Periyava Golden Quotes-1009

பரப்பிரம்மத்தை மனஸாலும் வாக்காலும் பிடிக்க முடியாது. மனஸும் வாக்கும் அற்றுப்போன மௌனம் தான் அதை விளக்குவது!

மௌந வ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்ம தத்வம்

பாஷா வ்யாக்யானத்தால் நெருங்க முடியாத பிரம்ம தத்துவத்துக்கு மௌனமேதான் பாஷையாகி வியாக்யானம் செய்கிறதாம்!

இப்போது நானா தினுஸான நினைப்பு, இப்படியில்லாமல் ஆக்கிக் கொள்ள மௌன அப்பியாஸம், அதிலே ஒரு நினைப்பும் இல்லாமல் சூன்யமாகப் போகிற நிலை, அப்புறம் ஈச்வரன் ஒருத்தனைப் பற்றியே நினைப்பு, முடிவிலே அவனையும் வெளியேயிருந்து நினைப்பதாக இல்லாமல் அவனாகவே ஆகிவிடுகிற நினைப்பற்ற பூர்ணத்வம்.

முதலிலிருந்தே அந்த சூன்யநிலை அதோடு முடிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாயிருந்து விட்டால் எல்லாம் ஸரியாகிவிடும். பூர்ண நிலைக்குப் போய்விடலாம். முதலில் உண்டாகும் சூன்யத்தை ‘லயம்’ என்றும் முடிவில் உண்டாகும் பூர்ணத்தை ‘ஸமாதி’என்றும் சொல்வார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

The Brahma Thathva (Divine Supreme), ‘Para Brahmam’ cannot be understood by words or thoughts. It can be realized only though sheer silence wherein the words or the mind do not have a role to play (Mouna Vyaakyaa Prakatitha Parabrahma Thatvam). The Brahma Thathva which cannot be explained with words is described only through silence. Initially, there is the discarding of all unnecessary thoughts through observance of silence. Then this emptiness is filled with thoughts of Eswara. Then this dichotomy between the Self and the Supreme vanishes and there occurs the thoughtless state where one merges with Eswara. If one is careful not to remain at that state of emptiness, everything will eventually work out. One can reach the ultimate Divine state. The initial state of thoughtlessness is called ‘Layam” and the ultimate state of thoughtlessness is ‘Samadhi’. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: