Jaya Jaya Sankara Hara Hara Sankara – Some of Periyava’s upadesams are incomprehensible, some make you think in awe and some will really put us in place and brings us back to reality. This chapter belongs to the third category. Let’s introspect ourselves on our humility level and where we are at present. Also the glory of ‘Sankara Nama’ and ‘Jaya Jaya Sankara Hara Hara Sankara’ has been brought to the fore.
//One thought kept occurring in my mind: ‘What qualification do we have to keep his name? Are we even worthy to be a speck of dust under his feet? Unlike anywhere else, why has he given his own name to all those coming under his lineage?’ //
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for the lovely sketch and audio. Rama Rama
ஸந்நியாஸ நாமம்: சங்கர நாம மஹிமை
ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டவுடன் பூர்வாச்ரமப் பேர் போய்ப் புதுப்பேர் வருகிறது. ஆதி குருவிலிருந்து சுகர் வரை எவரும் ‘டெக்னிக’லாக ஸந்நியாஸி அல்லவாதலால் அவர்களுக்கு இப்படிப் பேர் மாறவில்லை.
கௌட பாதருக்கோ ஸந்நியாஸ நாமா, பூர்வாச்ரம நாமா ஆகிய இரண்டும் தெரியவில்லை! அவர் பிறந்த தேசத்தை வைத்து அவருக்கு ஏற்பட்ட ‘கௌடர்’ என்ற பெயரொன்றுதான் தெரிகிறது.
கோவிந்த பகவத் பாதருக்குத்தான் பூர்வாச்ரமப் பேர் சந்த்ர சர்மா, ஸந்நியாஸ நாமம் கோவிந்தர் என்பதாக இரண்டும் தெரிகிறது.1
ஆசார்யாள் விஷயத்தில் அலாதியாயிருக்கிறது. அவருக்கு அப்பா-அம்மா வைத்த பேரே சங்கரர் என்பதுதான். அதுவே ஸந்நியாஸியான பிற்பாடும் நீடித்திருக்கிறது! குருவானவர் தீக்ஷை கொடுக்கும்போது ஸந்நியாஸ நாமம் கொடுப்பார். இவருடைய குரு – கோவிந்த பகவத் பாதர் – ‘நம் சிஷ்யரோ கைலாஸ சங்கரராக இருக்கிறார். லோகத்துக்கெல்லாம் நித்ய மங்களமான ‘சம்’மைச் செய்யும் ‘லோக சம்கர’ராக இருக்க வேண்டுமென்றே இந்த அவதாரம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், நாமகரண ஸம்ஸ்காரத்தில் பிதா வைத்த சங்கர நாமத்தை மாற்ற வேண்டாம்’ என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. அவதார காலத்தை வைத்து – அவதாரம் ஏற்பட்ட மாஸம், பக்ஷம், திதி ஆகிய மூன்றை வைத்து – ஆசார்யாளுடைய பிதா அவருக்குப் பெயர் வைக்கப் போக, அதுவே ‘சங்கர’ என்று பொருத்தமாக அமைந்துவிட்டது. அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன். அந்தப் பெயரே அவர் ஸந்நியாஸியான பிற்பாடும் தொடர்ந்து இருந்துவிட்டது.
அவர் சரீரத்திலிருந்த 32 வருஷம் மட்டுமில்லாமல், அவர் ஏற்படுத்திய மடங்களிலுள்ள சாமியார்களுக்கெல்லாமும் அந்தப் பெயரே தொடர்ந்து வந்திருக்கிறது! ஆசார்ய ஸம்பிரதாயம் ஒன்றில்தான் இப்படி இருக்கிறது! இன்றைக்கு ராமாநுஜாசார்யார், மத்வாசார்யார், சைதன்யர் – இன்னம் புத்தர், க்றிஸ்து, நபி – என்றெல்லாம் பேர் வைத்துக் கொண்டு எங்கேயாவது, யாராவது சாமியார் இருக்கிறார்களா? ஆனால் ‘சங்கராசார்யார்’ என்று பேர் வைத்துக் கொண்டு மாத்ரம் நாங்கள் பல பேர் இருக்கிறோம்!
அந்த நாமாவுக்கு அப்படியொரு மஹிமை இருக்கிறது!
‘அவர் பெயரை வைத்துக் கொள்ள நமக்கு என்ன யோக்யதை? அவருடைய பாதத்தின் ஒரு தூசியாக இருக்க லாயக்கு உண்டா? எதற்காக இப்படி எங்கேயுமில்லாத வழக்கமாகத் தம்முடைய கீழ்ப் பரம்பரை முழுதற்கும் தம் பெயரையே வைத்துவிட்டார்?’ என்று தோன்றிக் கொண்டிருந்தது.
ஸந்நியாஸநாமா என்றும் ஒன்று எங்களுக்கு இருக்கிறது. ‘அது மட்டும் போதாதா? ஏன் ‘சங்கராசார்யார்’ என்றும் அதோடு சேர்த்து வைத்துக் கொள்ளப் பண்ணிவிட்டார்? ‘அத்வைதம் என்பதால் தனக்கும் கீழ்ப் பரம்பரைக்கும் வித்யாஸமேயில்லை என்று இப்படி வைத்து விட்டார்’ என்று சொன்னால் அதுவும் ஸரியாய் வரவில்லை. (ஏனென்றால்) அத்வைதம் கார்யம் இல்லாத நிலை. கார்யம் செய்வதற்குத்தான் மடாதிபதி ஆபீஸ். லோகத்தில் தர்மமும் ஞானமும் இருப்பதற்கான கார்யம் பண்ணனும் என்பதற்குத்தான் இப்படி மடமென்றும், மடாதிபதியென்றும் அவர் ஏற்படுத்தியது. சம்-கரரே நல்ல கார்யம் பண்ணுகிறவர்தான்! அதனால் அதில் நிஷ்க்ரியமான அத்வைதம் எப்படி வரும்? அப்படிக் கார்யம் பண்ணுவதைப் பார்க்கும்போது அவர் நிஜமாகவே ‘சங்கரர் என்றால் சங்கரர்தான்’ என்னும்படியாக அத்தனை நல்லதும் பண்ணினார்! 72 துர்மதங்களை நிராகரணம் செய்து ஸநாதன வேத தர்மத்தை நிலைநாட்டினார். அவர் செய்தது யானையளவு என்றால் நம்மால் ஒரு கொசு அளவுக்குக்கூட ஒன்றும் பண்ண முடியவில்லை. பின்னே ஏன் அவர், அவருடைய பெயரையே வைத்தார்?’ என்று அந்தப் பேரை வைத்துக் கொள்வது guilty-யாக, அபசாரமாகத் தோன்றிக் கொண்டிருந்ததது.
அப்புறம் கொஞ்சம் தெளிவு பண்ணிக் கொண்டேன். ‘அவருடைய நாமாவுக்கே ஒரு மஹிமை, ஒரு சக்தி உண்டல்லவா? இந்த யுகத்துக்கே நாமாவைத்தானே தலையான உபாயமாக சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது? நாம மாஹாத்ம்யத்தை விசேஷமாக வளர்த்துக் கொடுத்த போதேந்த்ராள்2 என்ன சொல்லியிருக்கிறார்? ‘சிவன் – விஷ்ணு என்றெல்லாம் ரூபம் எடுத்துக் கொண்டதும் லோக ரக்ஷணத்துக்குப் போதாது என்றே பரமாத்மா, சிவன் – விஷ்ணு முதலான நாமங்களையும் தரித்துக் கொண்டு, அந்த நாமங்களிலேயே நன்றாக விழிப்புணர்ச்சியுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்’-
‘அபர்யாப்தம் ரூபம் ஜகதவந ஏதத்-புநரிதி
ப்ரபுர்-ஜாகர்தி ஸ்ரீ ஹரி-கிரிச நாமாத்மகதயா’
என்று சொல்லியிருக்கிறாரல்லவா? அப்படி சங்கர நாமாவிலேயே ஆசார்யாளின் சக்தி குடிகொண்டிருக்கிறது. அவருடைய அவதார சரீரம் மறைந்து போய்விட்டாலும், அவர் சங்கர நாமத்துக்குள்ளே ஜீவ சக்தியோடு விழிப்பாக இருந்து கொண்டு ரக்ஷிப்புத் தருகிறார்- ஒவ்வொரு தேவதைக்கு ஒவ்வொரு நாம மந்த்ரம் இருப்பதுபோல ஆசார்யாளுக்கு “ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர” என்பது. தம்முடைய கீழ் பரம்பரைக்குத் தம் பேரைக் கொடுத்தாவது அதன் மூலம் சக்தி கொடுக்கலாம் என்றேதான் ஆசார்யாள் இம்மாதிரி வைத்திருப்பார்’ என்று தோன்றிற்று.
‘அந்த நாமாவைத் தாங்க நமக்கு யோக்யதை உண்டா?’ என்று நினைக்க வேண்டாம்; உப்புக்குச் சப்பாணிக்குங்கூட யோக்யதை கொஞ்சமாவது உண்டாக்கத்தான் அந்த நாமாவை அவர் கொடுத்திருப்பதே!’ என்று ஒருமாதிரி ஸமாதானம் பண்ணிக் கொண்டேன்.
‘நாம் லோக யாத்ரையை முடித்த பிற்பாடும், ஸ்ருஷ்டியின் இயற்கைப்படி ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேதான் இருக்குமாதலால் தர்மாதர்மப் போராட்டம் நடந்து கொண்டேதானிருக்கும். அதற்காக நாம் எப்போது பார்த்தாலும் அவதாரம் செய்து கொண்டிருக்க முடியாது. லோக லீலையில் இந்தப் போராட்டத்திற்கும் இடம் கொடுக்கத்தான் வேண்டும். அது ரொம்பவும் முற்றிவிடும்போதுதான் அவதாரம் செய்ய வேண்டும். மற்ற ஸமயத்திலும்கூட தர்மத்தின் கட்சி ரொம்ப பலஹீனப்பட்டு விடாதபடி நம்முடைய கீழ்ப் பரம்பரையை ஆசார்ய பீடங்களில் வைத்து ஓரளவு ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பலம் கொடுப்பதற்காக நம்முடைய பெயரையே அவர்களுக்கெல்லாமும் கொடுக்க வேண்டும்’ – என்றுதான் ஆசார்யாள் இப்படிப் புது தினுஸில் பண்ணியிருக்க வேண்டும்.
“நாமதாரணம் என்றால் பெயரைத் தாங்குவது – அப்படித் தாங்க நமக்கேது சக்தி?” என்று கேள்வி கேட்டால் “சக்தி கொடுத்துத் தாங்குவதற்கேதான் நாமத்தைத் கொடுத்திருக்கிறது!” என்று பதில் வருகிறது! ‘இத்தனை பலஹீனத்தில் இவ்வளவு வீர்யமான மருந்தை எப்படித் தாங்கிக் கொள்வது?’ என்று கேட்டால், ‘பலஹீனத்தை போக்கவேதானப்பா இந்த மருந்து!’ என்கிற மாதிரி!
சங்கர நாமத்தின் சக்தியை எப்படி ஆசார்யாளே ஸங்கேதமாகத் தெரிவித்திருக்கிறாரென்று சொல்ல வந்தேன். தனி மஹிமை வாய்ந்த நாமாவாக அது இருப்பதால்தான் ஆசார்யாளின் குருவும் அதை பற்றி வேறொரு தீக்ஷாநாமம் கொடுக்கவில்லை.
__________________________________________________________________________________________________
1 ஓர் உரையில் ஸ்ரீசரணர்கள் ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர் உள்பட ஆசார்யாளின் காலம் வரையில் எல்லா ஸந்நியாஸிகளுக்கும் பூர்வாச்ரமப் பெயரே தொடர்ந்து இருந்ததாகவும், ஆசார்யாளின் சிஷ்யர்களில் தொடங்கித்தான் ஸந்நியாஸத்துக்குப் பின் புதுப்பெயரிடும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார். “எப்போதும் ‘ஜய கோவிந்த ஜய’ என்று ரசித்துச் சொல்வது தவிர வேறு பேச்சின்றி மௌனமாகவே இருந்ததால் அவர் (ஜய) கோவிந்த முனி என்று சொல்லப்பட்டார்” என்று கூறும் ‘ப்ராசீன சங்கர விஜய’ ச்லோகம் டி.எஸ். நாராயண சாஸ்திரியின் “The Age of Sankara” (1971 ed.) 60-ம் பக்கத்தில் காண்கிறது.
2 ஸ்ரீ காமகோடி பீடத்தின் 59-வது ஆசார்யர்களான ஸ்ரீ பகவந்நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.
________________________________________________________________________________________________________________________________
Sanyasa Naama: Glory of Sankara Naama
Upon obtaining renunciation (Sanyasa), a new name is conferred replacing the name given in the previous stage [पूर्वाश्रम – poorvashrama]. Right from the Adi Guru [आदि गुरु] to Suka, none of them were Sanyasis ‘technically’; hence their names did not change.
In the case of Gowdapada [गौडपाद], neither the Sanyasa name nor the previous name [poorvashrama naama] is known! All we know is that he got the name ‘Gowda’ after the place he was born.
Only for Govinda Bhagavat Pada [गोविन्द भगवत्पाद] both the poorvashrama name of Chandra Sharma and the Sanyasa name of Govinda are known1.
In case of Acharya, it is something special. The name given by his parents was also Sankara and the same name continued even after he became an ascetic. A Guru gives a Sanyasa name [to the student] at the time of initiation. Sankara’s Guru, Govinda Bhagavat Pada, must have thought – ‘My disciple is the Sankara of Kailash himself. This incarnation has taken place for the ‘sam’ [good] of the world – as ‘Loka Samkara’ – bestowing the ever-lasting prosperity on mankind. Let me therefore not change the name given to him by his father during the naming ceremony’ [नामकरण संस्कारः]’. The name ‘Sankara’, chosen by his father, was given to him taking into account the phase when he was born, considering three things, viz., the month he was born [मासः], the fortnight [पक्षः – paksha] and the day [तिथिः – tithi], and has turned out to be very appropriate. I will tell about that later. The same name continued even after he became a Sanyasi.
This name continued not only during the 32 years he was physically present here, but was also given to the pontiffs of all the institutions (Mutts) he established. It is like this only in the case of this traditional order established by Acharya. Is there any Sanyasi today anywhere, with the name Ramanujacharya, Madhvacharya, Chaitanya or even Buddha, Christ or Nabi? But there are so many of us with the name ‘Sankaracharya’!
The name has such a distinction.
One thought kept occurring in my mind: ‘What qualification do we have to keep his name? Are we even worthy to be a speck of dust under his feet? Unlike anywhere else, why has he given his own name to all those coming under his lineage?’
We have a Sanyasa nama. Is it not enough? Why has he made it in a way that ‘Sankaracharya’ is added to the sanyasa nama? If we say that he did it because of his Advaita philosophy as there is no difference between himself and the lower generations that too does not sound appropriate. (Because) Advaita is a state of no action. The Mathadhipati’s office is there to only do work. He has established the Mutt, Pontiffs, etc. only to ensure that work is done to establish Dharma and teach the higher knowledge in this world. Sam Kara [शम्–करः] is himself a person doing only good things. Therefore, how can Advaita, which is about inaction [निष्क्रियम्] come in that? When we look at the work done, we exclaim “Sankara is Sankara alone”. He had banished [निराकरणम्] the 72 religions and established the Sanatana Vedic Dharma [सनातन वेद धर्म]. If what he has done is gigantic like an elephant, we are not able to do even to the extent of a mosquito. Why then has he given us his name? I felt guilty having that name and also felt I am showing disrespect to him.
Later on, I got some clarity on my own. Does not his name itself have a special glory and power? Is it not stated in Sastras that uttering Bhagavan’s name is the foremost means (for salvation) in this yuga? What did Bodhendra2, who specially nurtured and highlighted the glory of Bhagavan Nama, say? Has he not said, ‘ Feeling that it was not enough to have taken the forms of Siva, Vishnu, etc. for protecting the world, Paramatma is adorning the names of Siva – Vishnu etc., and is shining brightly with full vigour in the name itself’
‘aparyaaptam roopam jagadavana etat-punariti
prabhur-jaagarti shri hari-girisha namaatmakathayaa’?
[अपर्याप्तं रूपं जगदवन एतत्-पुनरिति प्रभुर्-जागर्ति श्री हरि-गरिश नामात्मकथया]
Accordingly, in the very name Sankara, the power of Acharya is resident. Although his incarnated physical body is no longer there, he is ever present with full power in the name Sankara, and is providing protection. Just as there is a mantra with the name for every deity [नाम मन्त्र], it is “Jaya Jaya Sankara Hara Hara Sankara” [जय जय शङ्कर हर हर शङ्कर] for Acharya. It occurred to me that Acharya must have made it this way with the thought that he could provide energy to the lower generations by giving them his name.
I somehow consoled myself thinking ‘we need not wonder whether we have the eligibility to bear that name; he has given that name to even the least qualified of the people only to provide the eligibility at least to some extent’.
Acharya must have started this innovative system, thinking “Even after I conclude my journey in this world, there will be inequalities due to the very nature of creation and struggle between righteousness and unrighteousness is bound exist always. I cannot be incarnating all the time for this reason. In this drama of the world, there should be allowance for this struggle also. Incarnation should be only resorted to when it becomes severe. During the rest of the time we should keep our lower generations in the Acharya Mutts and ensure that righteousness is protected and does not get weakened too much. In order to strengthen their hands, I should lend my name to them”.
For the question “Namadhaaranam [नामधारणम्] means ‘to bear the name’; Do we have the strength to shoulder that name?’ The response comes as, “The name has been given only to give the strength to shoulder it”! It is somewhat similar to the query “How can this weak body bear such a strong medicine?” and the reply is “This medicine is only to overcome that weakness”.
I wanted to point out how Acharya himself has subtly conveyed the power of the name Sankara. Since it was a name with unique glory, Acharya’s Guru also did not change it into another name at the time of initiation.
____________________________________________________________________________________________________________________
1 In one discourse, Sri Charana have mentioned that the name of the previous [poorvashrama] stage itself had continued for all Sanyasis, including Sri Govinda Bhagavat Pada and that the practice of conferring a new name after taking Sanyas has started only with the disciples of Acharya. The ‘Praacheena Shankara Vijaya’ sloka, mentioned in the 60th page of “The Age of Sankara” (1971 ed.), by T. S. Narayana Sastry says “he was called (Jaya) Govinda Muni, as he observed silence except constantly saying with great relish, ‘Jaya Govinda Jaya’.
2 59th Acharya of Sri Kamakoti Peetam, Shri Bhagawannama Bodhendra Saraswati Swamigal
_____________________________________________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
Amazing art. Periyava looks so happy. He is meditating on his Adi Guru and guru parampara and the shankara nama. One of your best Sowmya.
https://ia902902.us.archive.org/8/items/AgeOfShankaraByTSNarayanaShastri/Age_of_Shankara%20by%20T%20S%20Narayana%20Shastri_text.pdf
search led to this, if interested, may open