Jaya Jaya Sankara Hara Hara Sankara – The nuances of Sanyansam and Ativarnashrami has been explained in detail by Sri Periyava below.
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another solid depiction and audio. Rama Rama
(நிர்வாணம்)
இப்படிச் சொன்னதால் ‘ரூல்’படியான ஸந்நியாஸாச்ரமம் என்பதே கௌடபாதரிலிரிந்துதான் ஆரம்பிததாக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. அது கௌடபாதருக்கு முன்பே ஆதியிலிருந்து இருந்ததுதான். நான்கு ஆச்ரமங்கள் என்பது ஆதியான வேத காலத்திலிருந்தே இருப்பது. வேதத்தில் ஸம்ஹிதை – ப்ராஹ்மணம் – ஆரண்யகம் – உபநிஷத் என்று நாலு இருப்பதே வரிசை க்ரமமாக ப்ரஹ்மசாரியின் அத்யயனம் – க்ருஹஸ்தனின் யஜ்ஞாநுஷ்டானம் – அரண்யத்தில் போய் இருந்து கொண்டு தத்வவிசாரத்தோடு வானப்ரஸ்தன் செய்யும் கர்மாநுஷ்டானம் – கர்மாவை விட்டுவிட்டு ஸந்நியாசி செய்கிற சுத்தமான தத்வ விசாரம் என்ற நாலைக் காட்டுவதுதான். (இப்படி வேத முறையை நன்றாகப் புரிந்து கொண்டு சொல்லியிருப்பது யாரென்றால் பால் டாய்ஸன் (Paul Deussen) என்கிற ஜெர்மனிக்காரர்! அவருக்கு நம் ஆசார்யாளின் ஸித்தாந்தத்தில் எல்லையில்லாத ஈடுபாடு!) ப்ரஹதாரண்ய உபநிஷத்தில் யாஜ்ஞவல்கியர் பத்னிகளை விட்டுவிட்டு ஸந்நியாஸியாகப் புறப்பட்டதைப் பார்க்கிறோம். ‘நாரத பரிவ்ராஜக உபநிஷத்’ என்பது போல, ஸந்நியாஸத்திலே எத்தனை வகை உண்டு என்று விவரித்துச் சொல்வதற்காகவே பத்துப் பதினைந்து உபநிஷத்துக்கள் இருக்கின்றன – ‘அவதூதோபநிஷத்’, ‘ஸந்நியாஸோபநிஷத்’ என்றெல்லாம் இருக்கின்றன. முதல் மநுஷ்யனைப் பிறப்பித்தவர் மநு. அவரே எப்படி வாழ்க்கை நடத்த வேண்டுமென்று அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக மநு ஸ்ம்ருதி என்றும் மநு தர்ம சாஸ்த்ரம் என்றும் சொல்லப்படும் நூலைப் பண்ணினார். அதிலும் அப்புறம் வந்த மற்ற ஸ்ம்ருதிகளிலும் நான்கு ஆச்ரமங்களைச் சொல்லித் துரீயாச்ரமமாக (நான்காவது ஆச்ரமமாக) ஸந்நியாஸத்தை விதித்திருக்கிறது. துரீயாச்ரமத்திலிருந்து தான் துரீய பதம் (விழிப்பு, கனவு, உறக்கம் மூன்றும் கடந்த நான்காவதான ஸமாதி நிலை) பெற வேண்டுமென்று ஸ்ம்ருதிகள் (தர்ம சாஸ்த்ரங்கள்) விதித்திருக்கின்றன. பல தர்ம சாஸ்த்ரங்களைப் பார்த்து, அவற்றில் சொல்லியுள்ள விஷயங்களைத் தொகுத்துக் கொடுப்பதாக ‘நிபந்தன க்ரந்தங்கள்’ என்று இருக்கின்றன. அவற்றில் ஸந்நியாஸ தர்மங்களை விரிவாகச் சொல்வதாக விச்வேச்வர ஸ்ம்ருதி என்பது இருக்கிறது. விச்வேச்வர ஸம்ஹிதை என்றும் சொல்வது. ஆனபடியால் ஜீவ ஸ்ருஷ்டி ஏற்பட்ட நாளாகவே விதிவத்தான ஸந்நியாஸிகள் உண்டு. அத்வைத ஸம்ப்ரதாயத்தையே முற்றிலும் தழுவியர்களாகவோ, ஓரளவு தழுவியர்களாகவோ ஸந்நியாஸியாகவும் அத்யாச்ரமியாகவும் இருந்த பூர்விகர்கள் சிலரைப் பற்றி ஆசார்யாளே பாஷ்யத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனாலும் ஆசார்யாளின் குரு பரம்பரையில் (அவருக்கப்புறம் அவருடைய சிஷ்ய பரம்பரையில் வந்துள்ள நம் எல்லோருக்குமே அதுதான் குரு பரம்பரையாகிவிட்டது; அதில்) அவருடைய பரம குருவான கௌடபாதரும் குருவான கோவிந்த பகவத்பாதரும்தான் விதிவத்தாக ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு சாஸ்த்ர ப்ரகாரம் அந்த ஆச்ரமத்தின் ஆசரணைகளை நடத்தியவர்கள்.
ஸநகாதியர், தத்தர், சுகர் முதலியவர்கள் ஸந்நியாஸத்திற்கும் மேலே போன மஹா பெரியவர்களாதலால், ஸந்நியாஸ தீஷை கொடுக்கும் அதிகாரம் அவர்களுக்கும் உண்டு. அப்படித்தான் சுகரிடமிருந்து கௌடர் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டது.
குடீசகர், பஹூதகர், ஹம்ஸர், பரம ஹம்ஸர் என்று நாலு வகையாகக் கூறப்படும் ஸந்நியாஸிகளில் அத்வைத ஸந்நியாஸிகள் நாலாவதான உத்தமப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதாவது ‘பரம ஹம்ஸர்கள்’. ஓரிடத்திலேயும் ஸ்திரவாஸம் செய்யாமல் ஸஞ்சரித்துக் கொண்டே இருப்பதால் அவர்களைப் ‘பரமஹம்ஸ பரிவ்ராஜகர்கள்‘ என்று சொல்வது வழக்கம்.
ஆசார்யாளைக்கூட அப்படித்தான் சொல்வது. அவருடைய மடங்களில் வருகிற ஸ்வாமிகளையும்தான். ‘மடம்’ என்ற ஸ்தாபனத்திலிருந்து கொண்டு லோகத்திற்கு தர்மங்களை எடுத்துச் சொல்லும் குருக்களாக இருப்பதால், குரு பீடம் என்பதிலிருந்து கொண்டு ‘ஆபீஸ்’ பண்ணும் ஸந்நியாஸிகளாக இருப்பதால் – அதாவது லோகப் பொறுப்பு என்பதே இல்லாத ஸந்நியாஸியாயில்லாமல் லோகத்தில் தர்மம் வளர்வதற்குப் பாடுபடும் பொறுப்பைப் பெற்றிருப்பதால் – இங்கே பரமஹம்ஸ பரிவ்ராஜகர்களுக்கான விதிமுறைகளில் சில மாறுதல்கள் பண்ணியிருக்கிறது. ஸந்நியாஸ உபநிஷத்துகளிலும், ஸ்ம்ருதிகளிலும், மற்ற பழைய புஸ்தகங்ளிலும் சொல்லியிருப்பதற்குக் கொஞ்சம் வித்யாஸமாக நாம் ஆசார்யாளிடம் பார்க்கிறோம், அவருடைய மடங்களைச் சேர்ந்த ஸ்வாமிகளிடம் பார்க்கிறோமென்றால் அதற்குக் காரணம், இவர்கள் ஒரு பொறுப்பும் இல்லை என்று விட்டவர்களாக இல்லாமல், லோகத்தில் தர்மாபிவிருத்திக்குப் பொறுப்புப் பெற்றவர்களாக இருப்பதுதான்.
இந்த விஷயம் இருக்கட்டும். நான் சொல்ல வந்தது பரமஹம்ஸ ஸந்நியாஸிகளையும் அத்யாச்ரமிகளையும் பற்றியது. ஸந்நியாஸத்தையும் கடந்தவரே அத்யாச்ரமி என்றாலும் பழைய சாஸ்த்ரங்கள் சிலதில் பரம ஹம்ஸர்களையே நாம் அத்யாச்ரமி என்று சொல்கிறவரைப் போலத்தான் வர்ணித்திருக்கிறது. அவற்றில் பரமஹம்ஸ ஸந்நியாஸிகளையே வஸ்த்ரம், தண்ட – கமண்டலம் ஆகியவற்றையும் விட்டுவிட்டவராகத் சொல்லி, சுகர், தத்தர் முதலியவர்களையும் இந்த கோஷ்டியிலேயே சேர்த்திருக்கிறது.
பரமஹம்ஸ ஸந்நியாஸிக்கு அப்புறம் துரீயாதீதர், அவதூதர் என்று இரண்டு பிரிவுகளைச் சொல்லி இவர்களை அத்யாச்ரமிகள் என்று குறிப்பாக வேறுபடுத்திக் காட்டும் வழக்கம் வந்தபிறகும்கூட அத்யாச்ரமிகளைப் ‘பரமஹம்ஸ பரிவ்ராஜகர்கள்’ என்று சொல்வது நீடித்து வந்திருக்கிறது. ஆசார்யாளே ‘சாந்தோக்ய பாஷ்ய’த்தில் ஒரு இடத்தில்3 “பரமஹம்ஸ பரிவ்ராஜகை: அத்யாச்ரமிபி:” என்று சொல்லியிருக்கிறார். (“பரம்ஹம்ஸ பரிவ்ராஜகர்களான அத்யாச்ரமிகளால்” என்று அர்த்தம்.)
அதாவது, யதி தர்மங்கள் என்னும் ரூல்கள் உள்ள நாலாவது ஆச்ரமியே ஸந்நியாஸி. இந்த ரூல்களும் நழுவிப் போய் நாலாவது ஆச்ரமத்திற்கும் மேலே போனவனே அத்யாச்ரமி என்று வித்யாஸம் பார்க்காமல் இரண்டு பேரையும் ஒன்றாகிக் குறிப்பிடும் வழக்கம் வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறது. ஸம்ஸார ஆசையையும் இஹ லக்ஷ்யத்தையும் விட்டுவிட்டு ஒருத்தன் கிளம்பிவிட்டானென்ற பிறகு, அப்படிக் கிளம்பின எல்லாரையும் ஒன்றாகவே சொல்லிவிடலாமென்று ஏற்பட்டிருக்கிறது.
விவிதிஷா ஸந்நியாஸம், வித்வத் ஸந்நியாஸம் என்று இரண்டை சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. யதி தர்ம ரூல்களுக்குக் கட்டுப்பட்டுத் துரீயாச்ரமம் என்று ஆரம்பிப்பவனே, அந்த ஆச்ரமத்தில் முன்னேறி முன்னேறி ரூலையும் விட்டு அத்யாச்ரமியாக ஆவதை இந்தப் பாகுபாடு தெளிவு செய்து காட்டுகிறது. ‘விவிதிஷா’ என்றால் ஒன்றை அறிய ஆசைப்படுவது, மனஸாரத் தாபப்படுவது. ஸமாதி நிலை, ஆத்ம ஸாக்ஷாத்காரம், ப்ரஹ்மானந்தம் என்றெல்லாம் சொல்லப்படுவது என்னவென்று அறிய ஒருவர் ஆசைப்படுகிறார், தாபப் படுகிறார். இப்படியொரு ‘விவிதிஷா’ அவருக்கு இருக்கிறது. குடும்ப வாழ்க்கையில் உள்ள மட்டும் மேலே சொன்ன லக்ஷ்யத்துக்கே டெடிகேட் பண்ணிக் கொண்டு ப்ரயாஸைப்பட முடியாது என்று அவர் feel பண்ணுகிறார். அதனால் க்ரமமாக சாஸ்த்ரங்களில் சொல்லியுள்ளபடி ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு தண்ட, கமண்டல காஷாய தாரணம், மற்ற யதி தர்ம ரூல்கள் ஆகிய எல்லாவற்றையும் பண்ணுகிறார். இதுதான் விவிதிஷா ஸந்நியாஸம்.
இப்படி ஸந்நியாஸியாகி ஆத்ம சாஸ்த்ரங்களைப் படித்து விசாரம் பண்ணிக் கொண்டு முன்னேறும்போது ஸமாதி நிலை பற்றிச் சொல்லியிருப்பதெல்லாம் நிஜமானவைதான் என்ற நிச்சயம் அவருக்கு ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சம் அந்த அநுபவம் வந்து தொட்டுவிட்டுப் போகிறது. தொடும், ஆனால், போயும் விடும்! கரையோரத்தில் ஸமுத்ர அலை கொஞ்சம் காலைத் தொட்டுவிட்டுப் போய்விடுகிற மாதிரிதான்! ஸமுத்ரத்தில் அப்படியே முழுகி நனையவில்லை!
கேள்வியறிவில் பிறந்த ஆசையானது இப்படிக் கொஞ்சமாவது அநுபவ அறிவாகவே ஆகும்போது விவிதிஷா போய் ‘வித்வத்’ உண்டாகிறது.
ருசி கண்டுவிட்டதால் அப்படியே அந்த ரஸத்திலேயே முழுக்க முழுகிப் போகவேண்டுமென்று அவருக்குத் தோன்றுகிறது. அச்சமயத்தில் யதி தர்ம ரூல்படிப் பார்த்துப் பார்த்துப் பண்ணிக் கொண்டிருப்பதுகூட நிதித்யாஸனம் என்பதான தீவிர ஆத்ம விசாரத்துக்கு இடைஞ்சல் பண்ணுவதாக நினைக்கிறார். அதனால் தண்ட, கமண்டல, காஷாயாதிகளையும், மற்ற யதி தர்ம ரூல்களையும் விட்டுவிடுகிறார். அதுதான் ‘வித்வத் ஸந்நியாஸம்’ என்பது.
3 VIII-12-1 பாஷ்யம் முடியுமிடம்.
_____________________________________________________________________________________________________________________________
Final liberation
Because of this statement, it should not be construed that the ’rule’ based Sanyasashrama itself started only with Gowdapada. It was there from the very beginning, even before Gowdapada. The concept of four stages of life has been there right from the days of Vedas. The very mention in the Vedas about Samhita-Brahmanam-Aaranyakam-Upanishad (संहिता- ब्राह्मणम्- आरण्यकम्- उपनिषद्), is to show respectively the four phases viz. a Brahmachari’s education, [ अध्ययनम् – study of the Vedas), followed by conduct of rituals and sacrifices by the householder (यज्ञअनुष्ठानम् -Yajnanushtana of the Grihastha – गृहस्थ), later resigning to the forests (वानप्रस्थ) for discharging one’s duties (कर्मानुष्ठान) and being engaged in inquiry into the supreme truth and, finally giving up all activities and undertaking inquiry into supreme truth as a sanyasi. (It was Paul Deussen, a German, who had clearly understood this order in the Vedas and had stated it! He had unbounded devotion to the teachings of our Acharya!) In the Brihadaaranya Upanishad we see Yajnavalkiya taking to an ascetic’s life, leaving his wives. Similar to ‘Narada Parivrajaka Upanishad’ (नारदपरिव्राजक उपनिषत्), there are ten to fifteen Upanishads, which describe how many types are there in Sanyasa – like ‘Avadhootopanishad’ (अवधूत उपनिषद), ‘Sanyasopanishad’ [संन्यासोपनिषद्] etc. Manu was the one who created the first human. He also created the text, called as Manu Smriti [मनु स्मृति] or Manu Dharma Sastra [मनु धर्म शास्त्र], to teach the man how to conduct his life. In that text and also in the Smritis that came subsequently, the four stages of life, find a mention. Sanyasashrama [also called तुरीयाश्रम] is prescribed as the fourth stage in all of them. Smritis (स्मृति) have ordained that the Tureeya Padam (तुरीय पदम् – the fourth state of Samadhi which is beyond the three states of being awake, dream state and sleep) should be attained only from Tureeyashrama. There are ‘Nibandhana Granthas’, [निबन्धन ग्रन्थाः – treatises containing the rules], which have compiled the matters contained in the Dharma Sastras, after studying them. Among them there is one Visveswara Smruti [विश्वेश्वर स्मृति], which elaborates the Sanyasa Dharma. It is also called Visveswara Samhita. Thus, ever since the creation of life, Sanyasis who have taken up Sanyas traditionally, have been there. Acharya himself has mentioned in his commentary about predecessors who were Sanyasis and Atyashramis, who had either taken entirely to Advaita tradition, or partly taken to it.
However, in the Guru tradition of Acharya (It is the same Guru order for all of us who have come in that order as disciples, after him; In that) only Gowda Pada (गौडपाद), his Supreme Guru and Govinda Bhagavat Pada, his Guru, had taken to asceticism, as per the rules and undertaken the traditions and conduct prescribed for that Ashrama.
Since Sanakadiyas, Datta, Suka, etc., were great personages who went beyond the state of Sanyasa, they also had the authority to give Diksha [दीक्षा-initiation]. That is how Gowda took to Sanyasa from Suka.
Out of the four types of asceticism, called, Kuteechaka [कुटीचक], Bahoodaka [बहूदक], Hamsa [हंस] and Paramahamsa [परमहंस], ascetics of Advaita belong to the most elevated, fourth type. That is, they were ‘Paramahamsas’. As they would not stay put in one place but keep moving, it is customary to refer to them as, ‘Paramahamsa Parivrajaka’ [परमहंस परिव्राजकाः].
Acharya is also called so and so are the Swamijis who come under his Matam. As these Swamijis are Gurus teaching ethical precepts to the world while being within the organization called ‘Matam’, being venerable teachers in the Guru Peeta and discharging ‘office’ – that is, not being hermits who would not have any worldly responsibilities but having the responsibility of fostering Dharma in the world, some changes have been effected in the rules applicable to these Paramahamsa Parivrajakas. If we see in our Acharya and in the Swamijis belonging to his Matams certain things different from what is stated in the Sanyasa Upanishads, Smritis and other ancient books, it is only because these people have not renounced all the responsibilities but shoulder the responsibility of advancement of Dharma in the world.
Let this matter be. The matter I wanted to talk about pertains to Paramahamsa Saints and Atyashramis. Although Atyashramis are those who have gone beyond Sanyas, in some of the ancient Sastras even the Paramahamsas have been described the same way we would describe an Atyashrami. These Sastras describe Paramahamsa saints as those who have given up garments (वस्त्र), Dhanda (दण्ड-holy stick), Kamandala [कमण्डल – water pot used by ascetics] etc. and also include people like Suka, Datta etc., in that group.
Beyond Paramahamsa Sanyasis, two types are mentioned – Tureeyaatita [तुरीयातीत] and Avadhootha [अवधूत], both of whom are considered Atyashramis. Even after the above convention had set in, the practice of referring Atyashramis as ‘Parmahamsa Parivrajakas’, has continued. Acharya himself, in one place in ‘Chandogya Bhashyam3’ (छांदोग्य भाष्यम्), has mentioned ‘Parmahamsa Parivrajakai: Atyashramibhi:’. (It means ‘by the Atyashramis, who are Parmahamsa Parivrajakas’).
That is, A Sanyasi – belonging to the fourth ashrama – is one who is bound by the rules called ‘yati dharma’ [यतिधर्म]; an Atyashrami is one who has gone to a state which is beyond these rules. The practice of referring both (Sanyasi and Atyashrami), as same, without appreciating the difference, has been there for a long time. If a person gives up the desires of householder and of worldly goals and goes away, it is stated that all such people may be referred to in the same way.
Sastras mention two things – Vividisha Sanyasam [विविदिषा संन्यासम्] and Vidvat Sanyasam [विद्वत् संन्यासम्]. This categorization clarifies the distinction between a person starting with Tureeyashrama, sticking to Yati Dharma rules and moving forward gradually in that stage , and becoming Atyashrami, giving up all the rules. ‘Vividisha’ means a desire to learn something, a longing to learn. Say a person desires to know what it is to be in a state of Samadhi, Realisation of the self, [Atmasakshatkaram-आत्मसाक्षात्कारम्], the joy of realizing the Ultimate [Brahmanandam-ब्रह्मानन्दम्], etc.; he longs to know. He has such a ‘vividisha’. He feels that as long as he leads a householder’s life, he would not be able to endeavor for, or dedicate himself to these objectives. Therefore, strictly as per the rules of the Sastras, he takes to Sanyasa and follows the rules of Danda , Kamandala and other Yati rules. This is Vividisha Sanyasam.
After becoming a Sanyasi and progressing further and engaging in inquiry by studying Sastras relating to Self, he gets convinced that whatever has been said about the state of samadhi is true. On and off that experience touches him a little and fades off. It touches him, but goes away! It is like the waves in a beach – coming and going away after touching the feet! He does not get fully drenched in that sea!
When the desires born out of learning, gradually turn into experiences, ‘Vidvat’ arises, replacing Vividisha.
Having had a taste of those experiences, it occurs to him that he should get fully drowned in that bliss. At that stage, he feels even the practices he has been following meticulously as per the rules of Yati Dharma, are a hindrance to the deep, profound and repeated meditation, called Nididhyasana [निदिध्यासन]. Therefore, he gives up the Danda, Kamandala, kaashayadharana and other rules of Yati Dharma. That is what is called ‘Vidvat Sanyas’.
3 VIII-12-1 end of Bhashyam
____________________________________________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
Leave a Reply