Periyava Golden Quotes-1012

ஸஜ்ஜனங்களின் கூட்டுறவும் எல்லா உறவும் அற்றுப் போகிற நிலைக்குக் கொண்டு விட்டு விடும். ஒரு விதமான பற்றும் இல்லாமலிருக்க வேண்டும் என்றால் அது உடனே ஸாத்யமாயில்லை. அதனால் கெட்ட ஸஹவாஸத்தை விட்டு ஸத்ஸங்கம் சேர வேண்டும். இதுவும் உறவுதான். ஆனால் ஒரு பழம் நன்றாகக் கனிந்தபின் தானாக இற்று விழுந்து விடுகிறமாதிரி, இது ஒருநாள் முடிந்துவிடும். இதைவிட உயர்ந்த ஏகாந்த அநுபவத்தில் சேர்த்துவிடும். ”ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்” என்று ஆசார்யாள் (‘பஜகோவிந்த’த்தில்) சொல்கிறார். இப்படியே God-thoughtலிருந்து no-thought உண்டாகும். ஆனால் இது முதலிலிருந்த சூன்ய no-thought இல்லை; பரிபூர்ண ஸ்திதி; ‘தாட் ‘எழுப்புகிறதற்கு இடமேயில்லாமல் ஞானம் பூர்ணமாக ரொம்பிய நிலை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Satsang or the association of good people will lead to a state in which all relationships disappear. It is not possible to give up all attachments immediately. Hence one has to give up evil associations and seek the company of virtuous people. This is also an attachment. But eventually, this association will also disappear in the same way a fruit falls after it ripens. And we will reach that state of Divine Solitude. Sri Adi Sankara states in Bhaja Govindam ‘Satsangatve Nissangatvam’. Thus one is led from God thought to No thought. But this is not a state of empty No thought. It is a fulfilled state. A fully enlightened state in which there is no chance of thought ever raising. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading