Periyava Golden Quotes-1066

நேராகத் தான் ஈன்ற கன்று என்ற ஒன்றை முன்னிட்டே கோ சுரப்பு விட்டாலும் அது நம்மைப் போன்ற மற்ற மநுஷ்யர்களுக்கும் இயற்கையாகவே தாயாயிருந்து போஷாக்குப் பண்ண வேண்டும் என்பதே பகவத் ஸங்கல்பம் என்றுதானே தெரிகிறது? அந்த மாத்ரு ப்ரேமையே கோவுக்கு வேறெந்த ப்ராணிக்குமில்லாத உன்னத ஸ்தானத்தைக் கொடுத்திருக்கிறது. அதை தெய்வமாகவே கருதும் உன்னதம்.

பசு தெய்வந்தான். ம்ருக ஜாதியாகத் தெரிந்தாலும் மாநுஷமான தாய் போல் பாலைக் கொடுக்கிற கோமாதாவாக இருக்கிற அவள் தெய்வமான ஸ்ரீமாதாவின் ஸ்வரூபமேதான். இஷ்டப்பட்டதையெல்லாம் அளிக்கிற அப்படிப்பட்ட தெய்வத் தாயாக அவள் இருக்கிறபோதே காமதேனுவாக விளங்குகிறாள். பசு பால் கொடுக்கும். இந்தக் காமதேனுப் பசுவோ பாற்கடலிலிருந்து உத்பவித்தவள். ஸ்ரீமாதாவேதான் அப்படி கோமாதாவாக வந்தாள். இதையேதான் ‘பஞ்சசதீ’யில் மூக கவி பிரார்த்திக்கிறார்; காமாக்ஷியம்பாளிடம், ‘எங்களுக்குக் காமதேநுவாக நீ இருப்பாய்!” என்று பிரார்த்திக்கிறார்.

காமதுகா பவ கமலே காமகலே காமகோடி காமாக்ஷி – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

 

Isn’t it obvious that though the cow secretes milk for the sake of its own calf only, God’s resolution must be that it should stay as a mother by natural means for all of us human beings and offer nourishment with its milk? That motherly affection itself has rendered the cow, a lofty position which is denied to any other animal — the elevation of being considered as Divine as God Himself.

The cow is certainly a God indeed. Though she appears to be an animal, the Gho Matha who offers milk like a human mother is nothing but an incarnation of the Divine Sri Matha. While remaining as the Divine Mother who bestows on us all that we wish for, She stands as Kamadenu. Normally cow gives milk. But this Kamadenu cow has originated from the ocean of milk itsef (Parkadal). Sree Matha Herself came down as Gho Matha. This is what Mooka Kavi prays for, in his ‘Panchashathi’; “Oh Mother! Be a Kamadenu for us”, he prays.

“Kamadhukha Bhava Kamale Kamakale Kamakoti Kamakshi” – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: