Rare Mahaperiyava photo and few incidents shared in FB

Shared by Sri Suryanarayanan in FB. Sorry this incident is in Tamil – I hope someone could translate this.

எப்போதும் போல இன்றைக்கும் uber taxi யில் வரும்போது பேச்சு கொடுத்துகொண்டே வந்தேன். அரசியலில் நடக்கும் அநியாயங்கள், பள்ளிக்கூடம் என்ற பெயரில் நடக்கும் மத மாற்றங்கள் , அதனால் ஏற்படும் திசை மாறல்கள் இதை பற்றியெல்லாம் பேசிக்கொண்டே வரும்போது நான் கூறினேன் “இன்றைய கால கட்டத்தில் சாய்பாபா, மஹா பெரியவர் போன்ற மகான்கள் திரும்பவும் பிறந்தால் தான் நமக்கு விடிவு காலம் “என்ற ரீதியில் பேச்சு திரும்பிகொண்டிருந்தது . பாபாவை பற்றி தெரிந்து இருக்கலாமே தவிர மஹா பெரியவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு எண்ணம் தோன்றியது. இனிமேல் நமது டிரைவர்

“மகா பெரியவாளா அவரை போன்ற தெய்வம் இனியும் பிறக்கவே முடியாது. நீங்கள் என்ன வேண்டுமானால் நினைத்துகொள்ளுங்கள். ஆனால் அவரை பற்றி நினைத்தாலோ பேசினாலோ எனக்கு மயிர் கூச்செரிகின்றது. நான் சென்னையில் சூளைமேடில் வசிக்கிறேன். எனக்கு ஒரு 10/12 வயது இருக்கும் . (அப்போது பெரியவாளுக்கு 93 வயதிருக்கும்) இதே ஏப்ரல் மாதம் ஒரு பகல் வேளை . மகா பெரியவர் ஒரு கூண்டு வண்டியை பிடித்துகொண்டு நடந்து காலில் பாதுகை கூட இல்லாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ என்னென்னவோ அவரிடம் கொடுக்கிறார்கள். ஒருவர் ஒரு மூட்டை காசுகளை சமர்பிக்கின்றார். அதை அப்படியே எல்லாருக்கும் பிரித்து கொடுக்கிறார். பட்சணங்கள் சமர்பிக்கபடுகின்றன. அவைகளும் உடனேயே distribute செய்யபடுகிறது. நாங்களும் ஓடி ஓடி அவைகளை வாங்கி சாப்பிடுகிறோம். அப்போது சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த பட்ட பகலில் திடீரெண்டு ஒரு மேகம் மேலே கடக்கிறது. உடனே ஒரு மணி நேரம் விடாது மழை கொட்டி தீர்த்தது. இது எப்படி சார் , நம்பவே முடியவில்லை.”

அடுத்து ஒரு நிகழ்ச்சி, அண்மையில் நடந்தது.

“சார், நான் ஒரு businessman . கிட்டத்தட்ட 60/70 லட்சங்கள் நஷ்டம் அடைந்து இருக்கிறேன், ஊர் முழுக்க கடன்கள், cheque bounce கேஸ் என்று மிகவும் தொல்லையில் இருந்தேன். அப்போது கால் டிரைவராக வேலை பார்த்து கொண்டிருந்தேன் (என்னுடைய 6/7 வண்டிகளை விற்றுவிட்டு திரும்பவும் வாழ்கை நடத்துவதற்காக இந்த வேலையை செய்ய ஆரம்பித்தேன்). அப்போது என்னுடன் ஒரு குடும்பம் காஞ்சிபுரம் வந்தது. வேறு வேலையாக வந்தவர்களை நான் மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு அழைத்து சென்றேன். நானும் மனமார வேண்டிக்கொண்டேன். “பெரியவா , நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன், எனக்கு தாங்க முடிகிற அளவுக்கு என் கஷ்டங்களை குறையுங்கள் “. நீங்கள் நம்ப மாட்டீர்கள். அங்கிருந்து திரும்பிவந்தவுடன், என் நிலைமை மாறியது, என்னை தொந்திரவு செய்தவர்கள் எல்லாம் காணாமல் போயினர். நானும் மெல்ல மெல்ல கஷ்டப்பட்டு முக்கால் வாசி கடன்களை அடித்துவிட்டேன். இன்னும் ஒரு 6/7 மாதங்கள் கஷ்டப்பட்டால் எல்லா கடனையும் அடைத்துவிட்டு நிம்மதியாக என் குடும்பத்தை பார்த்துகொள்வேன். ”

அதற்குள் நான் சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டேன். எப்போதும் போல என்னுடைய பாட்டை பாடினேன் ” பெரியவாளை எப்போதும் வணங்குங்கள். உங்களால் முடிந்து உதவியை எல்லா ஜீவராசிகளுக்கும் செய்யுங்கள் “என்று நன்றி கூறி விடை பெற்றேன்.Categories: Devotee Experiences, Photos

4 replies

  1. It is always good to read these incidents to remind myself of how Bhakti and surrender should be

  2. I was travelling in Uber taxi and chatting with the driver as usual, on various subjects like atrocities in politics, on the name of school, how religious conversions are taking place and its consequences, etc. While chatting, I was mentioning, “To fix these challenges, we need reincarnations of Maha Periva and Sai Baba again”. I thought the Driver might have knowledge of Baba but Maha Periva. To my surprise, the Driver said, “Sir, we cannot get divine figure such as Maha Periva again. Soon you spoke about Maha Periva I got goose bumping. I stay myself at Choolaimedu (a locality in Chennai) and I was around 10-12 years old (at that time Maha Periva would have been 93 years roughly). As now, it was the same April month with scorching hot day afternoon. Maha Periva was walking with the support of a vehicle and on barefoot. People en-route gave so many things like money, fruits, etc. Everything was being distributed then and there. We, people around, go forward and had a few of such things. You won’t believe me, from where the clouds gathered I do not know. All of sudden downpour started for an hour or so. How was this possible, I could not believe even today”.

    Later, he further narrated another incident of his life. “Sir, I was a businessman and faced a heavy loss to Rs. 50-60 lakhs. That developed severe debts around me and there was a ‘cheque bounce’ legal suit was also on me. I had 6-7 cars and I sold out everything, I became a car driver for livelihood. For some family work, with family came to Kanchipuram and we went to Maha Pariva Adhishtanam. I prayed with full heartedly that ‘Maha Periva, I am in full of debts and turbulence. You can only bring them down’. You must wonder if I say my problems were vanishing gradually and I could repay my debts almost 75%. For another 6-7 months of hardworking, I could come out of all my debts and would have a peaceful of life with my family”.

    As my dropping point arrived, I got down and as usual I say to everyone, I said to this Driver also, “Stay with Maha Periva all the time. Pl. extend helping hand to the needy as much as possible”, saying this I thanked him for safe ride.

    (Folks excuse me for any mistakes found – Balaji Canchi Sistla)

Leave a Reply

%d bloggers like this: