Periyava Golden Quotes-1036

இப்போது இதெல்லாமே பேப்பரில் (வரவுக்குச் செலவு) ஸரிகட்டுவதாகக் காட்டிவிட்டால் போதுமென்று ஆகிவிட்டது; ஃபைனான்ஸ் மினிஸ்டரைப் பார்த்தால், அப்படி ஸரிகட்டாவிட்டால்கூடப் பரவாயில்லை; டெஃபிஸிட் ஃபைனான்ஸிங், (ரூபாய்) நோட்டுப் போட்டும், ஊரெல்லாம் உலகமெல்லாம் கடன் வாங்கியும் ஸரிக்கட்டினதாகக் காட்டினால் போதும் என்றாகி விட்டது’ என்று சொல்லிக் கொள்கிறார்கள். மொத்தத்தில் இப்போது நவீன முறை என்று சொல்லி, கணக்கில்லாமல் ஆசைகளையும் தேவைகளையும் பெருக்கி, அதற்காகச் செலவையும் பெருக்கி, மக்களையெல்லாம் கடனாளிகளாகவும், நிம்மதியில்லாதவர்களாகவும் செய்திருப்பதாகவே தெரிகிறது. தேவை, வரவு, செலவு எல்லாவற்றிலுமே இப்படியில்லாமல், நாம் அவற்றை ஒரு கணக்குக்குக் கீழே கொண்டு வரவேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Nowadays they say it is sufficient if the income and expenses are balanced in the books alone. Even if it is not balanced in the books, now it has become an accepted practice, to go for deficit financing, Printing of more Currency-Notes, obtaining loan from other countries, etc. Now claiming it to be the modern trend, they have increased the desires and wants of the people multi-fold. Because of this, the expenses have increased sharply, and people have resorted to borrowing more and more loans. Now it appears that this has made the people debt-ridden and they have, ultimately, lost their peace of mind. Unlike this scenario, we should have proper accounting and control for all our desires, income and expenses.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading