எதிரிடையாகத் தோன்றுகிறவையும் பசுவிடத்தில் ஒன்று சேர்கின்றன. ரக்த ஸமானமான அதன் க்ஷீரம் புத்தியைக் கெடுப்பதற்குப் பதில் சுத்தப்படுத்துவதைச் சொன்னேன்; உடம்புக்கு சக்தியைக் கொடுப்பதே உள்ளத்துக்கும் சுத்தி தருவதைச் சொன்னேன். இதைவிடவும் எதிரிடையான இன்னொன்று, அதனுடைய கழிவுப் பொருளான கோமயம் என்கிற சாணமும் பரிசுத்தப்படுத்துவதுதான். அது உடம்பு, உள்ளம் இரண்டையும் சுத்தி செய்வதாக இருக்கிறது. கழிவுப் பொருளான மலம்தான் பொதுவில் மிகவும் அசுத்தமானதாக இருப்பது; நோய் நொடிகளைப் பரப்புவது; பரம துர்கந்தமாகவும் இருப்பது. அதை உடனேயே தேய்த்து அலம்பி சுத்தம் செய்வோம். ஆனால் கோவின் மலமோ மற்ற மலங்களையும், ஏனைய அசுத்தங்களையும் போக்குவதாக இருக்கிறது; நோய்க்கிருமிகளை அழிப்பதாக இருக்கிறது. அது துர்கந்தமும் வீசுவதில்லை. அதற்குப் பவித்ரமான, ஆரோக்யமான ஒரு தினுஸு மணம் இருக்கிறது.
மற்ற பிராணிகளின் மலம் புனிதத்தன்மையைக் கெடுத்து அசுத்தி செய்வதாயிருக்க, கோமயம் மட்டும் அசுத்தியை நீக்கிப் புனிதம் செய்வதாக இருக்கிறது. சாப்பிட்ட உச்சிஷ்டம் – எச்சில் என்பது -– ஸுகாதாரப்படியும் அசுத்தம்; சாஸ்த்ரப்படியும் மடித்தப்பானது. அதன் அசுசியைப் போக்கிப் புனிதப் படுத்துவது கோமயம். அதனால்தான் எச்சிலிடுவதற்கு கோமயத்தை உபயோகிப்பது. பரம சுத்தத்தை க்ருஹத்துக்கு வரவழைப்பதற்காகவே, ஆரோக்யலக்ஷ்மியையும் ஸௌமங்கல்ய லக்ஷ்மியையும் நம் க்ருஹத்தில் குடிகொள்ளப் பண்ணுவதற்காக வாசலில் கோலம் போடும் இடத்தில் சாணம் தெளிப்பதும், வீட்டைச் சாணியால் மெழுகுவதும். இப்போது பாஷனின் பெயரில் இந்தப் பழக்கங்கள் எல்லாம் போய், எங்கே பார்த்தாலும் infection, pollution என்று ஆகியிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Even those factors which appear contradictory tend to exist in unison in the cow. I spoke about how its milk which is equivalent to its blood, cleanses the intellect instead of corrupting it; also about how that which gives strength for the body offers purity of the mind too. Even more a contradictory factor is that its excretion namely Ghomayam or Chaanam (cow dung) itself serves as a purifying agent. It happens to cleanse both our body as well as the mind. In general excreta happen to be the most impure thing on earth; it spreads diseases; and remains extremely foul-smelling also. We immediately wipe it off thoroughly and clean the place where it is found. Whereas, the excretion of the cow happens to remove all other excretions and impurities; tends to destroy the disease- spreading germs. It doesn’t give out a foul odor either. Instead, there is a sacred and a kind of healthy smell characterizing it.
While the excreta of all other animals tend to spoil things and make them impure, cow’s excretion tends to remove impurities and sanctify things. The leftover food after eating – Echchil or Uchchishtam – is impure and defiling in terms of hygiene as well stands against the rules of Shastras. It is Ghomayam (cow dung) that removes that impurity and sanctifies the place. That’s why it’s being used to clean the place where food is consumed. It is to bring home ultimate purity and sanctity by making the ‘Arogya Lakshmi’ (Personification of Health) and ‘Soumangalya Lakshmi’ (Personification of Goodness and Well-being) reside there that we observe the habit of using the chaanam (cow dung) to clean our doorstep and front yard before drawing the Kolam (Rangoli) and also to clean the insides of the house with it. Now all these habits have been forsaken in the name of fashion, the result of which there is only infection and pollution everywhere. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply