸர்வ ஜனங்களுக்கும் இருப்பது. உலகம் என்று இப்படியொன்று இருந்து இவ்வளவு காரண – கார்ய விதிகளோடு எல்லாம் நடக்கிறதென்றால் இதை ஸ்ருஷ்டித்து நடத்தும் மஹாசக்தனாக ஒரு ஸ்வாமி இருக்கத்தான் வேண்டுமென்று எவருக்குமே தோன்றுவதுதான் இயற்கை. தோன்றாமலிருப்பதுதான் ஆச்சர்யம்! ஸ்வாமி இல்லை என்று சொல்லத்தான் சிக்கலான புத்தி வாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்! அப்படி பௌத்தர்கள் செய்தார்கள். இந்த வாதத்துக்காக இல்லாமல் வேறு ஸமாசாரங்களுக்காகத்தான் அவர்களை ஜனங்கள் பின்பற்றினார்கள். பௌத்தத்தைப் பின்பற்றும்போதும் ஜனங்களுடைய மனஸை விட்டு பக்தியும் ஈச்வர நம்பிக்கையும் போகவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் அப்புறம் பௌத்தர்களும் பக்தி வழிபாட்டுக்கு ஒரு தினுஸில் இடம் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. இந்த விஷயங்களை முன்னாலேயே சொன்னேன்.

இப்படியிருந்த நிலையில் ஸரியான, வேத வழிப்படியான பக்தியை நிலைநாட்டுவதற்கு ஆசார்யாள் வாதம் எதுவும் அதிகம் பண்ண வேண்டியிருக்கலில்லை. ‘புத்தி ஸமாசாரம் நிறையக் கலக்கும் ஞான விஷயமாக வாதம் நிறையப் பண்ணி எதிர்க் கட்சியை நிராகரணம் பண்ணுவதுபோல், இயற்கையாக ஹ்ருதயத்தில் ஊறுகிற பக்தி விஷயமாக வாதம் ஒன்றும் பண்ண வேண்டாம். ஜனங்கள் பக்தியை நன்றாக திறந்துவிட்டு ஈச்வரனிடத்தில் செலுத்துவதற்கு வழியாக நிறைய ஸ்தோத்ரங்களைப் பண்ணிக் கொடுத்தும், ஆலயங்களை மந்த்ர சக்தியினால் ஸாந்நித்யமுள்ளவையாக்கியும், வழிபாட்டு முறைகளை சுத்தப்படுத்தித் தந்தும் விட்டாலே போதும். ஜனங்கள் இப்போது பௌத்தப்படி பண்ணிக் கொண்டிருக்கும் இரண்டாங்கெட்டான் உபாஸனையை (காபாலிகம், வாமாசாரம் என்றெல்லாம் பண்ணும் க்ரூரமான, ஆபாஸமான உபாஸனைகளையும் தான்) விட்டு விட்டு வைதிக உபாஸனைக்கு வந்துவிடுவார்கள். அறிவாளிகளாக வாதம் செய்கிற பௌத்தர்களைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம். பதில் வாதம் பண்ணுவதால் ஹ்ருதயத்திலிருந்து ஊற வேண்டிய பக்தியை ஊறப் பண்ண முடியுமா என்ன?’ என்கிற ரீதியில் ஆசார்யாள் செய்துவிட்டுப் போய்விட்டார்.

அதனால் லோகத்திற்கு உபாதான காராணமாகவும் நிமித்த காரணமாகவும் ஒரு ஈச்வரன் உண்டு என்பதைக் காரணங்கள் காட்டி அழுத்தமாகச் சொன்னதற்கதிகமாக இவ்விஷயத்தில் வாதம் என்று அதிகம் செய்யவில்லை.

இப்போது இரண்டு வார்ததை சொன்னேனே, உபாதான காரணம் — நிமித்த காரணம் என்று, இந்த இரண்டையும் கொஞ்சம் ‘எக்ஸ்ப்ளெய்ன்’ பண்ணாமல் மேலே போவதற்கில்லை. அத்வைதத்துக்கும் மற்ற வைதிக அவைதிக ஸித்தாந்தங்களுக்கும் உள்ள சில வித்யாஸங்களை முன்னே சொன்னபோதே இதையும் சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு வஸ்து உண்டாக்கப்பட்டிருக்கிறதென்றால் அது ஏதோ ஒரு மூலப் பொருளைக் கொண்டுதான் உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நகை இருக்கிறதென்றால் தங்கம், வெள்ளி மாதிரி ஒரு லோஹத்தைக் கொண்டுதான் அதைப் பண்ணியிருக்கணும். வீடு இருக்கிறதென்றால் அதற்குச் செங்கல் வேண்டும். நகைக்குத் தங்கம் உபாதான காரணம். வீட்டுக்குச் செங்கல் உபாதான காரணம்.

தங்கம் எப்படி நகையாச்சு? செங்கல் எப்படி வீடாச்சு? தட்டானால் தங்கம் நகையாயிற்று. கொத்தனால் செங்கல் வீடாயிற்று. தட்டானும் கொத்தனும் நிமித்த காரணம்.

பானை உதாரணத்தைத்தான் பழைய புஸ்தகங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கும். பானைக்கு உபாதான காரணம் களிமண்; நிமித்த காரணம் குயவன்.

ஆதாரமான பொருளாகிய உபாதான காரணத்தைக் கொண்டு யார் அல்லது எது ஒரு வஸ்துவை உண்டாக்குகிறதோ அது நிமித்த காரணம்.

ஜகத் என்று ஒன்று இருப்பதற்கு ஈச்வரனே உபாதானம், நிமித்தம் என்ற இரண்டு காரணங்களும் என்பது அத்வைதத்தின் கொள்கை. ஜகத்தை மித்யை என்று அது சொல்லும். அதாவது நிரந்தர ஸத்யமாயில்லாமல் ஸத்யம் மாதிரித் தோற்றம் மட்டும் அளிப்பது; ஞானம் வந்தால் போய் விடுவது என்று சொல்கிறது. ஆனால் நடைமுறையில் இருப்பதுபோல ‘வ்யாவஹாரிக ஸத்ய’மாக ஜகத் இருக்கிற போது அதைப் பண்ண ஒரு ஆதார ‘மெடீரிய’லும், பண்ணுவிக்கிற ஒரு கர்த்தாவும் இருக்கத்தானே வேண்டும்? அந்த இரண்டுமே ஈச்வரன்தான் என்று அத்வைதம் சொல்கிறது. வேறு மெடீரியலைக் கொண்டு அவன் ஜகத்தைப் பண்ணினானென்றால் அந்த மெடீரியல் எங்கேயிருந்து வந்தது, அது எப்படி உண்டாயிற்று என்று கேள்வி வரும். அதனால் உபாதான மெடீரியலும் அவன்தான், அதை ஜகத்தாக நிர்மாணம் பண்ணிய நிமித்த காரணமாகிய கர்த்தாவும் அவன்தான் என்றே இருக்க வேண்டும். தன்னையே, தன்னுடைய மாயா சக்தியாலேயே, அவன் ஜகத் என்பதாகத் தோற்றம் காட்டும்படிப் பண்ணுகிறான் என்றால் உபாதான – நிமித்த காரணங்கள் இரண்டும் அவன்தானே? ஜகத் அவனுடைய மாயக் கனா. நாம் கனாக் காண்கிறோம் அப்போது அந்த ஸ்வப்ன லோகத்திலிருக்கிற அவ்வளவு வஸ்துக்களுக்கும் மெடீரியல் (உபாதானம்) நம்மிடமிருந்தே தோன்றியதுதானே? ஸ்வப்ன லோகத்தை நிர்மாணம் செய்த நிமித்த காரணமும் நாம்தானே?

ஸ்வாமியே இல்லை என்றும் சொல்லும் ஸித்தாந்தங்கள் அணுக்கள் என்ற உபாதான காரணத்தைக் கொண்டு ஜகத்தைச் செய்யும் நிமித்த காரணம் மட்டுமே ஸ்வாமி என்று சொல்லும் ஸித்தாந்தங்கள்- என்றெல்லாம் பல இருந்தபோது இரண்டு காரணமும் அவன்தான் என்று அத்வைதம் சொல்லிற்று.

ஈச்வரன் ஜகத்தின் கர்த்தா இல்லை என்று ஸாங்க்யம் சொல்லும், ஈச்வர தத்வத்தை ஞான ஸ்வரூபமாகத்தானே சொல்லியிருக்கிறது? அப்படிப்பட்ட சைதன்ய மூலத்திலிருந்து ஜடமான லோகம் ஸம்பவிக்க முடியாது என்று ஸாங்கியர்கள் வாதிப்பார்கள். ஆசார்யாள் என்ன சொன்னாரென்றால்: சைதன்ய மூலம் வாஸ்தவமாகவே இப்படி ஜட லோகம் என்று ஒன்றைப் பண்ணவில்லை, அதாவது ஜட ப்ரபஞ்சம் நித்ய ஸத்யமான ஒன்று இல்லை, மாயையினால் ஏற்பட்ட தோற்றம்தான். பௌதிகமாக ஜடம் என்று நினைப்பதும் மாயா கல்பனையான எண்ணம்தான்; அதாவது இப்போது ஸயன்ஸில் சொல்கிறபடி matter-ம் ஒருவித energy தான்; கல்பனா சிந்தனையான ஒரு தோற்றம்தான்; நம்முடைய அறிவில் கல்பனை எழும்புகிறது போலவே எல்லா அறிவுக்கும் காரணமான சைதன்ய மூலமான ஈச்வரனிடம் லோக கல்பனை ஏற்பட்டதில் சைதன்யம் – ஜடம் என்று முரணாக எதுவுமில்லை என்று காட்டினார். கல்பனா லோக கர்த்தாவாக ஒரு ஈச்வரன் உண்டு என்றார்.

‘கர்த்தா’ என்பது ப்ரஹ்மஸூத்ர வார்த்தை. அதை எடுத்துக் கொண்டே கிறிஸ்துவர்களும் ‘கர்த்தர்’ என்பது.

மாயம், கல்பனை என்று எதுவானாலும் அப்படி (மாயக் கற்பனை) பண்ண ஒன்று இருக்கத்தானே வேணும்? அப்படிப்பட்ட கர்த்தா ஈச்வரன் என்று ஆசார்யாள் சொல்லி ஸாங்கயர்களைக் கண்டித்தார்.

பல தாதா ஈச்வரனே என்று விளக்கிக் காட்டி மீமாம்ஸர்களைக் கண்டனம் செய்தார். ‘கார்யங்கள்- அதாவது கர்மாநுஷ்டானம் – தானே பலன் கொடுப்பது, பலனைத் தர ஒரு ஈச்வரன் வேண்டியதில்லை’ என்று மீமாம்ஸகர்கள் வாதம் செய்ததை ஆக்ஷேபித்துப் பேரறிவான ஈச்வரன்தான் இன்ன கார்யத்துக்கு இன்ன விளைவு என்று நிர்ணயம் பண்ணி, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதான கோடாநுகோடி கார்யங்களால் இப்படியொரு ப்ரபஞ்ச ஒழுங்கு ஏற்பட்டிருக்கும்படிப் பண்ணுகிறான் என்று ஆசார்யாள் எதிர்வாதம் செய்தார்.

இதற்கு அதிகமாக ஸ்வாமி ஸம்பந்தமாக ஆசார்யாள் வாதத்தில் போகாமல் பக்தி வளர என்னவெல்லாம் பண்ண வேண்டுமோ அதைக் கார்யத்தில் செய்து கொடுத்தே பௌத்த மதத்திற்கு ஜன ஸமூஹத்தில் following இல்லாமல் ஆக்கி விட்டார். வழிபாட்டு முறைகளை க்ரூரமான அம்சங்களும், அறுவறுப்பான அம்சங்களும் இல்லாமல், ஜனங்களின் மனஸைக் கவரும்படியாக ப்ரேமை நிறைந்ததாகவும், வைதிக மந்திர பூர்வமானதாகவும் ஆக்கிக் கொடுத்தார். ஆலயங்களுக்கெல்லாம் போய் ஸாந்நித்யம் நன்றாக ப்ரகாசிக்கும்படியாகத் தூண்டிக் கொடுத்தார். பல ஆலயங்களில் யந்த்ரங்களை ஸ்தாபித்து நல்ல திவ்ய சக்திகள் பரவும்படிப் பண்ணினார். குழந்தையிலிருந்து ஆரம்பித்து மஹா பண்டிதர்வரை எல்லாரும் மனமுருகி ப்ரார்த்தித்துக் கொள்வதற்கான ஸ்தோத்ரங்களை ஏராளமாகச் செய்து கொடுத்தார்.

“தந்த்ரங்கள்” என்பதாக உருவாகிக் கொண்டுபோன வழிபாட்டு சாஸ்த்ரங்கள் பல இருக்கின்றன. அறுபத்து நாலு தந்த்ரம் என்று ஒரு கணக்கு. ‘ஸெளந்தர்யலஹரி’யில் (இதை) ‘சதுஷ்ஷஷ்ட்யா தந்த்ரை:’ என்று சொல்லியிருக்கிறது*. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு தந்த்ரம் உண்டு. ஆகமம் என்றும் சொல்வதுண்டு. இவை வேத அடிப்படைக்கும் கொள்கைகளுக்கும் வித்யாஸமாகப் போய் தாங்களே independent-ஆன ஆதார சாஸ்த்ரங்கள் மாதிரி ஆகுமானால் அப்போது இவற்றை ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று ஆசார்யாள் நிலைநாட்டினார். வேதத்தை அநுஸரித்துப் போகும் தந்த்ரங்களையே எடுத்துக் கொள்ளலாமென்று சொல்லி, ஜனங்கள் க்ரூரமான, பீபத்ஸமான வழிபாட்டு அம்சங்களை விடும்படிப் பண்ணினார், சமனம் பண்ணினார். தந்த்ரங்களில் கௌல மார்க்கம், மிச்ர மார்க்கம், ஸமய மார்க்கம் என்று உள்ள மூன்றில் கௌலம் (வேதத்தைச் சாராமல்) ‘இன்டிபென்டென்டா’யிருப்பது. மிச்ரம் வேத வழிகளையும் அங்கங்கே கலந்து கொள்ளும். ஸமய மார்க்கம் தான் வேதத்தையே அநுஸரித்தது. ஆசார்யாள் அதைத் தான் ஸ்தாபித்தார். அதனால்தான் மதம் என்பதற்கே ஸமயம் (சமயம்) என்று பேர் சொல்கிறோம்.

அப்புறம், அதாவது ஆசார்யாளுக்குப் பிற்காலத்தில் வந்த ந்யாய சாஸ்த்ரக்காரரான உதயனாசார்யார் என்பவர் புத்திவாதமாக, அதாவது தர்க்க ரீதியாகவே ஸ்வாமி உண்டு என்பதற்கு எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லி பௌத்த மதக் கருத்து இந்த அம்சத்தில் ஸரியேயில்லை என்று நிலைநாட்டினார். “ந்யாய குஸுமாஞ்ஜலி” என்ற அவருடைய புஸ்தகத்தின் மூலம் பௌத்தர்களின் நிரீச்வரவாதத்தை அவர் தர்க்கரீதியில் தகர்த்தார்.

உதயனாசார்யார் ஆசார்யாளின் அவதாரம் முடிந்து கொஞ்ச காலத்துக்குள் வந்து அவர் பாக்கி வைத்து விட்டுப் போயிருந்ததைப் பூர்த்தி பண்ணியவர்.

இது பக்தியுபாஸனையில்.

__________________________________________________________________________________________________

* 31-வது ச்லோகம்

__________________________________________________________________________________________________

Establishment of God’s doctrines

As mentioned earlier, among all these, bhakti is naturally inherent in all the people.  When there is a Universe like this and everything is happening systematically with reason and regulation, it is only natural to occur to anyone that there must be one Swami, who is most competent, who has created it, and is also managing it as a great administrator.  It would be surprising only if it did not occur that way!  One needs to know to carry out complicated and intelligent arguments to prove that Swami does not exist!  Buddhists did that.  People followed them not for these arguments but for other matters.  Even while following Buddhism, people’s hearts were not bereft of bhakti and devotion to Eswara. Later, not having any other alternative, Buddhists also had to provide for devotional worship in some way. I have already told about these earlier.

In such circumstances, Acharya did not have to engage much in disputation to establish bhakti – the path of Vedas. ‘Unlike the need to put forth arguments and defeat the opponent in the case of higher knowledge [jnana] – which involves intellect to a great extent, there is no need for any debates in the case of bhakti which naturally oozes in the heart. To enable the bhakti in people open up and get directed towards Eswara, it would be enough to compose many stotrams, make the temples spiritually sacrosanct by the power of mantras and streamline the procedures of worship.  People would give up the half-baked methods of worship being followed in Buddhism (including the cruel, vulgar methods of worship like Kaapaalikam [कापालिकम्], Vaamaachaaram [वामाचारम्] etc) and switch over to the Vedic method of worship.  We need not bother much about those intelligent Buddhists who put forth arguments.  Is it possible to make bhakti well up – which is supposed to ooze in the heart naturally – by making counter arguments?’ Acharya completed his task on these lines and left.

Therefore, in this regard, he did not engage much in debates except for pointing out emphatically, with reasons, that there is an Eswara, who is the material cause (Upaadaana Kaaranam- उपादानकारणम्) and instrumental cause (Nimitta Kaaranam -निमित्तकारणम्) for this Universe.

Just now I mentioned two words, upaadaana kaaranam and nimitta kaaranam.  It is not possible to move forward without explaining a little about these two words.  This should have been talked about earlier while explaining some of the differences between Advaita and other Vedic and Non-Vedic philosophies.

If an item has been produced, it must have been produced only with some raw material.  If there is an ornament, it must have been made with some metal like gold or silver.  If there is a house, it needs bricks.  Gold is the upaadaana kaaranam – material cause – for the ornament; brick is the upaadaana kaaranam for the house.

How did gold get converted into an ornament?  How did bricks turn into a house?  Gold became an ornament because of the goldsmith.  Bricks got converted into a house because of the mason.  The goldsmith and mason are the nimitta karanam.

In older texts, the example of pot will only be repeatedly mentioned.  Clay is the upaadaana karanam for the pot. Nimitta kaaranam is the potter.

The person or the thing producing something with the help of a raw material, is the instrumental cause, the nimitta kaaranam.

It is Advaita’s doctrine that Eswara is both the material and instrumental cause for the Universe to be there. It terms the universe (जगत् – jagat) as untrue [मिथ्या -Mithya]. It says the world gives an impression that it is permanent, though it is an impermanent reality; and that this illusion will vanish on attaining higher knowledge [ज्ञानम्].  However when the world is practically existing [व्यावहारिक सत्यम्], should there not be a raw material and a creator for creating it?  Advaita says that both these are only Eswara.  If He had created it with some other material, then there will be a question as to where from that material came and how it got created.  That is why, He himself should be the material and also the creator who has established the world.  If He is displaying himself – with the help of his Maya shakti – as the Universe, should he not be both the factors, the material and instrumental causes?   The universe is a dream created by Him using Maya.  We are having a dream.  Do not all the things (materials – उपादानम्) in the dream come only from within us?  Are we not the cause (nimitta kaaranam) – for creating that dream world?

While there were many philosophies which claimed that there was no Swami at all, or that Swami was only a Nimitta Karana for creating the world with the help of atoms as raw material, Advaita established that He was both the causes.

Sankhyam (साङ्ख्यम्) claims that Eswara is not the creator of the world. But is not the concept of Eswara defined as ‘jnanam’ – the Ultimate Knowledge? Sankhyas would argue that this inanimate world cannot originate from such a source – i.e. pure consciousness.  What Acharya said is this: It is true that this inanimate world has not been created by the pure consciousness.  That is, this inanimate world is not a permanent reality.  It is only an illusion on account of Maya.  The thought that it is physically inanimate is also an imaginary thought due to Maya.  As science now says, matter is also one form of energy; it is an appearance due to imaginary perception. Just as this imaginary thoughts stem in our mind, the thought of this world has stemmed in the mind of Eswara – who is the source of all knowledge and is also the pure consciousness; in this, there is no contradiction in something being pure consciousness or something being inanimate – is what Acharya established.  He showed that that there is one Eswara, who is the creator of the imaginary world.

‘Karta’ [कर्ता – the doer] is a word in Brahmasutram (ब्रह्मसूत्रम्). Christians have adopted that word and refer to their God as ‘Kartar’ [கர்த்தர் in Tamizh].

Whether it is imagination or illusion (Maya), should there not be a doer who imagines?  Acharya refuted the Sankhyas by saying that the doer [कर्ता] was Eswara.

He refuted the Meemamsikas by explaining that Eswara is the bestower of the results (फलदाता).  The argument of Meemamsakas which said ‘Activities – observance of one’s prescribed duties – gives results on its own; there is no need for Eswara to be there to bestow the results’ was objected to; the counter argument put forth by Acharya said that it is Eswara – the supremely intelligent – who decided the result for the various tasks carried out and provided an order in this world by linking crores of such activities which are entwined with each other.

Rather than putting forth more arguments in respect of Swami, Acharya did whatever was required to foster Bhakti, thereby ensuring that there was no following for Buddhism among the masses.  He improved the methods of worship by weeding out the cruel and despicable aspects, and made it attractive to the people by ensuring that worship is offered with love, using Vedic mantras. He visited temples across the country and kindled the sanctity in temples, enhancing their influence.  By placing sacred diagrams/ devices called Yantras [यन्त्रम्] in many temples, he enabled the divine power to spread. To enable everyone – right from a child to very well learned scholar – pray earnestly, he composed and gave many Stotras.

There are several Sastras pertaining to worship, which have evolved as “Tantras”.  There is a count that there are sixty four Tantras. (This) is mentioned in ‘Soundaryalahari*’, as ‘chathush shashtyaa Tantrai:’ [चतुष् षष्ट्या तन्त्रैः].  Each deity has a Tantra.  It is also called as Agama (आगम). Acharya established that if these procedures had developed in a manner contrary to the Vedas and its doctrines, and were independent basic Sastras by themselves, then they are not to be accepted.  By pointing out that Tantras which are aligned with Vedas may only be adopted, he made people give up crude and despicable methods of worship.  Among the three kinds of Tantras – viz. Kowla maarga [कौल मार्ग], Mishra maarga [मिश्र मार्ग] and Samaya maarga [समय मार्ग], Kowla was not aligned with Vedas and was independent.  Mishra adopted Vedic ways here and there. Samaya was the only one, fully aligned with Vedas.  Acharya established that only.  That is why we refer religion by the name ‘Samayam’.

Subsequently, Udayanaacharya, who came after the lifetime of Acharya and who was a Nyaya Sastra follower, put forth as much as possible, by way of intellectual arguments, in support of the fact that Eswara was indeed there, and established that the precepts of Buddhism were totally wrong in this aspect.  With the help of his book, “Nyaya Kusumaanjali”, he broke the atheistic (निरीश्वरवाद) argument of the Buddhists, through his arguments and logic.

Udayanaacharya appeared on the scene within a short time after the conclusion of Acharya’s incarnation and completed whatever was left out by Him.

This is in Bhaktiupasana (भक्ति उपासना) – the bhakti mode of worship.

_________________________________________________________________________

* 31st sloka [of Soundaryalahari]

_______________________________________________________________________________________________________________________

Audio

 

 



Categories: Deivathin Kural

Tags: ,

3 replies

  1. While most people are gloating over Mahaperiyava miracles, doing special pujas to get special favors from Periyava etc Sowmya and team are doing what really is a puja to periyava. Week after week they read, understand, assimilate a chapter from deivathin kural, record the chapter with clear diction, draw a picture to depict the concept, translate into English etc like a puja just for the happiness in doing it. Incidentally a few lucky ones actually use it and benefit. But this will surely be a treasure for generation after generation. I especially marvel at the drawing every time. So simple and yet so creative and profound. 🙏

  2. சைவம் தழைத்தோங்க
    சிவனும் நாடி வந்து
    கச்சி ஏகம்பரன் குடி நின்ற
    கோவிலுடன் நாதனையும்

    வைணவம் தழைத்தோங்க
    விஷ்ணுவும் நாடி வந்து
    கச்சி வரதன் குடி நின்ற
    கோவிலுடன் நாதனையும்

    சாக்தம் தழைத்தோங்க
    சக்தியும் நாடி வந்து
    கஞ்சி காமாக்ஷி குடி நின்ற
    கோவிலுடன் நாயகியையும்

    பக்தி தழைத்தோங்க
    பகவன் சங்கரரும் நாடி வந்து
    காஞ்சி காமகோடி புண்ய
    மடமுடன் சத்குருவையும்

    எழிலாய் தூரிகையில்
    தீட்டி நின்ற காரிகையே
    அற்புதம் அருமை நாளும் நின்
    வரைகலை வளர்க வளர்க !

    சந்தர் சோமயாஜிலு @
    சிவ ராம தாஸன்

  3. மஹா பெரியவா எவ்வளவு அழகாக பாமரனுக்கும் புரிகிறார் போல் பௌத்த மதம், நம் சனாதன மதம் பற்றி விளக்கியுள்ளார் ! பாரதத்தில் பிறந்து, நம் ஆச்சார்யா சீளர்களின்.குடை நீழலில்.வாழ நாம் என்ன தவம் செய்தோமோ !
    சௌம்யா வின் விளக்கமும், அதனை விளக்கும் விதமான படங்களும் தத்ரூபாமாக அமைந்துள்ளது ! பெரியவா சரணம் ஸ்மரணம்.

Leave a Reply

%d bloggers like this: