Many Jaya Jaya Sankara to Shri Ramkumar for the share and Smt. Bharathi Shankar for the translation. The finer points and significance of Gho Dhanam has been explained very well in this article. Rama Rama
கோ தானத்தின் முக்கியத்துவம்
வஸ்திர தானம், கோதானம், பூமி தானம், அன்னதானம் ஆகியவை விரைவில் பலன் தருபவை என்கின்றன தர்ம சாஸ்திரங்கள்.
அவற்றில் புனிதமான பசு தானம் செய்வதில் நான்கு வகை இருக்கின்றன.
நமக்கு தாயை போன்ற பசுக்களை தானம் செய்வது என்பது மிகப்பெரிய புண்ணிய செயலாகவும், பிறவி துன்பங்கள் நீங்கவும், நல்லதொரு சூழலை அவற்றிற்கு அமைத்து தரவும், அவற்றை விருத்தி செய்யவும், நமது முன்னோர்களால் நமது வேத நியமங்களின்படி செய்யப்பட்ட செய்துவரும் நற்செயலாகும். அவை.
ஜென்ம லாப கோதானம்:- வாழ்க்கைக் கால கட்டத்தில் மனிதன் முக்கியமாக மத்திய காலத்தில் கஷ்டப்படுவது கடன்களை வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாது இருப்பதால் தான். ரிஷிக்கடன், தேவகடன் பித்ருக்கடன், மானுஷ கடன் என்று நான்கு கடன்களில் தேவ கடனை வழிபாடுகள் செய்து தீர்த்துக் கொள்கிறான். ரிஷிக்கடனை முன்பிருந்த ஆத்ம யோக சாதுக்களின் பீடங்களின் தரிசனத்தால் தீர்த்துக் கொள்ள முடிகிறது. பித்ரு கடனை புண்ணிய தீர்த்தங் களுக்குச் சென்று எள்ளும் தண்ணீரும் இறைத்துத் தீர்த்துக் கொள்ள முடியும். மானுஷ கடனைத் தீர்க்க முடியாமல் துன்பப்படும் போது சில கடன் தீர்க்கும் பூஜைகளைச் செய்கிறோம். கோதானம் செய்கின்ற வீட்டிலும், கோபூஜை செய்யும் வீட்டிலும் இப்படிப்பட்ட கடன்கள் தங்காமல் விலகிப் போய்விடும்.
உத்க்ராந்தி கோதானம்:- ஒருவர் இந்த உலகத்தை விட்டு மேல் உலகம் செல்ல நேரிடும் சமயத்தில் அல்லது ஜீவன் பிரிந்து விட்ட 32 நிமிடங்களுக்குள் செய்யப்படுவதற்கு (ஜீவன் சாந்திப்படுத்திச் செல்லவைக்கும்) உத்க்ராந்தி கோதானம் என்று பெயர். அடுத்த பிறவியில் நற்குடிப் பிறப்பில் வர வேண்டும் என்று தெய்வங்களை சாட்சியாக வைத்து இந்த தானம் செய்யப்படுகிறது. சமீப காலமாக மட்டை தேங்காயை தாம்பூலத்தில் வைத்து பசுவின் விலையை பணமாக ரூ. 500 மட்டும் வைத்துக் கொடுத்து விடுகின்றனர். அதுவும் அழுது கொண்டே கொடுத்து விடுவார்கள். இது தவறான செயலாகும். கோதானத்தை மிக சிரத்தையுடன் செய்து மகிழ்ச்சியோடு இங்கு தகுதி உள்ளவருக்குக் கொடுக்க வேண்டும். தான வகையில் சிரத்தா தேயம் – மனமுவந்து கொடுக்கும் தானம்.
ஆசிரத்தா தேயம் – கொடுக்க மனஇல்லாமல் கொடுக்கிற தானம்.
பியா தேயம் – பெறுவரிடம் இருந்து பலனை எதிர்பார்த்துக் கொடுக்கின்ற தானம். கோதானம் செய்கின்ற போது முதல் வகையான சிரத்தா தேய முறையிலேயே செய்வதாக இருக்க வேண்டும். வைதீக தர்மசாத்திரத்தில் சொல்லப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு 16 தான வகைகளில் கோதானம் தான் அதிக பொருட் செலவில் வாங்கித்தர வேண்டி உள்ளது. கோமாதாவின் உருவ பொம்மையைக் கன்றுடன் வெள்ளி யில் செய்து கொடுப் பது இரண்டாவது வித மாகப் பலன் தருவதாக சொல்லப்படுகிறது. தேங்காயை வைத்து அதில் கோபூஜை செய்து பசுவை வர்ணித்து தானம் செய்வது மூன்றாவது விதமாகப் பலன் தருகிறது.
எனவே, உயிருடன் உள்ள உண்மையான பசுவைக் கன்றுடன் தருவது மட்டுமே கோதானமாகிறது. பசுவை ஒருவர் வீட்டுத் தொழுவத்தில் வைத்து பூஜை செய்து தரல் கூடாது. அப்படிச் செய்தால் அந்த வீட்டுக்குத் தரித்திரம் வந்து மகாலட்சுமி வெளியே போய் விடுவாள். வெளியில் அழைத்து வந்து முறைப்படி தாம்பூலத்தில் காசு வைத்து அதற்கும் வஸ்திரம் அணிவித்து பூ, பொட்டிட்டு இரண்ய கர்ப்ப மந்திரம் சொல்லித் தாரை வார்த்து நீர்விட்டு தர வேண்டும்.
வைதரணி கோதானம்:- இறந்தவர்களுக்காகப் பனிரெண்டாம் நாள் ஹோமம் செய்து பித்ரு லோகத்தில் சேர்த்துவிட்ட பிறகு அவர் அங்கிருந்து சொர்க்க லோகம் செல்ல வைதரணி என்ற நதியைக் கடக்க வேண்டி உள்ளது. இது மிகக் கொடூரமான நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புள்ள நதியாகும். விஷப் பாம்புகள், முதலைகள், நீர்வாழ் உயிரினங்கள், உள்ள வாழ்கின்ற இந்த நதியை கோமாதாவான பசு கடக்கும் போது அவை ஒன்றும் செய்ய முடியாது. இறந்த ஜீவன் அதில் ஏறி அக்கரையை அடைந்து விட்டால் சொர்க்கத்திற்கு எளிதில் சென்று விடலாம் என்பது நம்பிக்கை.
கர்மாங்க கோதானம்:- மனித வாழ்க்கையில் செய்யப்படுகிற சாந்தி கர்மங்களான,
59 வயதில் உக்ராத சாந்தி,
60 வயதில், 60-ம் கல்யாணம்,
70 வயதில் பீமரசாந்தி ,
80 வயதில் சதாபிஷேகம்
ஆகிய கால கட்டங்களில் செய்யப்படுவை கர்மா கால (கர்மாங்க) கோதானம் என்று சொல்லப்படுகிறது.
திருமணக் காலங்களில் கன்றுடன் உள்ள பசு பொம்மையை அரசாணிக்கால் நடும் போது பூஜை செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
இவ்வாறு செய்யப்பட்ட இத்தகைய புண்ணிய செயலை தகுந்த நேரத்தில் தகுந்த மனிதரிடம் தானம் செய்வதும் தானம் செய்தபின் பசுவின் எதிர்காலம் நன்றாக இருப்பதை உறுதி செய்வதும் மிக மிக முக்கியமான கடமையாகும்.
____________________________________________________________________________________________________________________________
Significance of Gho Dhanam
Charities like Vasthra Dhaanam (offering clothes), Gho Dhaanam (offering a cow,) Bhoomi Dhaanam (offering land) and Anna Dhaanam (offering food) are a few Dhaanams that bring in sure benefits very quickly, say the Dharma Shastras. Amongst them, there are four types in carrying out the most sacred one namely Gho Dhaanam.
They are good deeds deemed by our ancestors as per the rules prescribed in the Vedas — it is an act of Punya to offer the Cow which is like our mother in Dhaanam, to do away with our sufferings born out of repeated births, to create a good environment for the cows and to develop and multiply their species.
Janma Laabha Gho Dhaanam:- The main reason for all the sufferings of man during his lifetime –his middle age in particular– is his habit of incurring innumerable debts and being unable to repay them. Among the four debts namely, Rishi Kadan, Deva Kadan, Pithru Kadan and Maanusha Kadan, man removes the Deva Kadan by offering worship to God. It becomes possible to do away with the Rishi Kadan by visiting Peetams of Athma Yoga sages and having a Dharshan. Pithru Kadan can be nullified by visiting Punya Theerthas and offer Thil (sesame) and water. While feeling stuck and suffering from being unable to repay the Manusha Kadan, that is to other people, we undertake a few Pujas which will do away with debts. In houses where Gho Dhaanam is being done and Gho Puja being performed, such debts will be removed without a trace.
Uthgraanthi Dhaanam:- A Dhaanam offered for the sake of a person who is in deathbed and is about to leave this world behind and start for the Heavenly abode, done within thirty two minutes after his soul had departed (pacifying the soul and making the journey smooth), is called ‘Ukraanthi Dhaanam’. This Dhaanam is being done by having a Divine witness, with the aim of enabling the soul to gain rebirth in an elevated position. In recent times this has dwindled to the level of offering a Mattai Thengai (coconut with its outer shell), along with an amount of five hundred rupees for the cost of a cow. Even this will be given grudgingly. This is a wrong doing indeed. Gho Dhaanam should be done willingly and dedicatedly, offering it happily to the right person.
Dhaanam has been categorised into a few types like,
‘Shraddha Deyam’ — Dhaanam offered willingly and wholeheartedly.
‘Aashraddha Deyam’ — Dhaanam offered unwillingly and grudgingly.
‘Piya Deyam’ — Dhaanam offered with an expectation of getting benefits from the person who is receiving it.
While doing Gho Dhaanam it should be carried out in adherence with the first type namely ‘Shraddha Deyam’. Among the sixteen types of Dhaanam that are within the regulations formulated by Vaidhiga Dharma Shastras, it is Gho Dhaanam which involves a huge amount in buying and offering a cow. Offering a silver statue of a cow along with a calf is believed to give benefits as the second type. Placing a coconut and performing Gho Puja to it and impersonating it as a cow by attributing cow’s qualities to it and offering it as Dhaanam is believed to be giving the third type of benefits.
Therefore offering a cow along with its calf alone becomes Gho Dhaanam. One should never offer a cow as Dhaanam after performing Puja in his Cow shed. If it is done that way, the house will be poverty stricken with Goddess Mahalakshmi leaving the place. The Cow should be brought out of the house and adorned with Kumkum and flowers and then given away after chanting the Hiranya Garbba Mantra, offering water.
Vaidharani Gho Dhaanam: When a person dies,various rites will be conducted and after performing a Homam on the twelfth day and sending the person away to Pithruloka, the soul will have to cross a river called Vaidharani in order to reach Swargam. The river is a place prone to all sorts of cruel sufferings. The river which is full of poisonous snakes, crocodiles and water species cannot harm only the Gho Matha while crossing it. So there is a belief that if a person mounts on the cow and crosses the river and lands on the other bank , it will be very easy to reach Swargam from there.
Karmaanga Gho Dhaanam: The Shanthi Karmas performed during a person’s life span namely,
Ukraadha Shanthi at the age of 59,
Sashtiaptha Poorthi at 60,
Bheemaratha Shanthi at 70,
Sadhaabhishekam at 80,
which are being performed at various times of his life are called Karma Kaala (Karmaanga) Gho Dhaanam. The practice of performing a Puja for a cow and calf doll during marriage at the time of planting Arasaanikkaal, is still in practice right to this day.
While doing this Punya act , it is of prime importance to see to it that the Dhaanam is being done at the right time to the right person and also to make sure that the future of the cow is safe and good.
Categories: Deivathin Kural
When ever we interpret a meaning for a verse from vedha or upanishad we have to be careful.
First line : Give dhaanam with interest. Ok fine .,. coming to second line .,., Give dhaanam without interest.,., How can you fetch goodness when u give something without interest .,. and even if u give without interest, it may not fulfil the person who gets.,. may lead to negative usage
Interpretation for second line
Give dhaanam without interest on the item u give, But u should have interest in giving.
from talks of Sri Villur Swami
I’m asking again….just give me the correct definitions in English and Tamizh for both Shraddha Dhanam and Ashraddha Dhanam and I will fix it. Right now, they are loose sentences. Rama Rama
‘Shraddha Deyam’ — Dhaanam offered willingly and wholeheartedly.
‘Aashraddha Deyam’ — Dhaanam offered unwillingly and grudgingly.
wrongly dealt here.,., kindly check and give meanings
சிரத்தா தேயம் – மனமுவந்து கொடுக்கும் தானம்.
ஆசிரத்தா தேயம் – கொடுக்க மனஇல்லாமல் கொடுக்கிற தானம்.
same here too
What are the correct meanings then.
Wen you are pointing out an apparent mistake you should consider posting the correct meanings as well….Rama Rama