72. Sri Sankara Charitham by Maha Periyava – Patanjali Charitam

Jaya Jaya Sankara Hara Hara Sankara – As Sri Periyava says, Sri Sankara Charitham is just not about Bhagawathpadhal but an assorted mix of many divya charithams. In this small chapter, Sri Periyava gives a prelude about Patanjali Maharishi and will explain in the future chapters on his connection to Sri Sankara Charitham.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for the majestic drawing on Lord Nataraja and the two great bhakthas standing on either sides. Rama Rama

பதஞ்ஜலி சரிதம்

பதினேழாம் நூற்றாண்டுக் கடைசியில் தஞ்சாவூர் ராஜா ஷாஹஜி, வித்வான்களுக்கென்றே தன்னுடைய ராஜ்யத்தில் ஒரு ஊர் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, திருவிசநல்லூரில் அநேக பண்டிதர்களையும், கவிகளையும் குடியேற்றி யதேஷ்டமாக மான்யங்கள் கொடுத்தான். அப்படி மொத்தம் 46 பேருக்கு அந்த க்ராமம் ஸர்வ மான்யமாகத் தரப்பட்டு வித்யா ராஜதானியாக இருந்தது. அவர்களில் ராமபத்ர தீக்ஷிதர் என்பவர் ஒருவர், கவி. பெரியவர். நல்ல ரஸிகர். ஸாதாரணமாக இலக்கணப் புலமையும் இலக்கியத் திறமையும் ஒன்றோடொன்று சேராது என்பார்கள். ஆனால் இவரோ இரண்டிலும் தேர்ந்தவராயிருந்தார். வ்யாகரணத்தில் (இலக்கணத்தில்) பெற்றிருந்த தேர்ச்சியால் “பிரத்யக்ர பதஞ்ஜலி” என்று பெயர் பெற்றிருந்தார்.

பதஞ்சலிதான் வ்யாகரண மஹாபாஷ்யம் எழுதியவர். அவர் கதையும் கௌடபாதர் கதையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. “பதஞ்ஜலி சரிதம்” என்பது ராமபத்ர தீக்ஷிதர் எழுதியதுதான். ‘பதஞ்ஜலி சரிதம்’ எழுதியவருக்கே ‘நிகழ்காலப் பதஞ்ஜலி’ என்று பொருள்படும் ‘ப்ரத்யக்ர பதஞ்ஜலி’ என்ற பட்டம் இருந்தது.

கவி என்ற முறையில் ச்ருங்கார நாடகாதிகள் அவர் எழுதியிருந்தாலும் உயர்ந்த பக்தியுள்ளம் படைத்தவராயிருந்தார். குறிப்பாக ராமசந்த்ர மூர்த்தியிடம் அவருக்குப் பரம பக்தி. “ஜானகி பரிணயம்” என்று அவர் எழுதியிருக்கும் நாடகம் ப்ரஸித்தி வாய்ந்தது. “ராம ஸ்தவ கர்ண ரஸாயணம்”, “ராம சித்ர ஸ்தவம்” என்றெல்லாமும் அநேக ஸ்தோத்ரங்கள் எந்த ராமாயணத்திலும் இல்லாத நூதன கல்பனைகளோடு எழுதியிருக்கிறார். தக்ஷிணத்தில் விசேஷமாக நாடக க்ரந்தம் எழுதுபவர்கள் கிடையாது என்று வடக்கத்தி வித்வான்கள் சொல்லி வந்த அபக்யாதியைத் துடைக்கவே ‘ஜானகி பரிணயம்’ எழுதி நம்முடைய தென்தேசத்தின் பெருமையை நிலை நாட்டினாரென்று சொல்லப்படுகிறது.

நமக்கு விஷயம் அவருடைய “பதஞ்ஜலி சரிதம்”. எட்டு ஸர்கங்கள் கொண்ட புஸ்தகம் அது.

ராமர் என்று சொன்னவுடன் அவருடன் இணைபிரியாத பக்த சிரோமணியான ஆஞ்சநேய ஸ்வாமியை நினைப்பது போல நடராஜா என்றவுடன் இரண்டு பேர் நினைவு வரும். நடராஜாவின் பிம்பமானாலும், சித்ரமானாலும் எதிலும் அவருக்கு இரண்டு பக்கங்களில் இந்த இரண்டு பேரும் இருப்பார்கள். கேட்பதற்கு பயமாக “பாம்பும் புலியும் இருபக்கமும்” என்று இவர்களைத்தான் பாட்டுக்களில் சொல்லியிருக்கிறது! படங்களில் பார்த்தாலும் ஒருத்தருக்கு இடுப்புக்குக் கீழே பாதி உடம்பு பாம்பாக இருக்கும். இன்னொருத்தருக்குப் புலியாக இருக்கும். ஆனால் அந்த இருவரும் யாருக்கும் எந்த ஹிம்ஸையும் பண்ணாமல் ஸ்வாமியின் நர்த்தனத்திலேயே ஸதாகாலமும் நேத்ரத்தையும் ஹ்ருதயத்தையும் அர்ப்பணம் பண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். புலிக்கால்காரர் ‘வ்யாக்ரபாதர்’ என்பவர். அந்தப் பேருக்கே அப்படித்தான் அர்த்தம். பாம்புக் கால்காரர்தான் நம்முடைய உபகதையின் நாயகரான பதஞ்ஜலி.

சிதம்பர மஹிமையையும், ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மஹிமையையும் விளக்குவதாக அந்தக் திருவிசநல்லூர் பண்டித கவிகளில் இன்னொருத்தரான வேங்கடக்ருஷ்ண தீக்ஷிதர் என்பவர் “நடேச விஜயம்” என்று காவ்யம் எழுதியிருக்கிறார். அதிலும் பதஞ்சலியை பற்றி ஓரளவு வருகிறது. பதஞ்ஜலியையே மையமான பாத்ரமாக வைத்து ராமபத்ர தீக்ஷிதர் எழுதியுள்ள ‘பதஞ்ஜலி சரித’மும் ‘நடேச விஜய’மும் அநேக detail-களில் (விவரங்களில்) ஒத்துப் போகின்றன.

பதஞ்ஜலி ஆதிசேஷனின் அவதாரமென்று அந்தப் புஸ்தகங்களில் இருக்கிறது.

ஆதிசேஷன் மஹாவிஷ்ணுவைச் சேர்ந்தவர். திருப்பாற்கடலில் பகவானுக்குப் படுக்கையாக இருப்பவர். அந்தப் பரம வைஷ்ணவர் எப்படிப் பரம சைவராகி நடராஜாவின் இணைபிரியாத பக்தரானார்? திருப்பாற்கடலிலிருந்தவர் ஏன் சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்தார்?

அதற்குக் காரணம் நடேச விசயத்தில் சுருக்கமாகவும் பதஞ்ஜலி சரிதத்தில் விரிவாகவும் வருகிறது.

மஹாவிஷ்ணுவேதான் ஆதிசேஷனை அப்படி அனுப்பி வைத்தது என்று வருகிறது.

அப்படியானால் மஹாவிஷ்ணுவுக்கும் நடராஜாவுக்கும் என்ன ஸம்பந்தம்?
________________________________________________________________________________________________

Patanjali Charitam

During the end of seventeenth century, Shaahaji, the king of Tanjavur, desired that there should be a separate village in his kingdom for learned people and therefore made arrangements for many scholars and poets to settle down in Tiruvisanallur and bestowed liberal grants to them.  The village was given as a complete grant to a total of 46 persons and remained as the knowledge capital.  Of them, was one Ramabhadra Deekshitar, a Poet.  A person of great merit.  Connoisseur. It is generally said that academic knowledge and literary abilities, do not go together.  However, this man excelled in both.  Owing to the expertise he had in grammar (Vyaakarana [व्याकरण]), he had earned the name, “Pratyagra Patanjali” [प्रत्यग्र पतञ्जलि].

Patanjali was the author of the Vyaakarana Maha Bhashyam [व्याकरण महाभाष्यम्].  His life story and the story of Gowdapada are intertwined.  “Patanjali Charitam” is written by Ramabhadra Deekshitar. The man who had written the “Patanjali Charitam” himself had the title, “Pratyagra Patanjali”, meaning ‘Present day Patananjali’.

While he had written beautiful plays as a poet, he was also a man with a heart of great piety. Particularly, he was extremely devoted to Sri Ramachandramurthy.  The play “Janaki Parinayam” [जानकी परिणयम्] that he has written, is very famous.  He has written several hymns, like, “Rama Sthava Karna Rasaayanam” [राम स्तव कर्ण रसायनम्], “Rama Chitra Sthavam” [राम चित्र स्तवम्], etc., with a novel imagination that is not found in any other Ramayana.  It is said that he had written the “Janaki Parinayam”, specifically to erase the misfortune of being branded by the northern Pundits that there are no people in the south who can write good theatrical treatises and thus established the greatness of the southern nation.

Our topic is his “Patanjali Charitam”.  It is a book containing eight chapters.

Just as we think of the inseparable and ardent devotee, Anjaneya Swamy, the moment “Rama” is mentioned, two names come to the mind when we say “Nataraja”.  Be it Nataraja’s deity or picture, these two people will be there on his either side. Terrifying to hear, they are only referred to as the “Snake and Tiger on either side” in the songs! One can observe in the pictures that one of them will be having half the body below the waist as that of a snake and the other, that of a tiger.  However, both of them are present there, not doing any harm to anyone, forever watching Swamy’s dance, with dedication in their eyes and heart. The man with the legs of the tiger is ‘Vyaaghrapaada’ [व्याघ्रपाद].  The name itself means that.  The person with the legs of the snake, Patanjali, is the hero of this side story.

One more of the Pundit-poets of Tiruvisanallur, Venkatakrishna Deekshitar, has written an epic, “Natesa Vijayam” [नटेश विजयम्], which explains the wonders of Chidambaram and Sriman Natarajamurthy.  There is a mention about Patanjali in that also, to some extent.  The “Patanjali Charitam”, written by Ramabhadra Deekshitar, with Patanjali as the protagonist and “Natesa Vijayam”, align with each other in many details.

It is mentioned in those books that Patanjali is an incarnation of Aadisesha.

Aadisesha belongs to Mahavishnu.  He serves as the cot for Bhagawan in the divine Milky Ocean (Thiruppaarkadal).  How did that staunch Vaishnava become a staunch Saivite and an inseparable devotee to Lord Nataraja?  Why did he, who was in the Milky ocean, come to Chidambaram?

The reason for that is found in brief in Natesa Vijayam and elaborately in Patanjali Charitam.

It is mentioned that Mahavishnu himself had sent Aadisesha like that.

In that case, what is the link between Mahavishnu and Nataraja?______________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. Lord Nataraja picture is very beautiful.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading