95. Sri Sankara Charitham by Maha Periyava – Three-fold objection of Buddhism

Jaya Jaya Sankara Hara Hara Sankara – A small chapter where Periyava explains the high level differences between Sanatana Dharma and Buddhism.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for a thoughtful drawing and audio. Rama Rama.


பௌத்தத்தின் மும்முனை ஆக்ஷேபணை

பௌத்தம் வைதிக தர்மத்தின் கர்மாநுஷ்டானம், பக்தியுபாஸனை, ஞான ஸித்தாந்தம் ஆகிய மூன்றையுமே ஆக்ஷேபிப்பது.

ஆனாலும் இவற்றில் பௌத்தர்களின் ஸித்தாந்தம் ஞான ரீதியில் ஓரளவுக்கேனும் அத்வைத்தோடு ஒத்துப் போவதே. மாயைக் கொள்கை அவர்களுக்கும் உண்டு. மனஸை அப்படியே அழித்துப் போட்டுவிடுவதுதான் அவர்களுடைய நிர்வாண லக்ஷ்யமும். ஆனால் மனஸ் அழிந்தபின் ப்ரகாசிக்கும் ப்ரஹ்ம பூர்ணத்தைச் சொல்லாமல் சூன்யமாக அவர்கள் முடித்து விடுவது பெரிய வித்யாஸம். இன்னும் சில வித்யாஸங்களும் உண்டு. அதெல்லாம் சொல்லிப் புரிய வைப்பதென்றால் கஷ்டமான பாடம் நடத்துகிறமாதிரி ஆகிவிடும். மொத்தத்தில் ஞான ஸித்தாந்தத்தில் நம் வேதாந்தத்துக்கு பௌத்தம் அடியோடு மாறுபட்டதல்ல.

பக்தி என்று எடுத்தால், ஸ்வாமி என்பதையே ஒப்புக் கொள்ளாததால் பௌத்தம் வைதிக தர்மத்திற்கு அடியோடு வித்யாஸமாயிருக்கிறது. கர்மா என்று பார்க்கும் போதும் யஜ்ஞாதிகள் கூடவே கூடாது, இன்னின்னாருக்கு இன்ன அநுஷ்டானம் என்று ஒழுங்குபடுத்தியுள்ள வர்ண தர்மமும் கூடாது என்றதால் அது வேத மதத்துக்கு அடியோடு ஆப்போஸிட்டாக இருக்கிறது.

__________________________________________________________________________________________________________________

Three-fold objection of Buddhism

Buddhism objected to all the three aspects of Vedic Dharma, viz., the act of practising one’s duties [Karmanushtana – कर्मानुष्ठान], worshipping with devotion [Bhakti Upasana – भक्ति उपासना] and the doctrine of higher Knowledge [Jnana Siddhanta – ज्ञान सिद्धान्त].

But the philosophy of Buddhists is in alignment with Advaita, at least to some extent in terms of higher knowledge.  They also have the concept of Maya (माया).  Their nirvana goal is also to destroy the mind completely.  However, the big difference is that they do not talk about fulfilment – about Brahmam glowing bright – after the destruction of the mind; they say that the end is nothingness [शून्यम्].  There are other differences too.  If those things have to be explained and comprehended, it would amount to teaching a very difficult lesson.  On the whole, in terms of ‘philosophy of supreme knowledge’ [ज्ञान सिद्धान्त], Buddhism was not very different from our Vedanta.

If we talk about bhakti, Buddhism is totally different from Vedic Dharma since the concept of Swami itself is not accepted. It is entirely opposite to Vedic religion as regards Karma, since it says that yajna(s) should not be there at all; it also opposes the caste order which has stipulated different duties for different people.

____________________________________________________________________________________________________________________

Audio




Categories: Audio Content

Leave a Reply

%d bloggers like this: