Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sorry for a bit of long break in between…..The greatness of Adi Acharyal Sri Govinda Bhagawathcharyal continues to be fabulously explained by Sri Periyava.
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another befitting drawing and audio. Rama Rama.
கோவிந்தரின் சிறப்பு
கோவிந்த பகவத்பாதர் பதரிகாச்ரமத்தில் இருக்கும் போது வ்யாஸாசார்யாளின் தர்சனம் அவருக்குக் கிடைத்தது.
அவதாரமாக வரப்போகிறவருக்கு கோவிந்த பகவத்பாதர்தான் குருவாயிருக்க வேண்டுமென்ற திவ்ய ஸங்கல்பத்தை அவருக்குத் தெரிவிக்க இது ஸமயமாயிற்று. வருங்காலத்துக்கெல்லாம் ப்ரஹ்ம வித்யை போவதற்கு அங்குரார்ப்பணமான பெரிய விஷயத்தைப் பற்றிய அறிவிப்பு அல்லவா? அதனால் சுகாசார்யாள், கௌடபாதாசார்யாள் ஆகியவர்களும் அங்கே கூடியிருந்தார்கள்.
வ்யாஸர் கோவிந்த பகவத்பாதருக்கு ஈச்வர நிர்மிதமாக ஏற்பட்டிருந்த பெரிய கார்யத்தைக் கொடுத்தார்.
“நம்முடைய (ப்ரஹ்ம) ஸூத்ரத்துக்கு ஸரியாக அர்த்தம் பண்ணி அத்வைத வேதாந்தத்தை லோகத்தில் ஸ்தாபிப்பதற்காகப் பரமேச்வரனே அவதாரம் பண்ணப் போகிறான். ஸந்நியாஸியாயிருந்து துர்மதங்களைக் கண்டித்து வைதிக தர்மத்தை நிலைநாட்டப் போகிறான். லோக ஸம்ப்ரதாயத்தையொட்டி அந்த அவதார புருஷருக்கு ஒருத்தர் ஆச்ரமம் கொடுத்து உபதேசம் பண்ண வேண்டும். இந்தப் பெரிய கார்யம் உனக்குத்தான் ஸங்கல்பிக்கப்பட்டிருக்கிறது.”
“தக்ஷிணத்தின் கோடியில் கேரள தேசத்தில் அவதாரம் ஏற்படப் போகிறது. அவதாரக்காரர் பால்யத்திலேயே உபதேசம் வேண்டி அங்கிருந்து புறப்பட்டு வருவார். நாமானால் இங்கே வட கோடியில் ஹிமாசலத்தில் இருக்கிறோம். இத்தனாந்தூரம் அவர் நடந்து வரும்படி விடக்கூடாது. (காரணம்:) அவதாரம் என்பது ஒன்று; குழந்தை என்பது இன்னொன்று; அதோடுகூட சிஷ்யன் குருவைத் தேடிப் போகிற மாதிரியே குருவும் ஸச்சிஷ்யனைத் தேடிப் போக வேண்டும். அதனால் பாதிதூரம் அவர் வருவதாகவும் பாதி தூரம் நீ போவதாகவும் இருக்கட்டும். இங்கேயிருந்து தேச மத்திக்குப் போ.”
“நர்மதா தீரம் உனக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட இடம்தானே? அங்கே போய், நீ மஹாபாஷ்ய உபதேசம் பெற்றுக் கொண்ட அரச மரத்தடியிலேயே காத்துக் கொண்டிரு. அங்கேயுள்ள குஹையில் ஆத்மாநுஸந்தானம் பண்ணிக் கொண்டு உட்கார்ந்திரு. உரிய காலத்தில் அவர் வந்து சேரும்போது ஆச்ரமம் கொடுத்து உபதேசம் பண்ணு” என்று வ்யாஸர் சொன்னார்.
‘ரவுன்ட் டேபிள் கான்ஃபரன்ஸ்’ என்று உலகத் தலைவர்கள் கூடி ரிஸொல்யூஷன் பாஸ் பண்ணுகிற மாதிரி (தீர்மானம் நிறைவேற்றுவது போல்) வ்யாஸர், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் ஆகிய நாலு பெரிய மஹான்கள் கூடிய மஹாநாட்டில் இப்படி ரிஸொல்யூஷன் பாஸ் ஆயிற்று!
கோவிந்த பகவத்பாதர் நர்மதை நதிக்கரைக்குப் போய்ச் சேர்ந்தார். பூர்வாச்ரமத்தில் எந்த மரத்துக்கு மேலே சிஷ்யராக இருந்து கொண்டு வ்யாகரண உபதேசம் கேட்டாரோ, அதே மரத்தின் அடியில் ஒரு குகையில், தாம் ப்ரஹ்ம வித்யோபதேசம் செய்வதற்கான சிஷ்யரை எதிர் பார்த்து உட்கார்ந்து கொண்டு, அப்படியே நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.
மஹாவிஷ்ணு ஹ்ருதய கமலத்தில் நடராஜ தர்சனம் கண்டதில் உண்டான அவரது சரீர கனத்தை ஆதிசேஷனால் தாங்க முடியவில்லை என்பதில் ஆரம்பித்து, சிதம்பரத்தில் நடந்த பாடம், கௌடபாதர் – கோவிந்த பகவத்பாதர் சரித்ரங்கள் ஆகிய எல்லாம் ‘பதஞ்ஜலி சரித’த்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறது. அந்த இரண்டு பேரையும் பரம குருவாகவும் குருவாகவும் பெற்ற ஆசார்யாளின் சரித்ரம் கடைசியான அதன் எட்டாம் ஸர்க்கத்தில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருடைய சரித்ரம்தான் விஸ்தாரமாக ‘சங்கர விஜயம்’ என்றே உள்ள புஸ்தகங்களில் சொல்லியிருக்கிறதே என்பதால், பூர்வாசார்யர்கள் சரித்ரத்தை மட்டும் விரித்தும், இதைச் சுருக்கியும் (ராமபத்ர தீக்ஷிதர்) எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.
ராமபத்ர தீக்ஷிதரே வையாகரணியாக (வ்யாகரணத்தில் தேர்ச்சி பெற்றவராக) இருந்ததால் மஹாபாஷ்யம் செய்யப்பட்டு ப்ரசாரமானதை ஒரு காவ்யமாக எழுத வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாயிருந்தது. மஹாபாஷ்ய கர்த்தாவின் பெயரில்தானே புஸ்தகமே ‘பதஞ்ஜலி சரிதம்’ எனப்படுகிறது? எனவே அதில் ‘சங்கர விஜய’த்தை விஸ்தாரமாகச் சேர்க்க இடமில்லை. ஆனாலும் புண்ய சரித்ரத்தைச் சொல்லாமல் விடப்படாது என்று, சுருக்கமாக இருந்தாலும் தம்முடைய ஆசார்ய பக்தியைக் கொட்டி எழுதிவிட்டார்.
காலடியில் ஆற்றில் பாலசங்கரரின் காலை முதலை பிடித்ததில் இந்தக் கதையை ஆரம்பித்திருக்கிறது. “அத்ராந்தரே ஸரிதி நக்ர க்ருஹீத பாத:” என்று ஆரம்பம். ‘ஸரிதி’- ஆற்றில், ‘நக்ர’-முதலை (யால்); ‘க்ருஹீத பாத:-பிடிக்கப்பட்ட பாதம்.
அப்புறம் ஆசார்யாள் குருவைத் தேடிப்போய் உபதேசம் பெற்றது. காசிக்குப் போனது. பாஷ்யம் பண்ணியது, திக்விஜயம் பண்ணியது முதலியவற்றைச் சொல்லி ஸம்க்ஷேபமாக (சுருக்கமாக) ஒரு கடைசி ச்லோகத்துடன் முடித்திருக்கிறது :
கோவிந்த தேசிகம் உபாஸ்ய சிராய பக்த்யா
தஸ்மிந் ஸ்திதே நிஜ மஹிம்நி விதேஹ முக்த்யா |
அத்வைத பாஷ்யம் உபகல்ப்ய திசோ விஜித்ய
காஞ்சீபுரே ஸ்திதிம் அவாப ஸ சங்கரார்ய : ||
‘சங்கராசார்ய’ என்பதை ‘சங்கரார்ய’ என்று சொல்லி முடித்திருக்கிறது. மீட்டரை உத்தேசித்து இப்படி (‘ஆசார்ய’ என்பதை ‘ஆர்ய’ என்று) சொல்லியிருப்பதும் நல்ல அர்த்தம் கொடுக்கிறது. ‘ஆர்யர்’ என்றால் உயர்ந்தவர், உத்தமமானவர். அதுதான் ‘ஐயர்’ என்றானது. சங்கரர் என்ற உயர்ந்த புருஷர் ‘சங்கரார்யர்’. அவர் கோவிந்த குருவை வெகுகாலம் பக்தியுடன் உபாஸித்து வந்தார், அதாவது குரு சுச்ரூஷை செய்துவந்தார்: “கோவிந்த தேசிகம் உபாஸ்ய சிராய பக்த்யா”. ஆசார்யாள் பல வருஷங்கள் கோவிந்த பகவத்பாதருடன் இருந்ததாகச் சொல்வதற்கில்லை. எட்டு வயஸில் ஸந்நியாஸியான அவர் பதினாறு வயஸுக்குள் காசிக்குப் போய்த் தம்முடைய பாஷ்யங்கள் எல்லாவற்றையும் எழுதிவிட்டார். ஆகையால் நர்மதைக் கரையில் அவர் குருவுடன் அதிக வருஷங்கள் இருந்திருக்க முடியாது. ஆனாலும் அவர் செய்த இடை விடாத சுச்ரூஷையே பல வருஷம் பணிவிடை செய்வதற்கு ஸமமாக இருந்ததால் ‘சிராய’ என்று போட்டிருக்கிறது.
லோகத்துக்கு வழிகாட்டியாக ஆசார்யாள் சிஷ்யராகி கோவிந்த தேசிகரிடம் உபதேசம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்தும் லோகத்துக்கு வழிகாட்டியாக குரு சுச்ரூஷை பண்ணினார்.
‘வந்தக் கார்யம் ஆச்சு! வ்யாஸாசார்யாள் பொறுப்புக் கொடுத்த பெரிய கார்யத்தை நல்லபடி முடித்தாயிற்று. இனிமேல் சரீர த்யாகம் பண்ணிப் பரமாத்மாவோடேயே கலந்துவிட வேண்டியதுதான்’ என்று கோவிந்த பகவத்பாதர் நினைத்தார். ப்ரஹ்ம ஞானம் பெற்றபின் சரீரத்திலிருக்கும் போதே முக்தராகத்தான் இருந்தார். அதற்கு ஜீவன் முக்தி என்று பெயர். அப்புறம் சரீரமும் போய்விடும். அதற்கு விதேஹ முக்தி என்று பெயர். ஜீவிக்கும்போதே ப்ரம்மாநுபவமான மோக்ஷத்திலிருப்பது ஜீவன் முக்தி. ஜீவனம் முடிந்து தேஹம் போனபின் ஏற்படுவது விதேஹ முக்தி.
அப்படி அவர் லோகவாழ்க்கையை முடித்து, சரீரத்தை விட்டு விதேஹ முக்தியடைந்தார். தன்னுடைய நிஜ ஸ்வரூபமான ப்ரஹ்மம் என்பதன் மஹிமையில் நிலைத்து விட்டார்! “தஸ்மின் ஸ்திதே நிஜ மஹிம்னி விதேஹ முக்த்யா.”
இப்படி அவர் நிர்யாணமடைந்த பிறகே ஆசார்யாள் குருவாகப் பணி ஆரம்பித்தாற்போல மேலே ச்லோகத்தில் இருக்கிறது. ஆனால் இன்னொரு விதமான வ்ருத்தாந்தமும் இருக்கிறது. அதன்படி, ஆசார்யாள் ஜகதாசார்யாளாக திக்விஜயம் செய்து, கைலாஸம் போய் ஈச்வரனிடமிருந்து பஞ்ச லிங்கங்களைப் பெற்று, பதரி, கேதாரம் முதலிய இடங்கள் வழியாகத் திரும்பும்போது கௌடபாதரையும் கோவிந்த பகவத்பாதரையும் தர்சனம் பண்ணி, ‘தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்’ சொல்லி அடிக்கு அடி நமஸ்காரம் செய்தார் என்று தெரிகிறது.
________________________________________________________________________________________________________________________
Greatness of Govindar
When Govinda Bhagavatpada was in Badarikashrama, he got the darshan of Vyasacharya.
This was the time to convey to Govinda Bhagavatpada the divine will – that he was going to be the Guru to the person who was going to come as an incarnation. This announcement was like planting a shoot [अङ्कुरार्पण] for the important matter which was going to ensure Brahma Vidya for all times to come, wasn’t it? Therefore, Sukacharya and Gowdapadacharya had also joined there.
As determined by Eswara, Vyasa entrusted the big assignment to Govinda Bhagavatpada.
He said,
“Parameswara himself is going to incarnate in order to correctly interpret our (Brahma) Sutra, and establish the complete knowledge of the Advaita Vedanta in the world. As a Sanyasi, He is going to refute the illusory religions and establish the Vedic religion. As per the traditions followed in the world, the incarnate should be initiated into Sanyaasashrama and given upadesam [उपदेशम्]. It has been willed to entrust only you with such a big task”.
“The incarnation is going to take place in Kerala, in the southern extreme. The incarnate will leave that place in his childhood itself, and come seeking for the teaching. We are in Himachal, in the northern extreme. He should not be made to walk such a long distance. (Reason being) One, that he is an incarnate, Second, he is a child. Further, just as a disciple seeks his Guru, a Guru should also seek out a true disciple. Therefore, let it be such that He comes half the way and you go half way. You go from here to the middle of the country”.
“Is not the holy place, the banks of Narmada already familiar to you? You go there and wait under the same peepul tree where you received the teachings of Mahabhashyam. You can be in the cave there, meditating on the self. When He comes there, at the proper time, initiate him into Sanyasahrama and impart the upadesam to him”.
Just like world leaders pass resolutions (take decisions) in a Round Table conference, this resolution was passed in the great conference attended by the four great Sages, Vyasa, Suka, Gowdapada and Govinda Bhagavatpada.
Govinda Bhagavatpada reached the banks of Narmada. He got immersed in meditation of the Self, sitting in the cave under the very same tree on which he had received the instructions on Vyakarana, in the previous stage of his life, awaiting the disciple for whom he was to give the initiation to the highest truth (ब्रह्मविद्या उपदेश).
Starting with the description of how Adisesha was unable to bear the weight of Mahavishnu which increased on witnessing Nataraja’s dance in his lotus heart, the lessons that were conducted in Chidambaram, the biographies of Gowda Pada – Govinda Bhagavatpada, etc., have been described elaborately in ‘Patanjali Charitam’. The biography of Acharya who had these two persons as his Parama Guru [परमगुरु – Guru’s Guru] and Guru respectively, is given in brief in the eighth chapter which is the last in that book. It appears that Acharya’s history has been given in brief (by Ramabhadra Deekshitar), while the biographies of the preceding Acharyas have been elaborated, since Acharya’s biography is in any case, elaborately given in the books with the name ‘Sankara Vijayam’.
As Ramabhadra Deekshitar himself was an expert in Grammar (वैयाकरणी), his intention was to bring the Bhashyam, which has been written and popularised, as an epic text. Is not the book named as ‘Patanjali Charitam’ after the person who had written grammar originally? Therefore, there is no scope for including ‘Sankara Vijayam’ elaborately in that. However, in order to not leave out the holy biography, he poured out his devotion to his Acharya and wrote it, albeit in brief.
The story starts with the incident about the crocodile clutching the foot of the child Sankara in the river in Kalady. It starts as “Atraantare sariti nakra gruheeta paadah:” [अत्रान्तरे सरिति नक्र गृहीत पादः]. ‘sariti’ – in the river, ‘nakra’ – (by the) Crocodile; ‘gruheeta paada: – the foot which was caught.
Subsequently, it describes briefly about Acharya going in search of his Guru, obtaining initiation, going to Kasi, writing the Bhashyam, visiting places in all directions (दिग्विजय), and concludes with a last verse:
govinda desikam upaasya chiraaya bhaktyaa
tasmin sthite nija mahimni vidheha muktyaa I
advaita bhashyam upakalpya disho vijitya
kaanchipure sthitam avaapa sa sankaraarya : II
[गोविन्द देशिकम् उपास्य चिराय भक्त्या तस्मिन् स्थिते निज महिम्नि विदेह मुक्त्या।
अद्वैत भाष्यम् उपकल्प्य दिशो विजित्य काञ्चीपुरे स्थितम् अवाप स शङ्करार्यः]
It has ended mentioning Sankaracharya as Sankaraarya. Mentioning it like this,(‘Arya’ instead of ‘Acharya’) takes into account alignment with the meter (syntax), and also gives a good meaning. ‘Arya’ [आर्यः] means ‘great man’, ‘person of integrity’. That has now become ‘Iyer’. Sankara was a great person – ‘Sankaraarya’. He was highly devoted to his Govinda Guru for a long time; that is, he rendered service to his Guru. “govinda desikam upaasya chiraaya bhaktyaa”. It cannot be said that Acharya spent many years with Govinda Bhagavatpada. After becoming a sanyasi at eight years of age, he had completed writing all his Bhashyams at Kasi by the age of sixteen. Therefore, he would not have been with his Guru, at the banks of Narmada, for many years. Still, since the service rendered ceaselessly by him was equivalent to service rendered for many years, it is mentioned as ‘chiraaya’ (चिराय).
Acharya became a disciple and took initiation from Govinda Desika, as an example to the world. He continued rendering service to his Guru, setting an example.
Govinda Bhagavatpada thought, ‘The job for which I had come is over! The very big responsibility given by Vyasacharya has been completed successfully. Now I can give up this body and merge with Paramatma’. After receiving the Brahma Jnana, he was already a realised person, even while living with the physical body. This is called ‘jeevan mukti’ [जीवन्मुक्ति – emancipation while being alive]. Later, the body will also wither away. That is called ‘videha mukti’ [विदेहमुक्ति- merging with the Supreme on release from the body]. Experiencing emancipation while living is Jeevan Mukti. When that happens after the end of life, it is Videha Mukti.
He completed his worldly life, gave up the body and attained Videha Mukti. He got established in the glory of his true form of Brahmam! “tasmin sthite nija mahimni vidheha muktyaa”.
It is mentioned in the above verse that Acharya started his work as a Guru, only after he (Govinda Bhagavatpada) reached the heavenly abode. But there is another version also. According to this, it is learnt that as Jagadaacharya, (Spiritual Guru to the Universe), Acharya, travelled around in various directions, went to Kailash and received the Pancha Lingams (Five lingams) from Eswara and while returning via Badari, Kedar, etc. met Gowdapada and Govinda Bhagavatpada, recited the ‘Dakshinamurhty Ashtakam’ and did namaskaarams to them at the end of each line of the verse.
____________________________________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
Clicked Audio
On my iPhone
Couldn’t hear 🤔