Periyava Golden Quotes-1034


இப்போதைய நிலையில் ஸமயாநுஷ்டானங்களில் இரண்டு எக்ஸ்ட்ரீம்களிலும் போவதாலேயே இப்படிப்பட்ட அளவு, ‘கணக்காயிருக்கிற’ தன்மை உண்டாகிறது என்று சொன்னேன். ஆரம்ப நிலையில் நம்முடைய மதாநுஷ்டானம், ‘கணக்கு’ இரண்டுமே பக்வமாகாதவையாகத்தான் இருக்கும். ஆனால் நாளாவட்டத்தில் இவை ஒன்றுக்கொன்று போஷித்துக் கொண்டு, ஒன்றை மற்றது பக்வப்படுத்திக் கொண்டு போகும். அப்படிப் பக்வ ஸ்திதிக்குப் போகப் போக கணக்கறிந்து செய்வதே மனஸின் ஸமநிலை என்கிற உயர்ந்த பிரசாந்த ஸ்திதிக்கு கொண்டு விடும். பூர்ண பக்வநிலையிலோ தன்னியல்பாக நாம் செய்கிறதெல்லாமே அளவறிந்து, கணக்காக அமைந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

I told you that in the present circumstances, such extremities in religious practice, help us in achieving some measure and control. In the initial stages, both our ‘spiritual pursuit’ and ‘measured life’ will not be mature enough. But gradually each will mutually nurture each other and mature. As we go on maturing, we will understand that such ‘measured activity’ will lead us to the mental equipoise which is the Supreme Peaceful State. In that state, whatever we do will naturally be ‘measured and balanced’ and will be a guiding principle to others. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: