Periyava Golden Quotes-1037


வரவு-செலவு என்பது பணம் ஒன்றில் மட்டுமில்லை. எல்லாவற்றிலும் உண்டு. நாம் வார்த்தையை அதிகம் விட்டால் எதிராளியிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறோமே இதுகூட வரவு-செலவுதான். நாம் வாயால் விட்டது செலவு; வாங்கி கட்டிக் கொண்டது வரவு! நாம் அனவரதமும், தூங்கும்போதுகூடப் பண்ணுகிற காரியம் என்ன? மூச்சுவிடுவது. அதுகூட வரவு செலவுதான்! காற்றை உள்ளே வாங்கிக் கொண்டு வெளியே விடுவது வரவும் செலவுந்தான்! அதில் கூடக் கணக்கு வேண்டுமென்றுதான் ப்ராணாயாமம், மந்த்ர ஜபம், ஸோஹம் த்யானமென்று பல யோகங்களை வைத்திருப்பது. புசுக் புசுக்கென்று வேகமாக ச்வாஸித்தால் ஆயுசும் குறையும்; ஆத்மா சுத்தப்பட்டு சாந்த நிலைக்கு வருவதற்கான நாடி சமனமும் ஏற்படாது. அதனால் மூச்சுக்கூடக் கணக்காக விடணும் என்று வைத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 21,600 ச்வாஸமே விடணும் என்று கணக்கு. அதாவது ஒரு ச்வாஸத்துக்கு நாலு ஸெகன்ட் ஆகவேண்டும். நாம் அவசரமாகக் காரியம் செய்யும் போதும், கோபதாபத்திலும் காமம் முதலான உணர்ச்சி வேகங்களிலும், புஸ் புஸ்ஸென்று ஒரு ஸெகன்ட், இரண்டு ஸெகன்டிலேயே ஒரு ச்வாஸம் முடிந்துவிடும். அதற்காகத் தான், ஈடுகட்ட இன்னொரு எக்ஸ்ட்ரீமில் ரொம்ப நேரம் தீர்க்கமாக மூச்சையிழுத்து அடக்கி வைத்து, நிதானமாக விட்டுப் பிராணாயாமம் பண்ணச் சொல்லியிருப்பது. ஆக இந்த சரீரத்துக்கான ஆயுஸ், சரீரத்துக்குள்ளே இருக்கிற ஆத்மாவின் நிறைந்த ஸமநிலையான ஸமாதிநிலை இரண்டுமே மூச்சு ஒரு கணக்காயிருப்பதில்தான் அடங்கியிருக்கிறதென்று தெரிகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Income and expenditure does not relate to money matters alone, it is prevalent everywhere. When we un-necessarily provoke a person, he retorts back and this is also one type of Income and Expenditure. Our Verbal provocation is the expenditure and the retort from the other person is the income. Even while sleeping every day, what do we do? We breath-in which is an income and breath-out which is an expenditure. Since we need control over the breathing process, yoga practices like ‘Praanayama’, ‘Mediation of Soham’, etc. are prescribed. If our breathing is rapid, then it is said that our life span will decrease and our pulses will never be stable. Due to this we will never gain everlasting peace. That is why it is stipulated that our breathing should be in control. It is stipulated that we should breath 21,600 times a day, one breath per four seconds, But when we do any activity with urgency, anger or lust, then one breath will be over in just one or two seconds. To compensate this, in the other extreme, it has been prescribed to do Pranayama (Breath Control) wherein we inhale and exhale very slowly. So it is clear that our life-span and internal tranquillity depend only on the control of our breath. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: