78. Sri Sankara Charitham by Maha Periyava – Brahmarakshas; Raakshasa Species


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Who are Rakshaas, Brahma Rakshas and what category do they belong to? Very interesting piece of information by Sri Periyava.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for the creative drawing and audio. Rama Rama


பிரம்மரக்ஷஸ்; ராக்ஷஸ ஜாதி

ப்ரம்ம ராக்ஷஸம் என்கிறோமே, அதுதான் ப்ரம்மரக்ஷஸ். அது பிசாசைப் போன்ற ஒருவிதப் பிறவி. தேவதைகளில் அநேக விதம் இருப்பதுபோலப் பிசாசுகளிலும் உண்டு. மநுஷர்கள், பக்ஷிகள், ம்ருகங்கள் எல்லாவற்றிலும்தானே விதம்விதமாகப் பார்க்கிறோம்?

வேடிக்கை என்னவென்றால் ராக்ஷஸ ஜாதியிலேயே பலவிதம் இருந்தாலும் அந்த ராக்ஷஸ ஜாதி என்பதே பலவிதமான தேவ ஜாதிகளில் ஒன்றுதான்! தேவர்கள் என்று பொதுவாக நாம் சொல்பவர்களோடு ராக்ஷஸர்கள் சண்டை போட்டதாகவே புராணங்களில் பார்ப்பதால் அவர்கள் வேறே ஜாதி, இவர்கள் வேறே ஜாதி என்று தோன்றினாலும், வாஸ்தவத்தில் ராக்ஷஸர்களும் தேவ ஜாதிகள் பலவற்றுக்குள்ளேயே தாழ்ந்து தாழ்ந்துபோய் க்ரூரமாக இருக்கும் ஒரு பிரிவுதான்! அஸுரர்கள் என்பவர்தான் தேவ ஜாதிக்கு முற்றிலும் வேறானவர்கள். ஸுரர் என்ற தேவருக்கு நேரெதிர் அஸுரர்தான். பேச்சு வழக்கிலுங்கூட ‘தேவாஸுர’ என்கிறோமே தவிர ‘தேவராக்ஷஸ’ என்று சொல்வதில்லையல்லவா? ‘அமர’த்தில் ஆதித்தியர்களில் ஆரம்பித்து தேவ ஜாதிகளைச் சொல்லிக் கொண்டு போகும்போது “வித்யாதர-அப்ஸரோ-யக்ஷ-ரக்ஷோ-கந்தர்வ-கிந்நரா” என்று ராக்ஷஸர்களையும் உள்ளடக்கிச் சொல்லியிருக்கிறது. இவர்களெல்லாம் தேவ ஜாதிகள் “தேவ யோநய:” என்று முடித்துவிட்டு அப்புறம் அஸுர ஜாதிகளை “அஸுரா-தைத்ய-தைதேய-தநுஜ” என்று அடுக்கியிருக்கிறது.

இந்த ராக்ஷஸ ஜாதிக்குள் அப்புறம் பல பிரிவுகள், உபஜாதிகள் – மநுஷ்ய ஜாதியிலேயே நாலு ஜாதி, அப்புறம் அதில் ஒவ்வொரு ஜாதியிலும் ஸப்-ஸெக்டுகள் என்று இருக்கிறதுபோல. அப்படி ராக்ஷஸ ஜாதியைச் சேர்ந்த ஒன்றுதான் ப்ரம்ம ரக்ஷஸ். பிசாசு மாதிரியான ஆவி வகைகளைச் சேர்ந்தது அது. (ஆச்சர்யமாயிருக்கலாம்: பிசாசுகூட தேவ ஜாதியில் வருவதுதான்! “பிசாசோ குஹ்யக: ஸித்தோ பூதோ (அ)மீ தேவயோநய:” என்று ‘அமர’த்தில் முடித்திருக்கிறது.) வேதாத்யயனம் நன்றாகப் பண்ணியும், துன்மார்க்கத்தில் போய் மற்ற ப்ராம்மணர்களுடைய ஸொத்து, ஸ்த்ரீ முதலானவற்றை அபஹரித்து அல்பாயுசில் செத்துப் போனவர்கள் அந்த வேத ஞாபகத்தோடேயே பிசாசு மாதிரி இருப்பதுதான் ப்ரம்மரக்ஷஸ். அதற்கு ஆஹாரம் தினந்தோறும் வேதம் தெரிந்த ஒரு ப்ராம்மணனைச் சாப்பிடுவதுதான்! மாறுவேஷத்தில் போய் வேத அத்யயனம் செய்தவர்களிடம் நயமாகப் பேசி நீள இழுக்கடித்துக் கொண்டு தனியிடத்துக்குப் போய் வேத சாஸ்த்ர ஸம்பந்தமாகவே அநேகம் கேள்விகள் கேட்கும். அவர்கள் பதில் தெரியாமல் முழிக்கும்போது அடித்து பக்ஷித்துவிடும். ‘ப்ரம்ம ராக்ஷஸம் அடிச்சுப் போட்டுடுத்து’ என்று க்ராமாந்தரங்களில் சொல்வதுண்டு.

_____________________________________________________________________________________________________________________________

Brahmarakshas; Raakshasa Species

What we call as Brahmaraakshas [ब्रह्मराक्षस्], is actually Brahmarakshas [ब्रह्मरक्षस्].  It is a type of being, like ghost.  Just as there are different types of Devtas, there are in ghosts too. Don’t we see different types in everything – humans, birds, animals, etc?

What is amusing is, while there are different types within the species of Raakshas, that Raakshas caste itself is one of the several higher species.  We see in Puranas that Raakshasas fought with, what we commonly refer as, Devas. Therefore it appears that they (Devas) are a different species and these (Raakshasas) are different. Actually, Rakshasas are only a much degraded and gruesome category of the several types of Devas!  It is only Asuras, who are totally different from Devas.  Asura is the direct opposite to the Deva, Sura.  Even colloquially, we only say, ‘Devasura’ and not ‘Devarakshasa’.  In ‘Amara’, while listing out the castes of Devas, beginning with Adityas, it is mentioned as “Vidyaadhara-Apsaro-Yaksha-Raksho-Gandharva-Kinnaraa” [विद्याधर–अप्सरो–यक्ष–रक्षो-गन्धर्व-किननरा], including Raakshasas. After ending with saying that these people belong to Deva caste, “Deva Yonaya:” [देव योनयः], later spells out further, Asura caste, as “Asuraa-Daitya-Daiteya-Danuja” [असुरा-दैत्य-दैतेय-दनुज].

Further, there are many divisions, sub-castes etc. within this Raakshasa caste- just as there are four castes in humans and within each one, there are several sub-sects.  Brahma Rakshas is only belonging to one such Raakshasa species.  It belongs to the spirit types like ghost. (It may be surprising: that ghosts too belong to Deva caste. It is concluded in Amara as, “Pishacho Guhyaka: Siddho Bhuto (A)mi Devayonaya:” [पिशाचो गुह्यकः सिद्धो भूतो (अ)मि देवयोनयः] ). Despite having studied the Vedas very well, people who had taken to undesirable ways, snatched the properties, wives, etc., of other Brahmins and died at a premature age and remained like a ghost with the memories of Vedas, are what are called as Brahmarakshas.  Its daily food is only eating a Brahmin who has knowledge of the Vedas!  It will go in disguise to people who have studied the Vedas, talk to them sweetly, drag them to a secluded place prolonging the conversation and ask several questions related only to the Veda Sastras.  When they blink not knowing the answers, it will pounce on them and eat them.  In villages, people say that Brahma Raakshas has felled so and so.

______________________________________________________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

3 replies

  1. Sri Mahaperiyavaa very frequently refers to “Amaram” — the Sanskrit-Tamil Dictionary. I would like to acquire its copy. Can anyone provide a link to its purchase? Please.Thank you.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: