87.2 Sri Sankara Charitham by Maha Periyava – Final liberation

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The concepts of Nirvanam and Ativarnashrami has been explained in a simple and supreme manner by Sri Periyava below.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for the great sketch and audio. Rama Rama


(நிர்வாணம்)

சுகர் மாதிரியானவர்களுக்கு வ்யவஸ்தை விதிகள் ரூல்கள் எதுவுமில்லை.

நாலு ஆச்ரமங்களில் முடிவானது ஸந்நியாஸம். அதனால் அதற்கும் ரூல்கள் உண்டு; இப்படித்தான் பண்ணனும், இப்படிப் பண்ணப்படாது என்று அநேகம் உண்டு. ஒரு ரூலுக்கும் உட்படாத ப்ரம்ம ஸ்வரூபமாகவே இருந்தவர் சுகர். அதனால் ஸந்நியாஸாச்ரமத்திற்கும் மேலே போய்விட்டவர். இப்படி நாலு ஆஸ்ரமங்களுக்கு மேல போய் விட்டவர்களுக்கு ஜாதி ஆசாரங்களாகிய ரூல்களும் கிடையாதலால், ஆச்ரமங்கள், வர்ணங்கள், ஆகியவற்றைக் கடந்துவிட்ட அவர்களை ‘அதிவர்ணாச்ரமிகள்’ என்று சொல்வார்கள். அத்யாச்ரமிகள் என்றும் சொல்வதுண்டு. ஆச்ரமதைக் கடந்தவர் என்றாலே வர்ணத்தையும் கடந்தவராகத்தான் இருக்க வேண்டும். அதனால் இப்படி (அதிவர்ணாச்ரமி என்பதற்குப் பதில் அத்யாச்ரமி என்று) சொன்னாலே போதும்.

குரு பரம்பரையில் தக்ஷிணாமூர்த்திக்கு அடுத்ததாக மஹாவிஷ்ணுவுக்கு முன்பாக, தத்தாத்ரேயரைச் சொல்லும் வழக்கம் உண்டு. அமூர்த்தியான பரப்ரஹ்மமாக இருக்கப்பட்ட தக்ஷிணாமூர்த்தி, அப்புறம் த்ரிமூர்த்தி ஸ்வரூபமான தத்த(ஆத்ரேய)ர், அதற்கப்புறம் த்ரிமூர்த்திகளில் வரும் மஹாவிஷ்ணு, ப்ரம்மா என்று குரு பரம்பரை போகிறது. த்ரிமூர்த்திகளில் விட்டுப்போன சிவனும் தக்ஷிணாமூர்த்தியில் வந்துவிடுகிறார். அப்புறம் இந்தப் பரம்பரைக்கு நடுநாயகமாக, ஒரு ஹாரத்தின் நடுவிலுள்ள ரத்னப் பதக்கம் மாதிரியாக உள்ள ஸ்ரீ சங்கர பகவத் பாதாளும் சிவன்தான்.

(நான்) சொல்ல வந்தது, சுகரைப் போல அதி வர்ணாச்ரமியாக குரு பரம்பரையில் வருகிற இன்னொருவர் தத்தர் என்பது. மும்மூர்த்தியும் சேர்ந்தவர் என்றாலும் அவர் தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, ப்ரம்மா ஆகியவர்கள் தெய்வங்களாகவே இருப்பதுபோல இல்லாமல் பூலோகத்தில் அவதூத ஸந்நியாஸியாகத் திரிந்து கொண்டிருந்தவர். ‘ஸந்நியாஸி’ என்றால் அஸல் ஸந்நியாஸாச்ரமி அல்ல, அந்த மாதிரி, உடைமைகளையெல்லாம் உதறிவிட்டு ஸதாவும் ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்தவர். வாஸ்தவத்தில் அவரும் ஸந்நியாஸிக்குரிய முண்டனம், காஷாயம் இல்லாமல் அதிவர்ணாச்ரமியாக ஜடையுடன், திகம்பரராக இருந்தவர்தான்.

உள்ளுக்குள்ளே ஸதாவும் ப்ரம்மாநுபவத்திலேயே இருக்கும் அதிவர்ணாச்ரமி வெளியில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உடைமைகளை ஆண்டு கொண்டு ராஜாவாகக் கூட இருக்கலாம். ஒரே இடத்தில் ஜன்மா பூரா வஸிக்கலாம், எதுவும் பண்ணலாம். ஆனாலும் தத்தரும் சுகரும் அப்படி இல்லாமல் ஸந்நியாஸிகளைப் போல எல்லா உடைமைகளையும் விட்டவர்கள்; ஒரே இடத்திலில்லாமல் ஸஞ்சாரம் செய்து கொண்டேயிருந்தவர்கள். “யம் ப்ரவ்ரஜந்தம்” என்று ச்லோகத்தில் ஆரம்பித்தபடி ஸந்நியாஸிகளுக்கே உரிய பரிவ்ராஜக வ்ருத்தியை (ஓரிடத்தில் தங்காமல் இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதான வாழ்க்கை முறையை) சுகர் மேற்கொண்டிருந்தார். தத்தாத்ரேயரும் அப்படித்தான்.

ஞானாசார்யர்களாக நமஸ்கரிக்கத் தக்கவர்களில் ஸநகர், ஸநந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் என்று ஸஹோதரர்களாக நாலுபேர். அந்த நாலு பேரையும் ஒன்று சேர்த்து பகவானின் (விஷ்ணுவின்) 24 அவதாரங்களில் ஒன்றான குமாராவதாரம் என்பார்கள். ‘குமாரர்’ என்று சொன்னதற்கு ஒரு காரணம் நாலு பேரில் கடைசியானவரின் பேர் ஸநத்’குமாரர்’ என்றிருப்பது. இன்னொரு காரணம் இந்த நால்வர்தான் ஸுப்ரஜைகளாக ப்ரஹ்மாவுக்கு முதல் முதலில் தோன்றிய புத்ரர்கள் – அதாவது ப்ரம்ம ‘குமாரர்கள்’ – என்பது. எண்ணிய மாத்ரத்தில் மானஸ புத்ரர்களாக இவர்களை ப்ரம்மா ஸ்ருஷ்டித்துவிட்டார். (குமார அவதாரம் என்று சொல்வதற்கு) மூன்றாவது காரணம் இவர்கள் அன்று போல் என்றும் குமாரர்களாகவே இருப்பது. தக்ஷிணாமூர்த்தியும் சுகரும் என்றும் யுவாவாக இருப்பவர்கள். மார்கண்டேயரையும் ‘என்றும் பதினாறு’ என்கிறோம். ஸநகாதி நால்வரோ யௌவனம் என்கிறவரை கூடப் போகாமல் என்றும் அஞ்சு வயஸு பாலர்களாகவே, குமாரர்களாகவே இருப்பவர்கள். மஹாஞானிகளாக, சுகர் மாதிரியே ஸ்த்ரீ புருஷ பேதம் தெரியாதவர்களாக, பிறந்தவுடனேயே நிவ்ருத்தி மார்க்கத்திற்குப் போய் ப்ரஹ்ம ஞானிகளாகிவிட்டவர்கள். மற்றவர்களுக்கும் ஞானம் அருளியவர்கள். அத்வைத ஸம்பிராதய மடங்களில் வ்யாஸ பூஜை பண்ணும்போது குரு பரம்பரையில் வரும் அத்தனை பேருக்கும் பூஜை செய்கிறோம். அவற்றில் பரஸ்பர ஸம்பந்தம் உடைய சில பேரை ஐந்தைந்து பேர் கொண்ட பஞ்சகங்களாக group பண்ணிப் பூஜிக்கிறோம். அந்தப் பஞ்சகங்களில் ஒன்றில் இப்போது சொன்ன ஸநகாதி நால்வரோடு ஸநத்ஸுஜாதர் என்பவரையும் சேர்த்து ஐந்து பேராக்கிப் பூஜை பண்ணுகிறோம். இவர்களும் சாஸ்த்ரோக்தமாகச் சொல்லப்படும் ஸந்நியாஸாச்ரமம் வஹித்தவர்களல்ல. மொட்டைத் தலையும், காஷாயமும் இல்லாதவர்கள். சுகரையும், தத்தரையும் போலத்தான் இவர்களும் நிர்வஸ்த்ரமாக ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். குழந்தைகளாக இருப்பதால் அதில் பாமரர்களுக்கும்கூட விகல்பம் தெரியாது. இவர்களையும் அதிவர்ணாச்ரமிகளில்தான் சேர்க்க வேண்டும்.

மொத்தத்தில் விஷயமென்னவென்றால் குரு பரம்பரையில் சுகர் வரையில், சுகர் உள்பட எவருமே ஸ்ம்ருதிகளில் சொல்லியிருக்கும்படியான ரூல்களுக்கு உட்பட்ட ஸந்நியாஸ ஆச்ரமம் வஹித்தவர்கள் அல்லர். ஆனாலும் ப்ரஹ்ம ஞான ஸ்வரூபங்களாக இருந்ததால் ப்ரம்மவித்யைக்கு ஆசார்ய புருஷர்களாக இருந்தார்கள்.

கலியில் க்ருஹஸ்தாச்ரமத்திலிருந்து கொண்டு ஞானோபதேசம் செய்வது ஸரி வராது என்று பார்த்தோம். அப்படியே தான் அதிவர்ணாச்ரமமும். அதிவர்ணாச்ரமிக்கு இருக்க வேண்டிய ஸ்திரமான ப்ரம்மாநுபவத்தைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப்படாமல், அவனுக்கு ஆசாரங்கள் எதுவும் வேண்டியதில்லை என்றிருப்பதை மட்டும் எடுத்துக் கொண்டு, மனம் போனபடிச் செய்கிற வேஷதாரிகள் தங்களை அதிவர்ணாச்ரமிகளாகச் சொல்லிக் கொண்டு புறப்படக்கூடிய யுகம் இது. தற்காலத்தில் மனஸுக்கு வேதனை தருவதாக இப்படி அங்கங்கே கேள்விப்படுகிறோம். அதனால் அதிவர்ணாச்ரமி என்றால் அவநம்பிக்கை, அவமரியாதை, பரிஹாஸம் எல்லாமும் தோன்ற இடம் கொடுத்திருக்கிறது. எனவே கலியில் அதிவர்ணாச்ரமிகள் குரு பரம்பரையில் வருவதற்கில்லை என்றுதான் சுகாசார்யாளுக்கு அப்புறம் விதிவத்தாக ஸந்நியாஸாச்ரமம் வாங்கிக் கொண்டவர்களின் பரம்பரை கௌடபாதரிலிருந்து தொடங்கியது.

____________________________________________________________________________________________________________________________
Final liberation

For people like Suka, there are no systems, rules or regulations.

Among the four stages of life, Sanyasam [संन्यासम् –renunciation] is the last. Therefore, it also has rules. There are many (rules) as to what should be done and what should not be done. Suka was beyond rules since he lived as a person who had realized the ultimate truth – as a Brahma Swarupa [ब्रह्मस्वरूप]. He had gone to a stage beyond the Sanyasa Ashrama [सन्यास आश्रम]. For people who have gone beyond the Sanyasashrama there are no rules of caste, or the need to observe the traditions or dictates of Sastra (Aachara) etc. Such people are called ‘Ativarnashrami’ [अतिवर्णाश्रमि], having gone beyond the ashramas, caste order, etc. They are also called, ‘Atyaashrami’ [अत्याश्रमि].  If one has gone beyond ashrama, he must have also gone past the caste order.  Therefore, it is enough to refer to them in this way (Atyashrami instead of Ativarnashrami).

In the Guru tradition, there is a convention of mentioning the name of Dattatreya [दत्तात्रेय] after Dakshinamurthy and before Mahavishnu. The Guru tradition goes thus: Dakshinamurthy, who is the formless Supreme One [परब्रह्मम्], then Datta(atreya) – the combined form of Trimurti, followed by Mahavishnu and Brahma who are part of the triumvirate.  Shiva, the one omitted among the triumvirate, is already included as Dakshinamurthy.  Later in the very middle of this tradition – like the pendant made of precious gem in a necklace – comes Adi Sankara Bhagavat Pada who is Siva himself.

(I) was coming to say that the other person in the Guru Parampara, who was a Ati Varnashrami like Suka, was Datta.  Although he was an amalgam of the triumvirate, unlike Dakshinamurthy, Mahavishnu and Brahma, who are deities, he (Datta) moved around in the material world as an Avadhoota Sanyasi (अवधूत संन्यासी).  When we say, ‘Sanyasi’, he was not like the usual Sanyasashrami but had similarly given up all his possessions and was always wandering. Actually, he was also not tonsured nor was wearing ochre robes which normally applies to sanyasis, but was Ativarnashrami with matted hair, as a Digambara.

The Ativarnashrami, who is ever experiencing Brahmam within himself, can have any kind of outward appearance.  He can even be a king, ruling over his citizens; He could reside in the same place throughout his life.  He can do anything.  However, Datta and Suka were not like that; like Sanyasis, they had given up all their possessions. They were wandering all the time, without staying put in one place.  As mentioned in the beginning of the sloka, “yam pravrajantam” [यं प्रव्रजन्तम], Suka had undertaken the lifestyle, exclusive to Sanyasis [ परिव्राजक वृत्ति – conduct of not staying in one place, but always moving to another].  So also was Dattatreya.

Among people who can be respected as teachers of Supreme knowledge, are the four brothers of Sanaka [सनकः], Sanandana [सनन्दनः], Sanaatana [सनातनः] and Sanatkumara [ सनत्कुमारः].  Together, these four are referred to as ‘Kumaaraavataara’ [कुमारावतार], one of Bhagavan’s (Vishnu’s) 24 incarnations.  The reason for calling as “Kumara” is that the name of the last of the four is Sanat ’Kumara’.  Another reason is that they are the four sons who are the first off-springs of Brahma – that is, Brahma ‘Kumaras’.  He had created them from his mind [मानस पुत्राः], instantly by his thought. The third reason (for calling as Kumara avataram), is that they remained young forever.  Dakshinamurthy and Suka remain young always.  We call Markandeya, as “Enrum Padhinaru” [என்றும் பதினாறு-forever sixteen].  Whereas these Sanakadi four, remain as five- year old children – Kumaras – forever, without even reaching the stage of being young. Like Suka, they too were not aware of the distinction between male and female and had taken to the Nivrutti [निवृत्ति] mode immediately after birth and became persons of great spiritual wisdom. They had also blessed others with Spiritual wisdom.  When we perform Vyasa puja in the Matam following to the Advaita [अद्वैत] tradition, puja is done to all those who come in the Guru Parampara. They are made into groups of five – panchakam [पञ्चकम्] and puja is performed to them; in each group, all the five are connected to each other.  One of the panchakams for which puja is performed comprises of the Sanakadi four we had talked about just now, along with another Guru called, Sanatsujatha [सनत्सुजातः].  These people also had not gone with the Sastras and had not taken to Sanyasashrama.   They did not have tonsured heads and ochre robes.  They were ever roaming unclothed, just like Suka and Datta.  As they were small children, even common people did not find it wrong.  They should also be included in the Ativarnaashramis.

On the whole, none in the Guru Parampara – upto Suka and including Suka – had occupied the Sanyasashrama, bound by the rules mentioned in the Smrutis.  Notwithstanding that, since they were personification of spiritual wisdom [ब्रह्मज्ञान-Brahmajnana], they were teachers of sacred knowledge [ब्रह्मविद्या – Brahmavidya].

We had seen that in Kali [yuga], it would not be appropriate to preach the superior knowledge, if one remained a householder.  So it is with Ativarnashrama also.  This is the yuga when people go about claiming themselves and masquerading as Ativarnashrami, without bothering about the permanent blissful divine experience a Ativarnashrami should have, but doing whatever they pleased by choosing selectively only that portion which says that there is no need for them to abide by the traditions. Nowadays we hear such things happening here and there, which pains us. This has led to Ativarnashramis facing mistrust, disrespect and ridicule.  That is why, in Kali, recognizing the fact that Ativarnashramis should not come in the order of Guru Parampara, the tradition of people taking to Sanyasashrama, as a rule, started with Gowdapada.

________________________________________________________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. சொல்லிட உயர் வார்த்தை
    இல்லை என்பதாலே
    சொல்லாமல் இருக்க இயலுமோ
    சௌபாக்யவதி சௌம்யா !

    கண்ணுக்கு விருந்தாய்
    வண்ண தூரிகை தனிலே
    காரிகையே எழிலோவியம் தந்து
    பேருவகை தந்தனையே

    படைக்கும் பிரம்மனையும்
    காக்கும் விஷ்ணுவையும்
    போதிக்கும் தட்சிணாமூர்த்தியும்
    படைத்ததோடு அல்லாமல்

    மூவரையும் இணைத்து
    தாத்தாத்ரேயரையும்
    சுக சனத் குமாரரோடு சத்குரு
    ஆதி சங்கரரையும் தந்து

    குரு பரம்பரையைக் காட்டி
    செவிக்கு தேனமுது தந்து
    பேரானந்தம் தந்த உனக்கு
    பரமானந்தம் பொழியட்டும் !

    ஓவிய மழை பொழியட்டும்
    யாவர் விழிகள் மலரட்டும் !
    தொடரட்டும் நின் பணி செவ்வனே
    செவ்வன செவ்வனவே

    வாழிய வாழிய வாழியவே
    அற்புதம் அற்புதம் அற்புதமே

    சந்தர் சோமயாஜிலு (@)
    சிவ ராம தாஸன்

Leave a Reply

%d bloggers like this: