Periyava Golden Quotes-1025

பழக்கம் எப்படி வரும்? ஈஸ்வர க்ருபையில்தான் வரும். ‘அந்த க்ருபை எப்படி வரும்?‘ என்றால், அதற்காகத் தான், அதை வருவித்துக் கொள்வதற்காகத்தான், இரண்டு ‘எக்ஸ்ட்ரீம்’களாக அநுஷ்டானங்களை சாஸ்த்ரங்கள் ஏற்படுத்திக் கொடுப்பது. நமக்குத் தெரிந்த நிலையில் ஒரு எக்ஸ்ட்ரீமாக பண்டிகை போஜனம், பாட்டு, கூத்து ஆகியவற்றையும், தினுசு தினுசுகளில் அபிருசி கண்ட நம் மனஸுக்கு ஏற்றபடி அநேக தெய்வங்கள் ஆகியவற்றையும் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, அதே ஸமயத்தில் இன்னொரு எக்ஸ்ட்ரீமான, உண்ணாத உறங்காத பேசா நிலையையும், நிர்குண ஏக பரமாத்மாவையும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருப்பது. இப்படி இரண்டு எக்ஸ்ட்ரீம்களையும் மாறி மாறி அப்யாஸம் செய்கிறதாலேயே, தராசின் இரண்டு தட்டுகளிலும் ‘வெயிட்’ களைப் போடுவதால் அது ஸம நிலைக்கு வருகிற மாதிரி மனஸு ஸமத்துக்கு வந்து, அதோடு வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் மாடரேஷன் வந்துவிடும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

How can we develop (good) habits? We can acquire that only by the Grace of Eswara. But how can we receive that Grace? It is only to receive this Grace that the scriptures have laid down the two extremely opposite paths. On one extreme, is the known path, which includes feasting, singing, dancing, different deities to suit our different tastes? On the other extreme we have, the unknown path, consisting of fasting, silence, meditating on the Formless Divine, etc. When we keep on practicing these two extremes alternatively,  our mind will come to a balance, just like the scales comes to a balance as we go adding equal weights on both the sides. This will lead us to ‘Moderation’ (Mitham) in all aspects of Life. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: