ஒரு பக்கம் பலி, கிலி; யஜ்ஞத்தில் பசுவைக் கொடுப்பது. இன்னொரு பக்கம் ரொம்பப் பிஞ்சாகப் புடலங்காயைப் பறித்துவிட்டால்கூடப் பாபமென்று பிராயசித்தம். ஒரு பக்கம் முனி, காட்டேரி என்று ஏகப்பட்டவை. அப்புறம் ஸெளம்யமாக தேவதா ரூபங்கள். பலவிதமான கலர். நாலு கை, எட்டு கை, பத்துக் கை, பதினெட்டுக் என்று அநேக மூர்த்திகள். மூஞ்சூரிலிருந்து யானை, சிங்கம் வரை வாஹனங்கள். இன்னொரு பக்கம் நிர்குணம், நாமம் ரூபம் இல்லை, பகவானுமில்லை, பக்தனுமில்லை என்று வேதாந்தம். ஒரே சாஸ்திரங்களே இப்படி ஒன்றுக்கொன்று வித்யாஸமாகச் சொன்னால் என்ன அர்த்தம்? நமக்குத் தெரிந்த இடத்தில் ஆரம்பித்துத் தெரியாததற்குப் போகவேண்டுமென்று அர்த்தம். அப்படிக் கொண்டு போவதற்காகவே நமக்குத் தெரிந்தது, தெரியாதது என்று ரொம்ப வித்யாஸமுள்ளதாயிருக்கிற இரண்டையும் சொல்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
On one side there is sacrifice of animals in the Holy Fire and on another side, even plucking of unripe vegetables like snake gourd from the plant is considered to be a sin. On one side we have ferocious deities like Muni, Kaatteri and others and on the other side we have peaceful deities equipped with two, four or eight hands and riding on small mouse to elephants. The same scriptures, on the other extreme, says that ‘The Lord is without any name or form (Nirguna), there is neither the Lord nor the Devotee’. If the same scriptures speak contradictorily like this, then what does that signify? It means that we should start with things known to us and proceed to things which is unknown to us. It is only to facilitate such a thing that there is so much of wide gap between the known and unknown. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply