Tradition in welcoming Kanchi Acharyas at Tirupathi

Thanks to Sri Ganapathysubramanian for FB share. Tirupathi is one of several temples who has a very very long history of welcoming Kanchi Acharyas in a most respected way. Other temples are Akilandeswari Temple, Tiruvanaikka, Rameswaram Temple. Here are some photos from Tirupathi…

திருமலை திருப்பதியில்.. பூஜ்யஸ்ரீ காமகோடி ஆசார்யாளுக்குரிய சிறப்புரிமைகளில் சில..

.. இவ்விதமே திருமலை திருப்பதியில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் சிறப்புரிமைகள் உண்டு. திருப்பதியில் பட்டண ப்ரவேசம் கர்னாடக பல்லக்கிலும்.. திருமலை ஏற்றம் மேனா பல்லக்கிலும் நடப்பது வழக்கம்.
பூஜ்யஸ்ரீ ஆசார்யாளுக்கு பெருமாள் சன்னதியிலிருந்து ஸ்ரீசடாரி..ப்ரஸாதம் மரியாதைகள் பல்லக்கில் கொண்டுவரப்பட்டு முதலில் திருமலை நுழைவு வாயில் டோலி மண்டபம்.. அடுத்தது பேடி ஆஞ்சனேயர்.. பிறகு வெங்கலக் கொடிமரம் அருகில்.. அடுத்து திருக்கோயில் நுழைவு வாயில் என ஒவ்வொரு இடமாக இஸ்திக்பல் மரியாதைகள் செய்யப்படும்..
சன்னதிக்கு வரும்போது முதலில் உள் ப்ரகாரம் அடைந்து இரண்டு ப்ரதக்ஷிணம்.. அடுத்து ஸ்ரீயவாள் பெருமாள் கர்பக்ருஹத்தினுள் ப்ரவேசம்.. அங்கு மாஃபி ஹாரதி.. திருஆலவட்டம் சமர்ப்பித்தல்..ஆனபிறகு அடுத்தடுத்து தோமால சேவை உள்பட மூன்று முறை ஸ்ரீமடத்தின் யாவத்துபரிஜனங்களுடன் ஸ்ரீயவாள் மட்டும் கர்ப்பக்ருஹத்தினுள்ளிருக்க ஸ்வாமி தரிசனம்.. இரவு ஸ்ரீமடத்து முக்யஸ்தர்களுக்கு மட்டும் விசேஷமாக ஏகாந்தசேவை..
மறுநாள் பகல் இருபத்தைந்து நாழிகையானதும்..
மீண்டும் முன்போலவே ஸ்ரீயவாள் பெருமாள் கர்ப்பக்ருஹத்தினுள் சென்று பலவித சேவைகளும் ஆனபிறகு பெரிய ஜீயர்.. பார்பத்யகாரர்..பேஷ்கார் உள்ளிட்டோர் யாவரும் உடனிருக்கும் போது ஸ்ரீயவாளுக்கு தேவஸ்தான மரியாதைகள் செய்யப்படுவதான பலவற்றையும் தேவஸ்தான மாமூல்நாமா பட்டியில் காணலாம்..

 

 

 

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading