Periyava Golden Quotes-1041

நீ ஜீவிப்பதற்கு எது அத்யாவச்யமோ அதற்கு அதிகமாக ஒரு துரும்புகூடச் சேர்த்துக் கொள்ளாதே’ என்பதுதான் அபரிக்ரஹ தர்மம். இதை யோக சாஸ்திரத்தில் ஸாதகன் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய ஐந்து ‘யம’ங்களிலேயே ஒன்றாகப் பதஞ்ஜலி (யோக ஸூத்ரத்தில்) சொல்லியிருக்கிறார். ‘யமம்’ என்றால் அடங்கி வைப்பது. மஹா பாபிகளையும் அடக்கி வைத்துத் தண்டிப்பதால் யமனுக்கு அப்படிப் பெயர். மனஸை அடக்குகிறதற்குப் பதஞ்ஜலி யோக ஸூத்ரம் எழுதினார். அதிலே ஐந்து யமங்களாக அஹிம்ஸை, ஸத்யம், அஸ்தேயம் (திருடாமை), பிரம்மசர்யம் ஆகியவற்றோடு அபரிக்ரஹத்தையும் சொல்லியிருக்கிறது. ‘அது வேணும், இது வேணும்’ என்று பொருளைச் சேர்த்துக் கொள்கிற ஆசை அடங்கணும் என்றே இதைச் சொல்லியிருக்கிறார். இந்த ஆசை அடங்கினால், பணத்தாசை, அதற்காக எந்த தேசத்துக்கு வேண்டுமானாலும் போய் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பறப்பு, எந்தப் பொய் புரளி வேண்டுமானாலும் பண்ணிப் பணம் பண்ணலாம் என்ற அரிப்பு எல்லாமே போய்விடும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

The main canon of ‘Aparigraham’ is ‘Do not accumulate anything more than what is absolutely required for your survival’. In the Yoga Shastra of Sage Patanjali, this is mentioned as one of the five basic rules called as ‘Yama’ meaning ‘to control’. The God of Death is also called as ‘Yama’ as He controls and punishes the wicked. Sage Patanjali composed the ‘Yoga-Sutras’ to control the mind. In that He has laid down five ‘Yamas’. Along with Ahimsa’ (non-violence), ‘Sathya’ (Truth), ‘Astheyam’ (non-stealing), Brahmacharya (Celibacy) He has included ‘Aparigraha’ (non-Possessiveness), so that we control our desire to collect more and more things.  Once this desire of possession is controlled, the craving to earn money, will also decline. It is a fact that for earning this money we are prepared to go to any corner of the world and do whatever job is given. Also we are prepared to utter any number of lies or falsehood for earning money.  All these (vices) will vanish by practicing ‘Aparigraha’.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

7 replies

 1. Every individual has to, at one point of time in their lives, have to give up material wealth and comforts. In the four stages of life only Grahastha needs wealth to take care of the people in the other 3 stages. Purushartha is about finding salvation for oneself. It becomes difficult to give up if one were to acquaire more, just like loosing weight once you put on too much. Aparigraha is Minimalism which is becoming popular even among the West. There is no restriction on acquiring knowledge or character. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

 2. Sir, thanks for the detailed explanation to my doubts on seeking wealth in today’s competitive world. But if we follow the principles and edicts as propounded by Maha Periyava, then Brahmins will become extinct from the world. Already, we see most Brahmin families are encouraging inter-caste marriages, so our unique class (or caste) will be ‘dead as a dodo’ if we are not going to compete and seek our right pedestal in the world through genuine pursuit of wealth and power, like the Jews of Israel. Otherwise, we will become extinct soon. To cite one example: I am from Mayavaram. And most of our neighbours and relatives from that sacred town had sold their ancestral properties and had already settled abroad or living in other States of India. Now Mayavaram has very little Brahmins and mostly dominated by Vanniyars, Muslims and OBCs. This is for your information.

  • Sir,

   I’m from Sirkazhi too, can understand what you are talking about but don’t agree with what you had said. So you are saying if we are not in pursuit of wealth we will become extinct soon. To sum up, you are saying what Maha Periyava said is not correct and cannot be followed in today’s world. There is a difference between we not able to follow our Guru’s upadesams due to our materialistic pursuits (I follow in that category too) and categorically dismissing our Guru’s upadesams as impractical.

   I know quite a few Brahmins who live in and around my home town practicing their swadharma and leading a very peaceful life as Periyava said. They are only a handful of those but they do exist in this world and they are peaceful. Of course they are the ones who will be close to the heart of Maha Periyava and will definitely attaain Moksha which is the purpose of our human lives. Rama Rama

   • //we see most Brahmin families are encouraging inter-caste marriages, so our unique class (or caste) will be ‘dead as a dodo’ if we are not going to compete and seek our right pedestal in the world through genuine pursuit of wealth and power//

    The very fact that Brahmins are encouraging inter-caste or inter-religion marriages is that they have abandoned swadharma in pursuit of wealth and power. Brahmins will be extinct in this world soon only if they go in this path as you suggested which we already see happening in the dwindling numbers.

    Also, what makes you think that doing ones swdharma does not bring wealth and glory.? I’m sure you know this much better. Today’s Vaideeka’s earn way more than what even top IT pros earn and they also command a lot of respect.

    It also looks like you did not go through the chapter link I sent. Maha Periyava has answered your question directly. Here is the key quote below.

    “இப்போது என்ன பரிகாரம் (remedy)? பிராமணர்கள் எல்லோரும் இப்போதிருக்கிற வாழ்க்கை முறைகளை விட்டு, அத்யயனத்துக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?” என்று என்னைக் கேட்டால், அப்படி நான் எதிர்பார்க்கிறேனோ இல்லையோ, அது காரிய சாத்தியமாக உங்களுக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, அவர்கள் இப்படித்தான் செய்தாக வேண்டும் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நம் மூலதர்மமே பறிபோய்விட்டது என்று வாயை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதற்கு குரு பீடம், ஆசாரிய ஸ்தானம் எதுவும் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. முடியாததாகத் தோன்றினாலும்கூட, அப்படிப்பட்ட நல்ல லக்ஷியங்களையும் முடித்துக் காட்ட வேண்டும் என்று சொல்வதற்குத்தான் மதங்கள், மடங்கள் இருக்கின்றன. இந்த லக்ஷியத்துக்குத்தான் அவை தங்கள் பூரண சக்தியையும் செலவழித்துப் பாடுபட வேண்டும். “சத்தியாக்கிரஹத்தால் வெள்ளைக்காரனைப் போகப் பண்ணுவதாவது, இதெல்லாம் நடக்காத காரியம்” என்று சொன்னவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். நடக்க முடியாது என்று நினைத்த எத்தனையோ இந்த உலகத்தில் நடந்துதான் இருக்கிறது. இது நடக்க முடியாத விஷயம் என்று நினைத்து, தர்மத்தையும் சத்தியத்தையும் விட்டுக் கொடுத்துப் பேசுவது எனக்கான காரியமில்லை. நடத்துவதும் நடத்தாததும் உங்கள் கையில் இருக்கிற விஷயம். நான் செய்யக்கூடியது எல்லாம் நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறவைகளை அலுக்காமல் சலிக்காமல் உங்கள் காதில் போடுவதுதான்; சாஸ்திரங்கள் எவற்றை உங்கள் கடமை என்று விதித்திருக்கின்றனவோ அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, எத்தனை பிரதிகூலங்கள் இருந்தாலும் நீங்கள் அதன்படிதான் நடக்கவேண்டும் என்று வலியுறுத்துவதுதான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

    There is another chapter called ‘Bare minimum remedy’ where Sri Periyava provides us alternate options if one cannot do Veda Rakshanam full-time. Pl. see how much he has come down for us. Link below. Rama Rama

    https://mahaperiyavaa.blog/2017/05/04/77-gems-from-deivathin-kural-vedic-religion-bare-minimum-remedy/

 3. Jaya Jaya Sankara Hara Hara Sankara,
  Janakiraman. Nagapattinam

 4. Sir, I am a bit confused by the statement of Maha Periyava. Is accumulating wealth a sin? Most Brahmins don’t get the jobs they deserve in this country. Hence, they are forced to go to countries like the US, Australia, England and Germany where they respect meritocracy. Does it mean those who go abroad to make a living are sinners? In today’s context, we worship wealth as Goddess Lakshmi. The more we have, the more we can do charity and help others who need support in the form of scholarships, donations and other aids. We learn in schools and colleges so that we land in a good paying job and we repay our debts to our parents and society, is it not?

  • Sir,

   If you are following all the quotes and the Deivathin Kural chapters closely you would not have any confusions. The fundamental premise that you have taken that Brahmins should work itself is incorrect according to Sri Periyava. I will tell you the essence in one line. Brahmins are not even supposed to go for jobs forget even going abroad. They have to live in poverty and practice Swadharma which is Veda Rakshanam.

   There are many chapters where Sri Periyava talks in length on this subject. I will provide a few quotes below and a link to one key chapter so it gives you more clarify. However, as I mentioned there are many other chapters that one may need to read to get a firmer understanding. Rama Rama

   //பிராமணனின் தேகம் இந்திரிய சுகத்துக்காக ஏற்பட்டிருக்கிறதே அல்ல. அது லோக க்ஷேமார்த்தமாக வேதத்தை ரக்ஷிப்பதற்கு என்ன நியமங்களை அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டுமோ அவற்றைச் செய்யவே ஏற்பட்டது. அதில் அதிகப்படியான எந்த போக்ய வஸ்துவும் சேர்க்கக் கூடாது என்பதுதான் அடிப்படை தர்மம்.//

   //கிராமத்தில் சாப்பிட வசதியே இல்லை என்றால், மெட்ராஸ் மாதிரி டவுன்களுக்கு வந்து, ஏதோ வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்தவுடன் இவன் திருப்திப்பட்டிருக்க வேண்டியதுதானே? அப்படி திருப்தி அடைந்திருந்தால் மேலே சொன்னது சரி. நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன? மெட்ராஸில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால்கூட, டில்லியில் இரண்டாயிரம் தருகிறான் என்றால் இவன் அங்கே ஓடுகிறான்! இங்கே ஏதோ கொஞ்சம் அனுஷ்டிக்க முடிந்த தர்மங்களையும் அங்கே போய் விட்டுவிடுகிறானே! அதற்கப்புறம் நியூயார்க்கில் 4000 டாலர் சம்பளம் கிடைக்கிறது என்றால், கண்டத்தைவிட்டு கண்டம் போய் கண்டபடி வாழ ஆரம்பித்துவிடுகிறானே—கொஞ்சம் மிஞ்சியிருந்த ஆசாரங்களைக்கூட உதறி தள்ளிவிடுகிறானே! ‘மிலிடிரியில் அதிகப் பணம் வருகிறதா? அதிலும் சேருகிறேன். அங்கே மதுபானம், மாம்ஸ போஜனம் எல்லாம் பழகவேண்டியிருந்தாலும் பரவாயில்லை’ என்று பணத்துக்காக எதையும் செய்வதைத்தானே பார்க்கிறோம். ஆகையால் பிராமணன் ஸ்வதர்மத்தை விட்டதற்குச் சொல்கிற சமாதானம் கொஞ்சங்கூட எடுபடவில்லை.//

   //அவசியத்துக்கு அதிகமான வஸ்துக்களில் இவனுக்குத் துராசை வந்துவிட்டது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.//

   //நம் தர்மத்தை விட்டு ஊர் சிரிக்கிற நிலையில் வயிறு வளர்ப்பதைவிட தர்மத்தைச் செய்து கொண்டு ஊர் சிரித்தாலும் சிரிக்கட்டும் என்றுதான் இருக்கலாமே! அல்லது சாகலாமே! ஒவ்வொருத்தன், “என் தேசம்” என்கிறான், “என் பாஷை” என்கிறான். அதற்காகச் சண்டை போட்டு உயிரை வேண்டுமானாலும் விடுகிறான். சுதந்திரப் போராட்டம் மாதிரி பெரிய விஷயங்கள்தான் என்றில்லை; ஏதோ ஒரு ஜில்லாவின் பகுதி இன்னொரு ஜில்லாவுக்கு போய் விடக்கூடாது என்பதற்காகப் பிராணனை விடுவதற்கு சித்தமாக தானே தன் மேல் மண்ணெண்ணையைக் கொட்டிக் கொண்டு தீக்குளிக்கிறவர்கள் இருக்கிறார்கள். கொள்கைக்காக இதை இவர்கள் செய்கிற மாதிரி இங்கிலீஷ்காரர்களின் புது மோஸ்தர் வாழ்க்கை வந்தபோது பிராமணர்கள் பிராணனும் துச்சம் என்று பரமத் தியாகமாகத் தங்கள் தர்மத்தை ஏன் ரக்ஷித்திருக்கக்கூடாது? பிறத்தியானுடைய தர்மத்தை எடுத்துக் கொண்டு, அதனால் பெரிய வசதி, கிசதி பெறுவதைவிட, தன் தர்மத்திலேயே இருந்து கொண்டு சாகிறது மேல் (நிதனம்ச்ரேய: – சாவே சிலாக்கியம்) என்றுதான் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். பிறத்தியானுடைய தர்மத்தை எடுத்துக் கொண்டு, அதனால் பெரிய வசதி, கிசதி பெறுவதைவிட, தன் தர்மத்திலேயே இருந்து கொண்டு சாகிறது மேல் (நிதனம்ச்ரேய: – சாவே சிலாக்கியம்) என்றுதான் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார்.//

   //செத்தாலும் ஸ்வதர்மத்தை விடக்கூடாது. இப்போது மட்டும் சாகாமல் இருக்கப் போகிறோமோ என்ன? பணத்தை நிறையச் சேர்த்துக் கொண்டு, ஆனால் அதைவிட நிறைய அவமானத்தைச் சேர்த்துக் கொண்டு, மற்றவர்களின் அசூயைக்குக் காரணமாக இருந்துகொண்டு, நமக்கான தர்மத்தை விட்டுவிட்ட பிரஷ்டர்களாகச் சாகப்போகிறோம்.//

   https://mahaperiyavaa.blog/2017/05/03/76-gems-from-deivathin-kural-vedic-religion-who-is-responsible-what-is-the-remedy-full-chapter/

Leave a Reply

%d bloggers like this: