ஸமயாநுஷ்டானங்களில் இப்போது நாம் இருக்கிற தசையில் நம் மதம் காட்டும் இரண்டு எக்ஸ்ட்ரீம்களில் பண்டிகைச் சாப்பாடு, பஜனைக் கூத்து, உருவ வழிபாடு இவற்றில் கிடைக்கிற ஆனந்தம் பட்டினியிலும், மௌனத்திலும், ஆத்ம த்யானத்திலும் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு பார்வையின் பேரிலும், ‘இது பெரியவர்கள் காட்டும் வழியாச்சே’ என்ற நம்பிக்கையின் பேரிலுந்தான் இப்போது நமக்குத் தெரியாதவையாக இருப்பவற்றுக்கான அநுஷ்டானத்தைப் பண்ண முடிகிறது. ஆனாலும் விடாமல் போனால் வாழ்க்கையில் மாடரேஷன் வரும்.
இப்படி மாடரேஷனில் நன்றாக் பழக்கப்பட்டு முதிர்ந்த நிலைமை, கனிந்த நிலைமை உண்டாகிறபோது, இப்போது எது நமக்குத் தெரியாததாக இருக்கிறதோ, இன்னொரு ‘எக்ஸ்ட்ரீம்’ஆகத் தோன்றுகிறதோ, எதை நாம் ஏதோ ஒரு பாவனையின் பேரில்தான் கொஞ்சம் ஊகித்துப் பார்க்க மாத்திரமே முடிகிறதோ, அது, அதாவது பரமாத்வோடு ஏகமாக ஒன்றியிருக்கிற நிலை, எக்ஸ்ட்ரீமாக இல்லாமல், ஸஹஜமான எக்ஸ்பீரியன்ஸாக ஆகிவிடும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
In our present religious state of mind, we are able to attain the same amount happiness through feasting, singing, and worship of God with form. But it is not the same while following the other extreme path of fasting, silent or meditation of the Formless Divine. We practice these stipulations to an extent, only because of our faith in the path shown by our forefathers. But if we follow these practices diligently we can achieve moderation in our life.
When we start practicing this ‘moderation’ diligently in our life, we will gradually ripen and attain maturity. Then the ‘unknown’ which we consider as the other extreme path; which we are able to grasp a little through imagination; that State of ‘Merging with the Divine’; will become a natural experience to us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply