ரூபாய் என்று ஒன்று இல்லாத நாள் உண்டா என்று தோன்றலாம். அப்படி ஒரு நாள் இருந்திருக்கிறது. ஆதியில் எல்லா இடத்திலும் barter என்று ஒரு பொருளுக்குப் பதில் இன்னொரு பொருளை ‘எக்ஸ்சேஞ்ஜ்’ (பரிவர்த்தனை) பண்ணிக் கொள்வதுதான் இருந்ததே தவிர ரூபாயோ ஸ்டெர்லிங்கோ டாலரோ இல்லை. அப்புறந்தான் ஒவ்வொரு சீமையிலும் ஸமுதாயங்கள் ஒரு அமைப்பாகக் கெட்டிப்பட்டு, அங்கங்கே ராஜாங்கம் தோன்றி ஒரு ஆட்சி முறையின் கீழே வந்த பிற்பாடு நாணயம், கரென்ஸி என்பது தோன்றிற்று. எந்தப் பொருளானாலும் இதைக் கொண்டு மதிப்பை நிர்ணயம் பண்ணுவது ஸுலபமாயிருந்தது. கையடக்கமாக எடுத்துப் போகும்படியாகவும், வைத்துக் காக்கும்படியாகவும் இப்படி ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
You may wonder whether there was a time at all, when the concept of currency did not exist. But such times did exist. In the olden days all commodities were exchanged through the system of barter, and the currencies like Rupee, Dollar, and Sterling did not exist. But the system of currency and coin came into existence, when in every country, the societies were integrated and a government was formed. After the invention of currency it was easier to fix the value for each commodity and it was also compact to carry anywhere. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply