Periyava Golden Quotes-1029

அளவறிந்து, எதிலும் ஓவராகப் போகாமல், மிதமாக மத்யமாகப் போகிறதைத் தான் பகவான் கீதையில் உபதேசித்திருக்கிறார்:

நாத்யச்நதஸ்து யோகோ (அ)ஸ்தி ந சைகாந்த-மநச்நத: | ந சாதிஸ்வப்ந-சீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந || (6-16)

யுக்தாஹார-விஹாரஸ்ய யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு | யுக்த-ஸ்வப்நாவாபோதஸ்ய யோகோ பவதி து:கஹா || (6-17)

“பெருந்தீனி தின்கின்றவனுக்கும் யோகம் ஸித்திக்காது; ஒரே பட்டினி கிடக்கிறவனுக்கும் ஸித்திக்காது. எப்போது பார்த்தாலும் தூங்குகிறவனுக்கும் யோகம் வராது; தூக்கமேயில்லாதவனுக்கும் வராது. சாப்பாடு ஸஞ்சாரம், மற்ற காரியம் எல்லாவற்றிலுமே மிதமாக இருக்கிறவனுக்குத்தான் யோகம் ஸித்திக்கும்; ஸம்ஸார துக்கத்தைப் போக்கும்” என்கிறார். மிதமாக இருப்பதற்கு இங்கே பகவான் சொல்லும் வார்த்தை ‘யுக்தம்’ என்பதாகும். ‘எப்படி யுக்தமோ அப்படிப் பண்ணுங்கள்’ என்று நாம் கூடப் பேச்சில் சொல்கிறோம். ‘யுக்தம்’, ‘யோகம்’ என்ற இரண்டு வார்த்தையும் ‘யுஜ்’ என்னும் ஒரே தாதுவிலிருந்து வந்தவைதான். ‘யுஜ்’ என்றால் இணைப்பது. ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு இணைப்பது யோகம். அப்படி இணைக்க வழியாக உள்ள மிதமான போக்கே ‘யுக்தம்’. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Lord Krishna also speaks on this aspect of, following the balanced path of moderation without going to the extremes, in Srimad Bhagawad Geetha.

He says “NADHYASHNATHASTHU-YOGO-ASTHI-NA-CHAIKAANTHA-MANASHNATHAHA. NA-CHAATHI-SWAPNA-SEELASYA-JAAGRATHO-NAIVA-CHA-ARJUNA’ (06-16)”. ‘A person will not attain Yoga, if he either overeats or always fasts, either sleeps always or never sleeps’.

“YUKTHAAHAARA-VIHAARASYA-YUKTHA-CHESTHTASYA-KARMASU. YUKTHA-SWAPNAVAA-BODHASYA-YOGO-BHAVATHI-DUKHAHAA (06-17)”. ‘A person who is in moderation in eating, sleeping and all activities will attain Yoga, which will vanquish all the worldly sorrows’.

The Lord uses the word ‘Yuktham’ for ‘moderation’. The words ‘Yuktham’ and ‘Yogam’ derived from the same root-word ‘Yuj’ which means ‘to unite’. Yoga is that which unites the individual soul with the Supreme Soul. ‘Yuktham’ is that moderate path which helps in achieving this Unification.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: