Sri Pudhu Periyava Jayanthi in W.Mambalam

Thanks to Suresh and Saraswathi mami for the share…I think it is Sri Panchami Nagarajan mama in the photo.

பெரியவா சரணம்.

இன்றைய தினம் 16-08-2019 வெள்ளிக்கிழமை மாலை சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் ஸ்ரீபுதுபெரியவாளின் 85-வது ஜயஞ்ஹி மஹோத்ஸவத்தை முன்னிட்டு ஸ்ரீபெரியவாளின் திருவுருவப்பட திருவீதி உலா நடைபெற்றது.

ஆச்சர்யமாக திருவீதியுலா முடிந்து ஸ்ரீபெரியவா நிலைக்குத் திரும்பி, தீபமங்கள ஹாரத்தி, தோடகாஷ்டக நமஸ்காரங்கள் முடித்து பக்தர்கள் எழுகையிலே எல்லோர் தலையிலும் கடத்து நீரை தெளிபப்துபோலே வருணன் மாரியருள் பொழிந்தான்.

எல்லோருக்கும் அதீதமான ஆனந்தம் உணரமுடிந்தது.

குருவடி தொழுதால் குவலயம் காக்கப்பஉம் என்பதற்கு ஒரு சிறப்பான சான்றாக அமைந்தது எனச் சொன்னால் மிகையாகாதே!

காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.

மேற்படி திருவீதியுலாவினை நடத்தியருளிய பஞ்சமி சேவ சங்கத்தினருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

 

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading