Invitation to 126th Jayanthi Mahotsvam at Kumbakonam Matam

Thank you Sri Suresh for the share. It is great to see that this happening in Kumbakonam…..All are invited to attend and support this event. Please contact the numbers given in the invitation for more details..
பெரியவா சரணம்.

எல்லோருக்கும் நமஸ்காரங்கள்.

சென்ற வருடம் மே மாதம் 28,29 தேதிகள் நம் வாழ்விலே மறக்கமுடியாத பொன்னான பொழுதுகள் எனலாம்.

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாத பரம்பராகத ஸ்ரீகாஞ்சீ காமகோடி மூலாம்னாய ஸர்வக்ஞ பீடாசார்யர்கள் அனுக்ரஹத்துடனாக,  ஸ்ரீமஹாபெரியவாளின் விஸ்வரூப விக்ரஹம் உருவாக்கப்பட்டு, கும்பகோணத்தின் மஹாராஜாவான ஸ்ரீமங்களாம்பிகை ஸமேத ஸ்ரீஆதிகும்பேஸ்வர ஸ்வாமிகளின் முன்னிலையிலே, நம் ஸ்ரீகாஞ்சி காமகோடிபீடத்தின் 62, 63, & 64-வது ஆசார்ய ச்ரேஷ்டர்களின் அதிஷ்டான சன்னதியிலே, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மஹா அனுஷ வைபவம் சிறப்புர நடைபெற்றதை எல்லோரும் அறிவீர்கள்.

இவ்வருடம் ஸ்ரீமஹாபெரியவாளின் 126-வது ஜயந்தி மஹோத்ஸவ புண்ணியப் பொழுதிலே, கும்பகோணம், ஸ்ரீசந்திரசேகர பவனத்தில் மே மாதம் 18, 19 தேதிகளில் மஹா அனுஷ வைபவம் நடத்தப்படுவதாக ஸ்ரீஆசார்யர்களின் அனுக்ரம் பெற்று, தங்கள் அனைவரையும் மேற்படி மஹோத்ஸவத்திலே கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

இத்துடன் கும்பகோணத்தில், ஸ்ரீசந்திரசேகர பவனத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீமஹா அனுஷ பத்திரிக்கை பகிர்ந்துள்ளோம்.

எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ள வேணுமாயும், தங்களால் இயன்ற திரவிய, பொருள் உதவிகளை வழங்குமாறும் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

நம் உம்மாச்சீ தாத்தா பீடாதிபத்யம் ஏற்ற திருத்தலமான கும்பகோணத்தில் மஹா அனுஷ வைபவம் நடக்கிறபடியால், தவறாமல் இச்செய்தியை தங்கள் நண்பர்களிக்கும் உறவினர்களுக்கிமாக பகிருமாறும் தாழ்மையோடு வேண்டுகிறோம்.

குரு க்ருபையில் எல்லோரும் நலமோடும் வளமோடும் வாழ ப்ரார்த்திக்கின்றோம்.

ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.


Categories: Announcements

Tags:

3 replies

  1. this is not at kumbakonam matam.,., Kindly check it.,.,

Trackbacks

  1. Invitation to 126th Jayanthi Mahotsvam at Kumbakonam Matam – Site Title

Leave a Reply

%d bloggers like this: