Jaya Jaya Sankara Hara Hara Sankara – Though one attains Gnana why does he still do Bhakthi? Sri Periyava explains.
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another solid drawing and audio . Rama Rama
ஞானியும் பக்தியும்
கர்மா, பக்திகளில் பக்வப்பட்டு நிவ்ருத்தி மார்க்கத்தில் ப்ரவேசித்த பிறகு ஆத்ம ஞானம் ஸித்திக்கும்வரை லோகத்தை – அதாவது த்வைத லீலையை – மாயை என்று அப்படியே தள்ள வேண்டியதுதான். இந்த லோகத்தை நடத்தும் ஈச்வரனை உபாஸிப்பதற்கும் அப்போது இடமில்லை. ஆனால் ஞானம் வந்த பிறகு மாயை ஒருத்தரை மயக்கி ஸம்ஸாரத்தில் தள்ள முடியாது. அதனால் தைர்யமாக மாயாலோக விளையாட்டுப் பார்க்கலாம். அந்த விளையாட்டைப் பண்ணும் ஈச்வரனையும் பலவிதமாக பக்தி பண்ணி அநுபவித்து மகிழலாம். ஆத்மா என்று ஞானி அநுபவிப்பதும் ஈச்வரனுடைய நிர்குண ஸ்வரூபம்தான். அதோடுகூட அவனுடைய ஸகுண லீலையையும் ஞானி அநுபவித்து ஆனந்தப்பட்டு அவனை ஸ்துதிக்கவும் முடியும். இது ஞானியுடைய ஸொந்த விஷயம். அதோடு, ஞானி மாயாலோகத்தைப் பார்க்க ஆரம்பித்த பிறகு அதிலுள்ள ஜனங்களிடம் தன்னியல்பாக அவனுக்கு ஒரு கருணை பிறக்கும். அப்போது அவர்களை நல்ல வழியில் அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்பதற்காகவும் பக்தியிலேயே ஈடுபடக்கூடியவர்களான அவர்களை உத்தேசித்து அவனும் பக்தனாக நடந்து கொண்டு பக்தி ஸ்துதிகள், பூஜா க்ரமங்கள் ஆகியவை செய்வதும் உண்டு.
ஞான ஸ்வரூபியான சுகர்தான் பாகவத உபதேசம் பண்ணியவர். அத்வைத ஸ்தாபனாச்சார்யார் எனப்படும் ஆசார்யாளோ ஸ்தோத்ரம் பண்ணாத தெய்வமே இல்லை! ஷண்மத ஸ்தாபனமே வேறே பண்ணியிருக்கிறார்! கௌடபாதாளைப் பற்றியும் அந்த மாதிரி சொல்வதில் நடக்கக் கூடாததாக எதுவுமில்லை.
மேற்கு ஸமுத்ரக்கரையில் கொங்கண தேசத்தில் கோவாவிலுள்ள ஷிரோதா என்ற இடத்தில் ‘கௌடபாதாசார்ய மடம்’ என்றே ஒன்று இருக்கிறது. கௌட ஸாரஸ்வதர்கள் என்பவர்கள் அதை ஆச்ரயித்தவர்கள். இதிலே தேசிய ஒற்றுமை! எப்படியென்றால், கொங்கணம் இருப்பது பஞ்ச த்ராவிடத்தைச் சேர்ந்த கர்நாடக பார்டர், கௌடர், ஸாரஸ்வதர் என்பவர்கள் பஞ்ச கௌடர்களைச் சேர்ந்தவர்கள்! நம் குரு பரம்பரையில் ஆசார்யாள் த்ராவிடர்; கோவிந்தபகவத்பாதர் காஷ்மீரியானால் ஸாரஸ்வதர்; கௌடபாதர் கௌடரே!
______________________________________________________________________________________________________________________________
Jnani and Bhakti
After advancing in Karma and Bhakti pathways and entering the Nivrutti mode [निवृत्ति], one has to endure with the world – the dualistic pastime – as Maya, till such time realization of inner self [Atma – आत्मा] takes place. At that time, there is no space to even worship Eswara, who is administering this world. However, once the realization comes, Maya cannot influence a person and push him into mundane worldly existence [संसार]. Therefore, the pastime of Mayaloka can be witnessed with confidence. One can worship Eswara, who is indulging in that pastime, in different ways and rejoice in that experience. The Atma experienced by the Jnani, is also the form of Eswara which is beyond qualities. [निर्गुणस्वरूपम्]. In addition, the Jnani can experience and rejoice in His virtuous pastimes and also indulge in eulogizing Him. This is, of course, a Jnani’s personal matter. Further, while observing the illusory world, the Jnani will spontaneously feel empathy for the people living in that world. Subsequently, with a view to guiding them on the right path as also in the interest of the people who are always engaged in Bhakti, he will also conduct himself to be a devotee and indulge in devotional singing, performance of puja, etc.
It is Suka, the personification of Jnana, who elucidated the Bhagavatam. Whereas, in the case of Acharya who is known as the founder of Advaita [अद्वैतम्], there is no deity who has not been worshipped by him! He has even established the six modes of worship! There is nothing that prevents [us] from saying similar things about Gowdapada also.
On the western shores [of our country], in the Konkan region, in a place called Shiroda in Goa, there is a Mutt by the name ‘Gowdapadacharya Mutt’ (गौडपादाचार्य मठ). The people who supported and maintained it were the ‘Gowda Saaraswat(s)’ (गौड सारस्वत). There is national integration in this! How? Konkan is located on the border of Karnataka, which is part of the Pancha Dravida; Gowdas and Saaraswats belong to Pancha Gowdas; In our Guru Parampara, Acharya is a Dravidian; Govinda Bhagawatpada – if a Kashmiri – is a Saaraswat; Gowdapada is a Gowda!
_________________________________________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
What an beautiful drawing of our ummatchi thatha..
Beautiful sowmya. Periyava blessings always with you 🙏🙏🙏