Periyava Golden Quotes-1014


ஒன்றையும் நினைக்காமல் மௌனமாயிருப்பதென்று முதலில் வாயின் மௌத்துடன் ஈச்வர ஸ்மரணை பண்ணுவதாக ஆரம்பிக்கப்பட வேண்டும். பரமாத்மாவை நம்முடைய இஷ்ட தேவதை எதுவோ அதுவாக பாவித்து இப்படி ஸ்மரிக்க வேண்டும். ஸாக்ஷாத் பராசக்தியாகவோ, உமாமஹேச்வரனாகவோ, லக்ஷ்மி நாராயணனாகவோ பாவித்து மௌனமாக த்யானம் பண்ண வேண்டும். அதற்கப்புறம் இந்த நினைப்பும் போவது அந்தப் பராசக்தியின் அநுக்ரஹத்தால் நடக்க வேண்டியபோது நடக்கட்டும். மௌனமாக ஈச்வர ஸ்வரூப த்யானமும், மனஸுக்குள்ளேயே நாம ஜபமும்தான் நாம் செய்ய வேண்டியது.

கண்டதை நினைத்துக் கொண்டிருப்பதிலிருந்து நேரே இப்படி ஈச்வர நினைப்புக்குப் போனாலும் போகலாம். அல்லது எந்த நினைப்பும் வராமலிருக்கும் படியாகக் கொஞ்சம் பழகிக் கொண்டுவிட்டு, அப்புறம் அது வெறும் ஜடஸ்திதியாக நின்று விடாமலிருப்பதற்காக அந்த கட்டத்தில் ஈச்வர பரமாக நினைக்க ஆரம்பிக்கலாம். இந்த கட்டத்தில் அது கொஞ்சம் பலமாகவே ஈச்வரனிடம் ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

To eventually remain thoughtless, one should first observe silence and meditate on Eswara.  We should visualize Paramathma as the God or Goddess close to our heart; Parasakthi, Umamaheswaran or Lakshminarayanan and meditate silently. This thought may also vanish when Parasakthi wills so. We have to only think of Eswara and meditate His name (Nama Japam).

We can do this Eswara Dhyanam instead of being subject to useless thoughts or we can slowly train the mind to become thoughtless to some extent and then start meditating upon Eswara to prevent emptiness of the mind. In the latter case, the attachment to Eswara will be stronger. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading