Periyava Golden Quotes-1064

‘கோமாதா’ என்று அம்பாளுக்கு நாமா சொன்னதற்கு முந்தி ‘குருமூர்த்தி’, ‘குணநிதி’ என்ற நாமங்கள் வருகின்றன. ஞானியான ‘குருமூர்த்தி’யாக, ஸத்வகுண ஸம்பன்ன ‘குணநிதி’யாக ஒருவரை உருவாக்கும் அநேக அம்சங்களில் ஆஹார சுத்தியும் ஒன்று. அப்படிப்பட்ட சுத்தமான ஆஹாரமாகப் பால் இருக்கிறது.

இதிலே ஒரு வேடிக்கை. சாக போஜனம் என்பதாகத் தாவரவர்க்கத்திலிருந்து பெறாமல், ஜீவஜந்துக்களிடமிருந்து பெறுகிற ஆஹார வகைகள் பொதுவாக ஸத்வ குணத்துக்கு ஹானி உண்டாக்கி ராஜஸ, தாமஸ குணங்களை வ்ருத்தி செய்வதாகவே இருக்கும். ஸத்வம்-ஸாத்விகம் என்றால் மனம் தெளிந்து சாந்தமாகவும் அன்பாகவும் இருப்பது. பரபரப்பு, படபடப்பு இல்லாமலிருப்பது. அதே ஸமயத்தில் ஓய்ந்துபோய்த் தூங்கி விழாமல் நல்ல விழிப்புடனும் இருப்பது. ரஜஸ்-ராஜஸம் என்றால் காம க்ரோதாதி மோதல்களில் துடித்துக் கொண்டு பரபர, படபட என்று பரப்பது. தமஸ்-தாமஸம் என்றால் எதிலும் ஊக்கம், உத்ஸாஹம் இல்லாமல் ஓய்ந்து போய் தூங்கி வழிந்து கொண்டு மந்தமாக இருப்பது. இந்த மந்த நிலையில் உசந்த மனோபாவங்கள் எழும்பாமல் காமக்ரோதாதிகள் உள்ளே முளை விட்டுக் கொண்டுதான் இருக்கும்; வெளியிலேதான் அவை துடிப்பாக வராமலிருக்குமே தவிர உள்ளே அசுத்தம்தான். ஸத்வம் மட்டுந்தான் சுத்தம். ரஜஸ், தமஸ் இரண்டும் அசுத்தம். ஒரு ஜீவ ஜந்துவிடமிருந்து பெறுகிற ஆஹார வஸ்து என்றால் அது ராஜஸ-தாமஸப் போக்குகளை உண்டாக்குவதே பொது இயல்பு. பசும்பால் ஜீவஜந்துவிடமிருந்து பெறுகிறதுதான். அது ரத்தத்துக்கே ஸமானம். அப்படிப்பட்ட ஒன்றை ஆஹாரம் பண்ணுவது ஸத்வ குணாபிவ்ருத்திக்கு ஹானி உண்டாக்குவதாக இருக்கும் என்பதோடு, அஹிம்ஸா போஜனத்துக்கும் விரோதமானதாகத் தோன்றுகிறது. ஆனால் நம்முடைய சாஸ்த்ரங்களோ அஹிம்ஸையையே பரம தர்மமாகக் கொண்டவனும், மனம், குணம் என்பவை அறவே அற்றுப் போகாமல் இருந்து கொண்டிருக்கிற வரையில் பரம ஸாத்விகனாகவே இருக்க வேண்டியவனுமான ஸந்நியாஸிக்கும் கோ க்ஷீர பானத்தை அநுமதித்திருக்கின்றன. ரக்த மாம்ஸம் என்றே தள்ளத்தக்க ஒன்றும் பரம பரிசுத்தத்தை உண்டாக்குவதாகப் பசுவிடம் இருக்கிறதென்றால் அது எப்பேர்ப்பட்ட தெய்வத்தன்மை பெற்றதாக இருக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In the Namavali, prior to being praised with the name ‘Gho Matha’, Ambal has been given the Namas, ‘Gurumurthi’ and ‘Gunanithi’.  Among the innumerable aspects involved in turning a person into a ‘Gurumurthy’ – a Gnani, an embodiment of Knowledge, and ‘Gunanithi’ – an abode of all virtues, Purity of food holds a key position.  Milk happens to be such a pure food.

There is something interesting here. Generally those types of food that are not derived from plant species called as Saga Bhojanam but are of animal origin, tend to destroy the Sathva Guna (virtuous character) and to develop Rajasa (Demonic character)  and Thamasa (Lazy and inactive) Gunas. ‘Sathvam – Sathvikam’ means having a clear mind and being in a loving and sedate state. It would be devoid of rage and furore; at the same, would be staying awake and alert, without being dull and lazy. ‘Rajas – Raajasam’ means to be raging always in the grip of lust and hostility. ‘Thamas – Thaamasam’ means to be dull and tardy without motivation and excitement, staying always in a sleepy state, lagging behind things. In this dull state of mind also, the feelings of lust and enmity would be brewing inside, without letting elevated feelings to blossom up; only they aren’t manifested externally, but remain as impurity within, all the same. Sathvam alone is pure; the rest of the two are only impure.

It is general nature that a type of food obtained from an animal is sure to induce Rajasa and Thamasa behavior. Cow’s milk is obtained from an animal indeed. It appears to be something which might hamper the development of Sathva Guna apart from being contradictory to the principle of Ahimsa Bhojana (vegetarian food). But our Shastras have permitted milk to be consumed even by a Sanyasi (sage) who has Ahimsa as his Parama Dharma (ultimate philosophy of life) and who has to stay as an ultimate Sathvik till his mind and character are totally done with. If something which ought to be shunned as related to bloody meat can exist in an ultimate pure state in a cow, then how divine and Godly it must have been! – Jagadguru Chandrasekharendra Saraswathy SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. It is very similar to a new born baby drinking mother’s milk! Cow also is a mother to all the humanity. Creation’s wonder of wonders!

Leave a Reply

%d bloggers like this: