86. Sri Sankara Charitham by MahaPeriyava – Sanyasis in Guru Parampara

Jaya Jaya Sankara Hara Hara Sankara – We have a perception about Sanyasis; however is that perception correct when it comes to our Adi Acharyas? Sri Periyava explains.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another beautiful sketch and audio. Rama Rama

 

குரு பரம்பரையில் ஸந்நியாஸிகள்

 

நாராயணனிலிருந்து ஆரம்பித்து சுகாசார்யாள் வரையில் நம்முடைய குரு பரம்பரையில் எவரும் நாம் நினைக்கிறபடி ஸந்நியாஸியாக இருக்கவில்லை. அவர்களில் எவரும் தலையை முண்டனம் பண்ணிக் கொண்டு, காஷாயம் கட்டிக் கொண்டு, பூணூலை அறுத்துப் போட்டவர்களில்லை. பேசாத ஆதி குரு தக்ஷிணாமூர்த்தியுங்கூடத்தான்! அவர், நாராயணன், ப்ரம்மா ஆகியவர்கள் தெய்வங்களாகவே இருந்தவர்கள். தெய்வங்கள் மனிதர்கள் மாதிரி நான்கு ஆச்ரமம் வஹிப்பதில்லை. வஸிஷ்டர், சக்தி, பராசரர், வ்யாஸர் ஆகிய நாலு பேரும் ரிஷிகள் என்னும்படியாகவே இருந்தவர்கள். ரிஷிகளையும் விஷயம் தெரிந்தவர்கள் மநுஷ்ய ஜாதியுடன் சேர்க்காமல், தேவ ஜாதி போல இன்னொரு தனி இனமாகத்தான் சொல்வார்கள். ஆகாசத்தில் ஈச்வரனின் ச்வாஸம் மந்த்ரங்களின் ரூபத்தில் இருப்பதைத் தங்களுடைய அதீந்த்ரிய சக்தியால் கண்டு, க்ரஹித்து, லோகத்திற்கு அந்த மந்த்ரங்களை வெளியிட்டுப் பரமோபகாரம் செய்தவர்களே ரிஷிகள். அதனால் ரிஷி என்பதற்கு இலக்கணம் ‘மந்த்ர – த்ரஷ்டா’ (மந்த்ரத்தைக் கண்டு கொள்ளக்கூடியவர்) என்று சொல்லியிருக்கிறது. இப்பேர்ப்பட்ட சக்தியைப் பெற்ற ஒருவர் மநுஷ்ய ஜாதியின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஸ்திதிக்குப் போய்விடுகிறார். ஞான த்ருஷ்டி முதலான அநேக தெய்விக சக்திகள் வாய்க்கப்பட்ட அந்த ரிஷிகளைத் தனி வர்க்கமாகத்தான் சொல்லியிருக்கிறது. தெய்விகம், மாநுஷம், ஆஸுரம் (என்பதாக முறையே தெய்வத்தைக் குறித்தது, மனிதரைக் குறித்தது, அஸுரரைக் குறித்தது) என்று மூன்று ‘க்ளாஸ்’களைச் சொன்னதோடு நிறுத்தாமல், ‘தெய்விக’த்துக்கு அடுத்தாற்போலவும், ‘மாநுஷ’த்துக்கு முந்தியதாகவும் ‘ஆர்ஷம்’ என்றும் ஒரு தனி ‘க்ளாஸ்’ சொல்லியிருக்கிறது. ‘ஆர்ஷம்’ என்றால் ரிஷிகளைக் குறித்தது என்று அர்த்தம்.

இப்படி மனித ஜாதிக்கு மேலே போன ரிஷிகளாகவே வஸிஷ்டரிலிருந்து வ்யாஸர் வரை இருந்தார்கள், அவர்களில் யாரும் பூணூலை அறுத்துப் போட்டுவிட்டு, தலையை மொட்டையடித்துக் கொண்டு, காவி கட்டிக் கொண்டிருந்த ஸந்நியாஸிகளாக இல்லை.

ஆனாலும் இவர்கள் எல்லாரும் ப்ரம்ம ஞான ஸித்தி பெற்றவர்கள். அதாவது மனிதராகப் பிறந்தவர்கள் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு அடைகிற லக்ஷ்யம் எதுவோ அதை அடைந்தவர்கள்.

(தக்ஷிணாமூர்த்தி, நாராயணன், ப்ரம்மா ஆகிய தெய்வங்களின் ப்ரஹ்ம ஞானத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை.)

அப்புறம் சுகர், அவர் எப்படியிருந்தார்? அப்படி, இப்படி, எப்படி என்று எதுவுமே சொல்ல முடியாத அத்வைத நிலையிலேயே கர்ப்பத்தில் தோன்றிய நாளாக இருந்தவரவர். அவரும் தலையை மொட்டை அடித்துக் கொண்டதாகச் சொல்லியிருக்கவில்லை. காஷாயமும் கட்டிக் கொள்ளவில்லை. எந்த வஸ்த்ரமுமே கட்டிக் கொள்ளவில்லை. ஸ்த்ரீ – புருஷ பேதங்களே அடியோடு தெரியாதவராக இருந்ததால் குழந்தைபோல வஸ்த்ரமே இல்லாமல் அவர் பாட்டுக்கு ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டிருந்தார். ‘அவதூதர்’, ‘திகம்பரர்’ என்று சொல்கிறபடி இருந்தார்.

அவதூதர் என்றால் ஸகலத்தையும் விட்டுவிட்டவர். ‘திகம்பரர்’ என்பதில் ‘திக்’, ‘அம்பரம்’ என்று இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ‘திக்’ என்றால் திசை. (தமிழில் திக்கு என்கிறோம்.) ‘அம்பரம்’ என்றால் வஸ்த்ரம். ‘பீதாம்பரம்’ என்கிறோம். ‘பீத’மான, மஞ்சள் கலரான அம்பரம் – மஞ்சள் வஸ்திரம்தான் பீதாம்பரம். திகம்பரமென்றால்? திசைகளே வஸ்திரம்! அப்படியென்றால்…. எட்டு திசையும் நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கின்றன. வஸ்திரம் போட்டுக் கொண்டுள்ளபோது முதல் சுற்றாக நம்மை வஸ்திரம் சூழ்ந்து கொண்டு விடுகிறது. அப்புறம்தான் திக்கும் சூழ்வது. வஸ்திரத்தை அவிழ்த்துவிட்டால் திக்குகளே நேராக நம்மைச் சூழ்ந்து விடுகின்றன. அதைத்தான் ‘திகம்பரம்’ என்பது. அப்படியிருப்பவர் திகம்பரர். நிர்வாணமாயிருப்பவர் என்று சொல்கிறோம். [சிரித்து] ப்ரம்ம நிர்வாணம் என்னும் ஸத்ய ஸத்யமான நிலையிலேயே ஸதாவும் இருந்த சுகர் வஸ்திரமில்லாமலும் நிர்வாணமாயிருந்தார்!

______________________________________________________________________________________________________________________________

Sanyasis in Guru Parampara

Starting with Bhagavan Narayana and till Sukacharya, none of the people in our Guru tradition [गुरु परम्परा] were Sanyasis, as we generally tend to think.  None of them had shaven their heads, worn ochre robes or cut off the sacred thread. Even the silent ‘First Guru’ [अदि गुरु] Dakshinamurthy!  He, Narayana and Brahma were deities themselves.  Deities do not go through the four stages of life that humans do.  All the four, viz., Vasishta, Shakti, Paraasara and Vyasa were, what we call Rishis.  People in the know do not include Rishis as part of the human race but classify them as a separate class like the Devas.  Rishis are those, who, by their extraordinary abilities beyond the senses [अतीन्द्रियम्], identified the breath of Eswara in the form of mantras in space and rendered a great help by grasping the mantras and giving them to the world.  Therefore, it has been stated that the grammatical meaning of Rishi is ‘mantra-drashta’ [one who can identify Mantras- मन्त्र द्रष्टा]. A person with such great ability, transcends to a stage beyond the human race.  Such Rishis, who have many divine abilities like vision of the Supreme [ज्ञान दृष्टि], are stated to be of a separate category. Not stopping with mentioning only the ‘three classes’, viz. Divine, Human and demoniacal – referring to Deities [दैविक], Humans [मानुष]and Demons [आसुर] respectively – a ‘separate class’ named ‘aarsha’ [आर्ष] has been mentioned, which is placed after Divinity but before Humanity.  Aarsha means ‘pertaining to Rishis’.

Thus, beginning from Vasishta and till Vyasa, there were Rishis who were superior to the race of humans.  None of them were Sanyasis who remove their sacred thread or shaved their hair or wore ochre robes.  Despite that, all of them had completely attained the realisation of Brahmam [ब्रह्म ज्ञान सिद्धि].  That is, they achieved the objective which humans strive to attain by becoming Sanyasis.

(No need to mention about the spiritual wisdom of deities like Dakshinamurthy, Narayana, Brahma, etc.).

Then comes Suka [शुकः].  How was he?  He could not be classified under anything this way or that, since he was in a state of Advaita even from the time of being in the womb.  He is also not said to have tonsured his hair.  Nor had he worn the ochre robes (काशायम्).  In fact, he did not wear any clothes.  As he was totally oblivious to the distinction of female and male, he was roaming about like a child, without any clothes.  He was what is called, ‘Avadhoota’ [अवधूतः-ascetic who has renounced everything] or ‘Digambara’ [दिगम्बरः-naked mendicant].

Avadhoot means ‘one who has cast off everything’.  In ‘digambara’ there are two words, viz., ‘dik’ [दिक्] and ‘ambara’ [अम्बर]. ‘Dik’ means, direction. (In Tamizh we say ‘dhikku’-திக்கு).  ‘Ambara’ means garment.  We say, ‘peetaambara’.  It is the yellow colored [पीत] ambara – yellow garment! What is ‘digambara’?  The eight directions themselves are the clothes.  What does that mean?  We are always surrounded by the eight directions.  When we wear a cloth, that cloth surrounds us as the first covering.  Then the directions surround us. When the cloth is removed, the directions surround us directly.  That is what is called ‘digambara’.  The person who is like that is ‘Digambara’.  We say that he is naked.  (Laughing), Suka, who was always in the most truthful state of realisation of Brahmam [ब्रह्म निर्वाणम्], was also naked without clothes!

______________________________________________________________________________________________________________________________
Audio

 



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: