கோமாதா தரும் பாலையே எடுத்துக் கொள்வோம்.
லௌகிகமாகத் தெரிவது, அத்தனை ஆஹார தினுஸுகளுக்குள்ளும் பசும்பால் ஒன்றுதான் ஒரு மநுஷ்யன் ஜீவிப்பதற்குத் தேவையான ஸகல ஊட்ட ஸத்தும் கொடுத்து complete food -– பூர்ண ஆஹாரம் -– என்று சொல்லும்படியாக இருக்கிறது. ஸாதாரணமாக, இப்படிப்பட்ட புஷ்டி ஊட்டுகிற வஸ்து என்றால் அது ஜீர்ணிப்பதற்கு ஸுலபமாக இருக்காது. ஆனால் பாலோ பச்சைக் குழந்தையும் ஸரி, பல்லு போன கிழவரும் ஸரி எளிதில் ஜீர்ணித்துக் கொள்ள கூடியதாக இருக்கிறது. மிகவும் பலஹீனமான நோயாளிக்கும் உரிய ஆஹாரமாக அது இருக்கிறது.
அலௌகிகமான வைதிகப் பார்வையில் பார்த்தாலோ அந்தப் பாலுக்கே ஸத்வ குணத்தை அபிவிருத்தி செய்கிற தன்மை இருக்கிறது. அலௌகிகம் தான் என்றாலும் இதை வெறும் நம்பிக்கையின் மேல் மட்டும்தான் ஏற்கவேண்டுமென்றில்லாமல், வெறும் க்ஷீர பானம் மாத்திரமே ஆஹாரம் என்று வைத்துக் கொண்டிருக்கும் ஸாதுக்கள் எவ்வளவு ஸாத்வீகமாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது வைதிகமான அலௌகிகத்துக்கே லோகத்தில் ப்ரதயக்ஷ நிரூபணமும் பெற முடிகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Let us take the milk offered by the cow itself as an example. What is apparent in worldly terms is that cow’s milk is the only food among all other foods that has all the essential nutrients necessary for a man to survive, thereby enabling us to call it a “complete food”. Normally if it’s a nourishing food which gives strength, it would not be easy to digest and assimilate. Whereas milk is easily digestible both for a new-born baby as well as a tooth-less old man. It happens to the apt diet for even a patient who is weak by his sickness.
If it is viewed from spiritual terms, that is Aloukeekam, the milk has in itself, the quality of improving a person’s virtuous character (Sathvik Guna). Though this is only Aloukeekam (invisible and divine), it need not be accepted on the basis of mere faith, but a visible proof can be obtained for this Vaidheekam itself from the Sathvik nature (soft and virtuous) of Sadhus (Hermits) who have the strict habit of taking milk alone as their sole food. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply