On 19th May 2019, Sunday, Sri Periyavaa launched the website for Kumbakonam matam. This is conducted via a video conference between Thoraippakkam camp and Kumbakonam matam. On each side, more than 300 devotees participated in the event.
In this event, PeriyavaaL released the book written by Veezhi mama. The book is a detailed Sanskrit Bhaashyam for Narayaneeyam. (Please note that I do not have any other details about this book).
I encourage all of you to checkout the site and also share this with your friends and families.
Click here to visit the site – https://www.kanchimatamkudanthai.org
கோவில்கள் என்றாலே நினைவுக்கு வரும் இடங்கள், காஞ்சியும் கும்பகோணமும். இரண்டு நகரங்களுமே சைவ வைஷ்ணவ சமரசம் மிக்க, பாடல்பெற்ற ஸ்தலங்கள். முற்காலத்தில் படையெடுப்புகள் மிகுந்தபோது, ஆசாரியர்கள், கும்பகோணத்தில் தங்கி வேத பரிபாலனம் செய்த பாக்கியம் பெற்ற ஸ்தலம் கும்பகோணம். இது குடந்தை, குடமூக்கு என்று பக்தி இலக்கியங்களில் பெயர்பெற்ற இடம். கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளோர், அங்கிருந்து இடம்பெயர்ந்தோர் அனைவரும், ஊருக்கு வரும்போது, சங்கரமடத்துக்கும் வந்து ஆசார்யர்களின் அதிஷ்டானங்களைத் தரிசனம் செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சிதரும் விஷயம்.
அவ்வாறு பல ஊர்களிலும் உள்ளவர்கள், பிற மாநிலத்தவர்கள் எல்லோருக்கும், நமது கும்பகோணம் மடத்து நிகழ்ச்சிகள் அனைத்தும் உடனே சென்று சேர வேண்டும், அங்கு நடைபெறும் புண்ணிய நிகழ்ச்சிகளில் அவர்களும் பங்கேற்று ஆசிபெறவேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு இணையதளம் (வெப்சைட்) உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மடத்து வரலாறு, அண்மையில் நடக்க இருக்கும் புண்ணிய நிகழ்ச்சிகள் எல்லாம் அனைவருக்கும் தெரியவரும். புகைப்படங்கள், விடியோக்கள், ஒலிப்பதிவுகள் எல்லாம் இதில் இடம்பெறும். சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் தர்மசம்பந்தமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
இவற்றைத்தெரிந்து கொள்வதன்மூலம், மக்களுக்கு சொந்தஊரின் மேலும், கும்பகோணம் சங்கரமடத்தின்மேலும் உள்ள பக்தியும் நம்பிக்கையும் பெருகும், நம்பினோர் கெடுவதில்லை, இது நான்கு மறைத்தீர்ப்பு. நல்ல தர்மசிந்தனையை மேம்படுத்தும் அனைத்து விஷயங்களும் இந்த தளத்தின் மூலம் அனைவரையும் சென்றடைய, ஸ்ரீபெரியவாளின் அனுக்ரஹத்தை வேண்டுகிறோம்.
ஜயஜய சங்கர ஹரஹர சங்கர.
Categories: Announcements
Leave a Reply