முதலில் உண்டாகும் சூன்யத்தை ‘லயம்’ என்றும் முடிவில் உண்டாகும் பூர்ணத்தை ‘ஸமாதி’என்றும் சொல்வார்கள். இது இரண்டுக்கும் நடுவே ஈச்வரனைக் கொண்டு வந்து விட்டேன். மனஸ் தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு காலியாகிறபோது இப்படி ஈச்வர ஸ்மரணம் என்பதாகச் செய்வது மறுபடி எண்ணங்களை உண்டாக்கிக் கொள்வதுதானே?’ ஒன்றையும் நினைக்க வேண்டாமென்று ஸாதனை செய்ய ஆரம்பித்து, அப்படி நினைக்காமலிருக்கிற நிலை வரும்போது, இது சூனியமாகத்தானிருக்கிறதே தவிர ஸுகாநுபவமாக இல்லை என்பதால், இதை மாற்றி ஈச்வரனை நினைக்க ஆரம்பிப்பதில், மறுபடி தப்பு நினைப்புகளும் வருமாறு மனஸ் இழுத்துக் கொண்டு போய்விட்டால் என்ன பண்ணுவது? பூர்ணத்வம், நித்ய ஸுகாநுபவம் வராவிட்டால் போகட்டும். சூன்யமாகவே இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். இந்த மனஸின் கன்னா பின்னா இழுப்பும், கெட்ட நினைப்புகளும் உண்டாக இடங்கொடுக்காமலிருந்தாலே போதும்’ என்று தோன்றலாம்.
ஓரளவுக்கு மைன்ட் ஸ்டெடியாகி, நினைப்பில்லாமலிருக்கிற பக்குவம் பெற்றபின் அப்பியஸிக்க வேண்டிய ஈச்வர ஸ்மரணையைப் பற்றி இப்படிக் கவலைப்படவே வேண்டாம். அந்த ஸ்டேஜுக்கு அப்புறம் மனஸ் கெட்ட எண்ணங்களில் போகவே போகாது. ஒரு ஜீவன் ரொம்பவும் பிரயத்தனப்பட்டு எண்ணங்களை நிறுத்தித் தன்னிடம் மனஸைக் கொடுத்தபின் ஈச்வரன் அவனைக் கெட்டுப் போகும்படி விடமாட்டான். ஈச்வர பக்தியும் பிரேமையுங்கூட மனஸின் காரியந்தான் என்றாலும் இதற்கப்புறம் ஒருநாளும் மனஸ் கெட்டதற்குப் போகாது; தன்னை அடியோடு கரைத்துக் கொள்கிற மௌனத்துக்கே போகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
The initial state of thoughtlessness is called ‘Layam” and the ultimate state of thoughtlessness is ‘Samadhi’. When the mind stops its oscillation and becomes empty, if it starts thinking of Eswara, is it not the means to regenerate those thoughts? If through rigorous practice one trains the mind to be empty, then one might feel that is just emptiness and not a joyful experience; thinking so, if one brings the thought of Eswara to mind, will not other unwanted thoughts come crowding to the mind? Consequently, one may feel that even if one does not have a joyous experience or sense of completeness, it is better to remain in this empty state than allow unwanted thoughts to clutter the mind.
After having steadied the mind to some extent and trained it to remain thoughtless one need not worry about Eswara Smaranai – constantly thinking of Eswara – because the mind will not wander in an evil direction, after this stage. After a being surrenders his heart to Him with great efforts, Eswara will not allow such a being to go astray. Even though love and devotion for the Eswara are thoughts the mind will gradually learn to submerge itself in the Ultimate Silence. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply