87.4 Sri Sankara Charitham by MahaPeriyava – Final liberation

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The importance of initiating Sannyasi through Tureeyashrami and not Atyashramis especially in our times citing the example of our Guru Parampara has been emphasized by Periyava here.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for the appealing depiction and audio. Rama Rama


(நிர்வாணம்)

ஸாக்ஷாத்காரம் என்னவென்று அறியாத நிலையில் அறிய ஆசைப்பட்டு மேற்கொள்வது விவிதிஷா ஸந்நியாஸம். அதன் ‘டேஸ்ட்’டைக் கொஞ்சம் அறிய ஆரம்பித்தபின் பூர்ணமாக அறிந்து அதையே சாச்வதமாக்கிக் கொள்வதற்காக ‘ரூல்களைக் கொண்ட ஸந்நியாஸ’த்தையும் விட்டுவிட்டு அத்யாச்ரமத்திற்குப் போவது வித்வத் ஸந்நியாஸம்.

“ஸந்நியாஸத்துக்கு ஸந்நியாஸம்” என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. பக்குவமாகாத ஒருத்தன் ஏதோ கொஞ்சம் விரக்தி மாதிரித் தோன்றியதில் வீட்டை விட்டுப் புறப்படுகிறான். ‘விட்டு விடுவது’தான் ஸந்நியாஸம். அப்படி ஸந்நியாஸியாகிறான். அப்புறம் விரக்தி போன இடம் தெரியவில்லை! பழைய ஆசைகளெல்லாம் திரும்புகின்றன. “போதும் ஸந்நியாஸம்” என்று ஸந்நியாஸத்தை விட்டுவிட்டு அகத்துக்கே திரும்பி விடுகிறான். இதுதான் “ஸந்நியாஸத்துக்கு ஸந்நியாஸம்!”.

அமாவாஸைத் தர்ப்பணம் பண்ணுவதை ஒருத்தன் நிறுத்திவிட்டால் “தர்ப்பணத்துக்குத் தர்ப்பணம் பண்ணி விட்டான்” என்று சொல்வதுண்டு! அப்படி, ஸந்நியாஸத்துக்கு ஸந்நியாஸம்!

ஆனால் ஒரு அத்யாச்ரமி ஸந்நியாஸ தர்மத்தை விடும்போது அவர் ஸம்ஸாரத்துக்குத் திரும்புவதற்காக அப்படிப் பண்ணவில்லை. யதி தர்மத்தை விடுவது அவருக்கு முக்யமில்லை; நோக்கமில்லை. ஸமாதி நிலையில் சேர்ந்திருப்பதுதான் அவருடைய நோக்கம். ஸந்நியாஸ ஆசரணையை அவர் விடுவது அதன் லக்ஷ்யமான அநுபவத்தில் சேர்வதற்கே. ஸந்நியாஸத்திலிருந்து கீழே வராமல், அதற்கு மேலே போவதற்காக விடுகிறார். அதனால்தான் ‘அதி’ – ஆச்ரமி என்பது.

இப்படிச் சொன்னதால் அநுபூதி வாய்க்க ஆரம்பிக்கும் நிலையில் எல்லா ஸந்நியாஸிகளுமே துரீயாச்ராமத்திலிருந்து அத்யாச்ரமத்துக்குப் போகத்தான் செய்வார்கள். அப்படித்தான் செய்யணும் என்று இல்லை. க்ருஹஸ்தாச்ரமியாகவே இருந்து கொண்டும்கூட ஜனகர் ஜீவன் முக்தராக இருந்திருக்கிறார். ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் ப்ரஹ்மசர்ய ஆச்ரமியாக இருந்து கொண்டே அத்வைதாநுபூதிமானாக இருந்திருக்கிறார். இப்படி இந்த (இரண்டு) ஆச்ரமங்களில் ரொம்ப அபூர்வமாகச் சிலர் இருந்திருக்கிறார்களென்றால், விதிவித்தான, ரூல்களைக் கொண்டதான ஸந்நியாஸாச்ரமத்தில் இருந்து கொண்டோ, ஏராளமான மஹான்கள் ஜீவன் முக்தர்களாக இருந்திருக்கிறார்கள். ‘டாண்’ என்று ஒரே flash-ல் ஒரு ஸந்நியாஸிக்கு ஸாக்ஷாத்காரம் சாச்வதமாகக் கூடும்போது, அதற்கப்புறம் அதை எதுவும் கலைக்க முடியாதென்பதால், மூச்சு விடுகிறமாதிரி involuntaryயாகவே (அநிச்சையாகவே) ஆச்ரம விதிகளை அவரால் விடாமல் அநுஸரித்து வரமுடியும். இப்படி பலபேர் உண்டு. ஒரேவீச்சில் இல்லாமல், ஸமாதி கூடுவதும் கலைவதுமாக இருந்து, போகப் போக ஸ்திரப்பட்டவர்களிலேயும்கூடப் பலர் ரூல்களை விடாமல் அவற்றின்படியே பண்ணிக் கொண்டு போனவர்கள்தான். இதெல்லாம் பேச்சினால் புரிய வைக்கும் விஷயமில்லை. அவரவர் அநுபவத்தையும், ஈச்வரன் அவர்களைக் கொண்டு லோகத்துக்கு என்ன மாதிரி உதாரணம் காட்ட நினைக்கிறான் என்பதையும் பொருத்தே ஒரு மஹான் அத்யாச்ரமியாகவோ, தேஹம் விழுகிறவரை விதிவத்தான ஸந்நியாஸாச்ரமியாகவோ இருப்பது அமையும்.

எந்த விதி – நிஷேதமும் தேவைப்படாதவனாகவும் ஸகல விதி – நிஷேதங்களையும் முறித்துப் போட்டு உயரே போனவனாகவும் பரிபூர்ண ஸ்வதந்த்ரனாக உள்ள ஒரு ஞானியை லோகத்துக்குக் காட்ட வேண்டுமென்று ஈச்வரன் நினைக்கும்போது ஒருவரை அதிவர்ணாச்ரமியாக்கிக் காட்டுகிறான். சாஸ்த்ரக் கட்டுப்பாடு ரொம்பவும் அவச்யம் என்று ஜனங்களுக்குப் புரிய வைக்க நினைக்கும்போது அவனே ஒரு ப்ரஹ்ம ஞானியை சாஸ்த்ர விதிகளின்படியே நடந்து காட்டும் ஸந்நியாசியாக இருந்து காட்டப் பண்ணுகிறான்.

தத்தாத்ரேயரையும் சுகரையும் போன்ற அத்யாச்ரமிகளான குருமார்கள் ப்ரஹ்மவித்யா பரம்பரையில் தோன்றியிருந்தாலும், கட்டுப்பாடுகள் ஒரேயடியாகக் குலைந்து கிடக்கும் இந்த யுகத்தில், எந்தக் கட்டுப்பாடுமில்லாதவரான அத்யாச்ரமியிடமிருந்து ஜனங்கள் கட்டுப்பாடு இல்லாமலிருப்பதைத்தான் எடுத்துக் கொள்வார்கள், அவருடைய உள்ளநுபவத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான் கௌடரிலிருந்து ஆச்ரமக் கட்டுப்பாடுள்ளதான ஸந்நியாஸத்தை தழுவியவர்களாகவே நம்முடைய குரு பரம்பரை அமைந்தது.

லோகத்திற்கு வழிகாட்ட வந்த ஆசார்யாள் சாஸ்த்ரோக்தக் கட்டுப்பாடுகளுள்ள ஸந்நியாஸாச்ரமியாகத்தான் இருக்க வேண்டும்; அதுமட்டும் போதாது; அவரும், வழிகாட்டியாக மட்டும் இல்லாமல் வழியைப் பின்பற்றுபவராக, தாமும் (அத்யாச்ரமியிடமிருந்து இல்லாமல்) ஸந்நியாஸி ஒருவரிடமிருந்தே தீக்ஷை பெற வேண்டும்; இந்த சாஸ்த்ர மரியாதையை வலியுறுத்துவதற்காக, அவருடைய குருவுங்கூட இப்படியே ஸந்நியாஸியிடமிருந்து ஆச்ரமம் பெற்றவராகவே இருக்க வேண்டும் – என்கிற ரீதியில்தான் கௌடபாதரிலிருந்து விதி – நிஷேதங்களோடு கூடிய நான்காவது ஆச்ரமிகளாக குரு பரம்பரை அமைந்திருக்கிறது.

ஒரு விஷயம் சொல்லப்போனால் ஒன்பது விஷயம் அகப்படுகிறது! புதையலாக அகப்படுவதால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே போவோம்:

அத்யாச்ரமிகளைப் பரமஹம்ஸ பரிவ்ராஜகர் என்று ஆசார்யாள் சொல்வது எங்கேயென்றால்: இந்த்ரனைப் பல வருஷங்கள் திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்துவிட்டு அப்புறம் ப்ரஜாபதி அவனுக்கு ஆத்ம தத்வத்தை உபதேசித்ததாக சாந்தோக்யோபநிஷத்தில் இருக்கிறது. உபதேச ஆரம்பத்தில் ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போதுதான் இந்த விஷயம் சொல்லியிருக்கிறார். “எல்லா ஆசை அரிப்புக்களையும் துறந்தவர்களாகவும், வேறு நாட்டமில்லாமல் ஆத்ம ஞானம் ஒன்றுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாகவும், வேதாந்த விஞ்ஞானங்களிலேயே பூர்ணமாக ஈடுபட்டவர்களாகவும், ப்ரஜாபதி நான்கு ப்ரகரணங்களாக இங்கு கூறியுள்ள ஸம்ப்ரதாயத்தை அநுஸரிப்பவர்களாகவும் உள்ள பரம பூஜ்யர்களான பரமஹம்ஸ பரிவ்ராஜகர்களாகிய அத்யாச்ரமிளாலேயே இந்த ஆத்ம வித்யை அறியக்கூடியது தற்காலத்திலும்கூட இப்படிப்பட்டவர்களே இந்த வித்யையை சிஷ்யர்களுக்கு உபதேசிக்கிறார்கள். இந்த யோக்யதாம்சங்கள் இல்லாத வேறு யாரும் உபதேசிப்பதில்லை” என்கிறார்4.

உபநிஷத்தில் நாலு ப்ரகரணங்களாக வரும் ப்ராஜாபத்ய வித்யையை உபதேசிக்கும் ஞானிகள் ஆசார்யாள் காலத்திலும் இருந்திருக்கிறார்களென்று இங்கே ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. அதாவது, அவருடைய அவதாரத்திற்கு முன்பு வேத தர்மம் அடியோடு அணைந்துவிடாமல் முணுக்கு முணுக்கு என்றாவது ப்ரகாசித்துக் கொண்டுதானிருந்திருக்கிறதென்று நிதர்சனமாகிறது. ஆத்மாநுபவம் இல்லாமலே போலி பண்ணிக் கொண்டிருப்பவர்களும், ஞானவழி என்று சொல்லிக் கொண்டே நம்முடைய ஆத்ம சாஸ்த்ரங்களுக்கு வித்யாஸமாக ப்ரசாரம் செய்து கொண்டிருந்த பௌத்தர் முதலானோரும் அப்போது நிறைய இருந்தாலும் கொஞ்சமாவது வைதிகமான ஸத்குருக்களும் ஸம்ப்ரதாய பரம்பரையில் வந்தவர்களாக இருந்துதானிருக்கிறார்கள்.

இப்படியிருந்தவர்களில் அத்யாச்ரமிகளும் இருந்திருக்கிறார்கள், துரீயாச்ரமிகளும் இருந்திருக்கிறார்கள். ஆசார்யாள் குருமுகமாக துரீயாச்ரமம் பெற்றுக் கொள்ள நிச்சயித்தபோது, லோகத்தில் சாஸ்த்ர மரியாதை இருக்கப் பண்ண வேண்டுமென்று நினைத்து, சாஸ்த்ர விதிகளையும் விட்டுவிட்ட அத்யாச்ரமிகளிடம் போகாமல், சாஸ்த்ரோக்தமாக நடக்கும் துரீயாச்ரமியான கோவிந்த பகவத்பாதரிடமே போய் தீக்ஷை வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இதேமாதிரி கோவிந்த பகவத் பாதரும், கௌடபாதரும் தம்தம் குருக்களிடமிருந்து ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டவர்கள். சுகர் ஸந்நியாஸி இல்லை. அவர் ‘அநுபேத’ராகப் பூணூல் இல்லாமலிருந்தாரென்றால், அது பூணூலை அறுத்துப் போட்டுவிட்டு ஸந்நியாஸியானதால் அல்ல. பூணூல் போடுவதற்கு முன்பே அவர் அத்யாச்ரமியாகப் புறப்பட்டுவிட்டதால்தான்!

கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் இருவருமே ஸந்நியாஸிகளாயிருந்தாலும் பின்னவர்தான் ஸந்நியாஸ நாமம் என்று புதிதாக ஒரு பெயர் பெற்றவராயிருக்கிறார்.

4தஸ்மாதிதம் த்யக்த–ஸர்வ–பாஹ்யைஷணை: அநந்ய–சரணை: பரமஹம்ஸ–பரிவ்ராஜகை: அத்யாச்ரமிபி: வேதாந்த–விஜ்ஞான–பரைரேவ வேதநீயம் பூஜ்யதமை: ப்ராஜாபத்யம் சேமம் ஸம்ப்ரதாய–மநுஸரத்பி: உபநிபத்தம் ப்ரகரண சதுஷ்டயேந ததா அநுசாஸதி அத்யாபி த ஏவ நாந்யே | (“சாந்தோக்ய பாஷ்யம்”: VIII. 12. 1. முடிவுப்பகுதி)

______________________________________________________________________________________________________________________________

Final liberation

That state when one does not know what is realisation of self (साक्षात्कार), but makes efforts to understand it, is Vividisha Sanyas.  After getting to know its taste a little, in order to learn it fully and make it permanent, if he gives up the ‘Sanyas with rules’ and moves forward to Atyashrama, it is Vidvat Sanyas.

In a lighter vein it is said ‘Sanyas to Sanyas’.  A person who does not have adequate maturity and is also frustrated, leaves his home.  ‘Sanyas’ is ‘giving up’. Putting it that way, he becomes a Sanyasi.  Later, the frustration wears off without a trace.  His old desires return.  He returns home with the thought ‘enough of Sanyas’.  This is what is called “Sanyas to Sanyas”!

If one gives up performing Tarpana during Amavasya, it is said ‘he has done tarpana to tarpana’.  Same way is ‘Sanyas to Sanyas’.

However, when an Atyashrami is giving up Sanyas, he is not doing it with the intention of returning to household. Giving up Yati Dharma does not matter to him; it is not his objective.  His goal is to remain merged in the state of Samadhi.  He is giving up the Sanyasa path only to reach the goal of a Sanyasi – which is to experience the ultimate. He is giving it up in order to go beyond Sanyasa and not to fall below it.  That is why, it is called, ‘Ati-Ashrami’.

All the Sanyasis who begin to experience Anubhooti, would certainly be moving from Tureeyashrama to Atyashrama; but this need not happen only this way.  Janaka was a Jeevanmukta (जीवन्मुक्तः – one who is free from all worldly bondages even while alive), even while remaining a householder.  Samarth Ramdas was a Advaitanubhoothiman (अद्वैतानुभूतिमान्), (person who experiences non-duality) even while he lived a life of a brahmachari [ब्रह्मचारी]. If in rare cases there have been such people in these two ashramas [as brahmachari or as householder], there have been several great people becoming Jeevanmuktas, while still remaining in the rule bound Sanyasashrama.  When realization of the self – (Sakshatkara), happens to a Sanyasi in a flash and since it is not possible to disturb that state, he would be able to continue to follow the rules of the Ashrama involuntarily- just like breathing.  There are several people like this.  There were many who did not experience Samadhi in a flash, but experienced it and on and off and gradually got established in that state; they too continued to follow the rules without giving them up.  These things cannot be explained through words.  A mahan [महान्] becoming a Atyashrami or being a rule bound Sanyasashrami till his body falls, depends on his own experiences and what kind of example Eswara wants to show to the world, through him.

When Eswara wants to show to the world a completely independent and realized individual, who does not need any rules and regulations and breaks away from all the rules to move up, He showcases him as an Ativarnashrami.  When He thinks of making people understand the importance of observing the regulations of Sastra, He shows a person with spiritual wisdom (Brahmajnani-ब्रह्मज्ञानी), who remains as a Sanyasi, observing all the rules of the Sastras.

Although Atyashrami Gurus like Dattatreya and Suka have been there in this Brahmavidya order, people of this eon, where the regulations are totally broken down, would only absorb the non-adherence to the rules from the Atyashramis; they will not imbibe the inner experiences of such people; therefore, starting from Gowda, our Guru parampara has been only formed with people who have taken to regulated Sanyasashrama.

Acharya, who had come to show the path to the world, should be a Sanyasi bound by the regulations of the Sastras; That is not enough; Not only should he lead the way, he should also be a follower of the path and obtain initiation only from a Sanyasi (not from a Atyashrami); To emphasise this Sastra tradition, his Guru should have also obtained the ashrama from only a Sanyasi. Thus has the Guru Parampara evolved, starting from Gowdapada, in such a way that it consists of persons belonging to the fourth ashrama, bound by rules and regulations.

When we start talking about one matter, many other things crop up. As we get them like a treasure, let us look at all of them.

The context where Acharya mentions Atyashramis as Paramahamsa Parivrajakara is this: In Chandogyopanishad (छांदोग्योपनिषद्), after testing Indra repeatedly, Prajapati teaches him the true nature of atma.  This matter is mentioned by Acharya in the beginning of his commentary on the teachings.  He says: ‘This atma vidya is realized only by the highly revered Paramahamsa Parivraajaka Atyashramis who have renounced all desires, dedicated themselves to only to the knowledge of the self without any other interest, fully immersed in the science of Vedanta and who follow the tradition described in four sections by Prajapati here. Even in the present days only such people teach this knowledge to their disciples. Those who do not have these qualifications do not impart this knowledge’.

It is very clear that there were Jnanis who were teaching the Prajapati philosophy which comes in four sections in the Upanishads, even during the times of Acharya.  Thus, it is quite evident that the Veda Dharma had not got extinguished completely but was burning at least as a glimmer, during the times before his incarnation. There were people who did not have the experience of realizing the ultimate but posed as if they were realized individuals; there were many people like Buddha who, in the name of paving the way for attaining Supreme Knowledge, were propagating philosophies different from our Sastras; in spite of these, it appears that there were also a few good gurus who were well versed in the Vedic tradition.

There were Atyashramis also among these people.  There were Tureeyashramis also.  When Acharya decided to take Tureeyashrama through a Guru, in order to establish respect for the Sastras, instead of going to Atyashramis who had given up the rules of Sastras he obtained it from Govinda Bhagavat Pada, the Tureeyashrami, who was strictly conducting himself according to the Sastras.

Govinda Bhagavat Pada and Gowda Pada also had taken Sanyas in the same way from their respective Gurus.  Suka was not a Sanyasi.  If he was a ‘Anupeta:’ [अनुपेतः] – without the sacred thread; it was not that he had cut it off and become a Sanyasi.  It is because he had started off as Atyashrami even before he had the initiation of sacred thread.

Although both Gowda Pada and Govinda Bhagavat Pada were Sanyasis, it was only the latter who had got a new Sanyasa name.

4 tasmaadidam tyakta-sarva-bahyaishanai: ananya-sharanai: paramahamsa-parivraajakai: atyaashramibhi: vedanta-vijnaana-paraireva vedaneeyam pujyatamai: praajaapatyam chemam sampradaaya-manusaradbhi: upanibaddham prakarana chatushtayena I Tatha anushaasati adyaapi ta eva naanye I

(“Chandogya Bhashyam”. VIII.12.1. concluding part)

तस्मादिदं त्यक्त-सर्व-बाह्यैषणैः अनन्य शरणैः परमहंस-परिव्राजकैः अत्याश्रमिभिः वेदान्त- विज्ञान- परैरेव वेदनीयं पूज्यतमैः प्राजापत्यं चेमम् सम्प्रदाय-मनुसरद्भि: उपनिबद्धं प्रकरण चतुष्टयेन | तथा अनुशासति अद्यापि त एव नान्ये |

___________________________________________________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

3 replies

  1. சௌ. சௌம்யா வுக்கு

    கண் இமைக்க
    மறந்து நின்றேன்
    கண் நிறைந்த
    ஓவியம் கண்டு !
    மலைத்து போனது
    மனம் இங்கு
    கலைத் திறனை
    எண்ணி இங்கு !

    ஐந்து விரலும்
    வேறு வேறென்பர்
    ஐந்து குணங்களும்
    வேறு வேறென்பர்
    ஐந்து குருவும்
    வேறு வேறென்றாலும்
    ஐந்தும் ஒன்றே
    எழில் வண்ணத்தில் !

    கை வண்ணம்
    அங்கு கண்டேன்
    கவி கம்பன்
    அன்றே சொன்னான்
    உந்தன் கை
    வண்ண ஓவியம்
    இன்று வருமென
    அன்றே சொன்னானா !

    கலை வாணி உந்தன்
    கரத்தில் வந்து
    அமர்ந்தாளோ எழிலாய்
    நடனமாடினாளோ
    காரிகையில் கரத்
    தூரிகையில் உதித்த
    பேரழில் ஓவியம்
    அற்புதம் அற்புதம் !

    நானெனும் அகந்தை
    அறவே துறந்து
    நானிலம் வந்து
    உதித்து நின்ற
    நானிலம் உய்க்க
    வந்து அருளிய
    நானெனும் அகந்தை
    அறவே அகற்றிய

    சத் குருக்களை
    நேரில் கண்டதில்லை
    சத் குருக்களை
    ஒரு சேரக் காட்டிய
    உந்தன் திறமை
    வாழிய வளர்க
    உந்தன் புகழ்
    நீடூழி வாழிய !

    சந்தர் சோமயாஜிலு (@)
    சிவ ராம தாஸன்

  2. Highly complex topic. Does anybody else understand how we sit for this based on Swamy’s upsnyasam?

Leave a Reply

%d bloggers like this: