Periyava Golden Quotes-1035



கல்வியில் கணக்குக்கு எவ்வளவு முக்யத்வம் தந்திருக்கிறோம்? வாழ்க்கையிலும் தர வேண்டும். இப்போது ரூபாய்க் கணக்கு மட்டும்தான் முக்யமாயிருக்கிறது. எல்லா ஆபிஸிலும் அக்கவுன்ட்ஸ் ஸெக்ஷன், அது தவிர அக்கவுன்டன்ட்- ஜெனரல் ஆபீஸ்கள் என்றே நிறைய இருக்கின்றன. பழைய காலத்திலிருந்து இப்படி ராஜாங்க ரீதியாக வரவு செல்வுகளைக் கணக்குப் பார்க்கும் ஏற்பாடு இருந்து வந்திருக்கிறது. ‘பெருங் கணக்கு’ என்று பழைய நாளில் ஒரு உத்யோகஸ்தர் – அவர்தான் இந்நாளில் அக்கவுன்டன்ட்-ஜெனரல் என்கிறவர். இது உச்சத்திலுள்ள உத்யோகம். அடிநிலையில் இருந்தது, ‘பெருங் கணக்கு’ என்ற மாதிரி ‘சிறுகணக்கு’ இல்லை; இந்ச் சின்ன உத்யோகத்துக்குத்தான் ‘கணக்குப் பிள்ளை’ என்று பெயர். ‘பிள்ளை’ என்பது இங்கே ‘சிறிய’, ‘சின்னது’ என்பதைக் குறிக்கும்; பிள்ளை ஜாதி இல்லை. தென்னம் பிள்ளை, அணிற் பிள்ளை என்றெல்லாம் சொல்கிறபோது ‘பிள்ளை’ என்பது சின்னதைத் தானே குறிக்கும்? அப்படியே கணக்குப் பிள்ளை என்கிறவர் ராஜாங்க வரவு-செலவு பார்ப்பவர்களில் சிறிய ஊழியர். ஆனால் அவருக்கு எல்லா நுணுக்கமும் தெரிந்திருக்கும். அதனால்தான் முன்னெல்லாம் ஜில்லா கலெக்டராக ட்ரெயினிங் பண்ணுகிறவன் கூடக் கணக்குப் பிள்ளையிடம்தான் வேலை கற்றுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டுமென்று வைத்திருந்தார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

How much of importance we have given to accounting (Maths), during our school days? The same amount of importance should be given to it even in our day-to-day life. But nowadays counting cash has become more important to us. In every office we have an Accounts Section and there is also separate Office for the ‘Accountant-General’. The procedure of auditing the income and expenses of the Government, has been in vogue since olden days.  The present day Accountant General, was called as ‘Perum-Kanakkar’ (The Big Accountant) in those days. This post was a very senior profession in Government-Service. At the lower rung there was a cadre called as ‘Kanakku-Pillai’ (Junior Accountant).  Here ‘Pillai’ refers to ‘Small’ and not to any caste. When we say ‘Thennam-Pillai’ (A Young Coconut Tree) or ‘Anil-Pillai’ (Baby Squirrel), the word ‘Pillai’ refers to infant. In the same way ‘Kanakku-Pillai’ is a junior accountant who looks after the income and expenses of the government, but he will know all the intricacies of the accounting practice. That is why in those days, it was stipulated that, even the District Collectors, during their training period, must learn the job from the ‘Kanakku-Pillai’.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: