Jaya Jaya Sankara Hara Hara Sankara – The greatness of Suka Brahma Maharisihi has been explained further in this concluding part of this chapter. What an amazing Brahma Nishta Yogi he is…….
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for an excellent depiction & audio. Rama Rama
சுக ப்ரஹ்மம்
பிள்ளை ஓடுவதைப் பார்த்து வ்யாஸாசார்யாள் அவரைத் தடுத்துப் பிடித்து அழைத்து வருவதற்காகப் பின்னாலேயே ஓடினார். அவருக்கு ஈடுகொடுத்து இவரால் ஓட முடியவில்லை. அவர் எங்கேயோ போய்விட்டார்! இவர் “புத்ரா, புத்ரா!” என்று கதறிக் கொண்டு பின்னால் போகிறார். “த்வைபாயநோ விரஹகாதர ஆஜூஹாவ – புத்ரேதி”: “த்வைபாயனராகிய வ்யாஸர் பிரிவாற்றாமையால் தவிதவித்துக் கொண்டு ‘புத்ரா’ என்று கூப்பிட்டுக் கொண்டே போனார்.
அப்போது என்ன ஆயிற்று? ஒரு அதிசயம் நடந்தது.
தரவோ (அ)பிநேது:
வ்யாஸர் கூப்பிட்டுக் கொண்டே போனதற்குச் சுற்றுப்புறக் காட்டிலுள்ள மரங்களெல்லாம் பதில் குரல் கொடுத்ததைத்தான் ‘தரவோ (அ)பிநேது:’ என்று சொல்லியிருக்கிறது. ‘அபிநேது’ என்பதற்கு ஒரு புது தினுஸாகவும் அர்த்தம் பண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.
‘அபிநேத்ரு’ என்றால் நடித்துக் காட்டுபவர், நடிகர், actor என்கிறார்களே, அது. ஒரு நடிகன் என்ன பண்ணுகிறான்? கதையில் வருகிற யாரோ ஒரு பாத்ரத்திற்கு ப்ரதிநிதியாக இருந்து, அவன் பண்ண வேண்டியதையெல்லாம் தான் பண்ணுகிறான். என்றைக்கோ ராமர் இருந்துவிட்டுப் போய் விட்டார். இப்போது அவர் பாட்டுக்கு ஸ்வஸ்தமாகப் பரமபதத்தில் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் எங்கே பார்த்தாலும், இந்தியாவில் மட்டுமில்லாமல் ஸியாம் (தாய்லாந்து), ஜாவா முதலிய தேசங்களிலும்கூட ராமாயண ட்ராமா, ஸினிமா எல்லாம் நடந்தபடி இருக்கின்றன. யார் யாரோ ‘அபிநேத்ரு’க்களாக ராமர் வேஷம் போட்டுக் கொள்கிறார்கள். நிஜ ராமர் இப்போது ஒன்றிலும் பட்டுக் கொள்ளாமல் உச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்தாலும் இந்த ‘ஆக்டர்’களெல்லாம் அவருக்குப் பதில், அவருடைய ப்ரதிநிதியாக, வனவாஸம் பண்ணுகிறார்கள், ஸீதையைப் பறி கொடுக்கிறார்கள், ராவண ஸம்ஹாரம் பண்ணுகிறார்கள். ட்ராமாவிலே தசரதரோ, விச்வமித்ரரோ, அல்லது ராவணனோ “ராமா” என்று கூப்பிடுகிற போதெல்லாம் நிஜ ராமர் ஏன் என்று கேட்பதில்லை. இந்த அபிநேத்ருதான் பதில் கொடுக்கிறான்.
அந்த மாதிரி வ்யாஸர் ‘புத்ரா, புத்ரா!’ என்று கூப்பிட்டுக் கொண்டு ஓடியபோது சுகர் ஒன்றும் பதில் கொடுக்கவில்லை. ஆனால், அவருக்கு ப்ரதிநிதிகளாகக் காட்டிலிருந்த மரங்களெல்லாம் ‘ஏன், ஏன்?’ என்று கேட்டன! “தரவோ அபிநேது:” தருக்கள் அபிநேதாவின் கார்யத்தைப் பண்ணின. அதாவது, சுகருடைய behalf-ல் (சார்பில்) மரங்கள் respond பண்ணின (பதில் கொடுத்தன)!
அவரைக் கூப்பிட்டால் இவை ஏன் பதில் கொடுக்க வேண்டுமென்றால், அவர் யார்? ஸர்வ பூத ஹ்ருதயரானவர். ‘எல்லாம் தாம்’ என்று ஆன ப்ரஹ்மஞானி. ஆகையால் சேதனா சேதனங்களான ஸகலத்தினுள்ளேயும் அவர் நிறைந்திருக்கிறார். அதனால், அவை எல்லாமே அவர் மயமாகி (‘தன்மயதயா’)’ ‘ஏன், ஏன்?’ என்று பதில் குரல் கொடுத்தன. மரங்கள் மட்டுமில்லை; ம்ருகங்கள், பக்ஷிகள், மலை நதி எல்லாம்தான் பதில் கொடுத்தன. ஆனாலும் பொதுவாக உணர்ச்சியே இல்லாமல் ஜடமாயிருப்பதை ‘மரம் மாதிரி’ என்று தானே சொல்கிறோம்? உணர்ச்சி போய்விட்டால் ‘மரத்து போயிடுத்து’ என்றுதானே சொல்கிறோம்? அதனால் மரங்களே சுகருக்காக பதில் குரல் கொடுத்தனவென்றால் அத்தனை ஜீவ ஜட ப்ரபஞ்சமும் அவருக்கு ப்ரதிநிதியாக ப்ரதிவசனம் பேசின என்று அழுத்தமாகக் காட்டியதாகும் என்றே “தரவோ அபிநேது:” என்று (பாகவத புராணத்தை ப்ரவசனம் செய்த) ஸூத பௌராணிகர் போட்டிருக்கிறார்.
ச்லோகம் இவ்வளவு சொன்னதோடு நின்று விடுகிறது. வ்ருக்ஷங்கள், ம்ருகங்கள் முதலியன சுகருக்காக, சுகராக, பதில் கொடுத்த பிறது வ்யாஸருக்கு என்ன ஆயிற்று என்று அதில் இல்லை.
ஆனால் நாம் ஊஹித்து விடலாம்.
சுகர் என்று ஒரு சரீரத்தில் இருக்கிற மாதிரி இருந்தவர் பட்டுக் கொள்ளாமல், பட்ட கட்டைபோல ஞானியாக அவர் பாட்டுக்குப் பதில் சொல்லாமல் போய்விட்டார். எத்தனை ஞானியானாலும் அவருடைய ஹ்ருதயத்தில் ஈச்வரன் ப்ரேமையைச் சுரக்காமல் விடமாட்டான்! அதனால், ஸர்வபூத ஹ்ருதயரான அவர் தம்முடைய மற்ற சரீரங்களைப் போன்ற மரம், மட்டை ஆகியவற்றின் மூலம், அழுகின்ற அப்பாவுக்கு ஆறுதலாக பதில் கொடுக்கப் பண்ணிவிட்டான். இப்படி, அந்த ஒரு வ்யக்தி விரக்தியுடன் பேசாமல் ஓடிக் கொண்டுள்ளபோது பாக்கி அத்தனை வஸ்துக்களும் ப்ரேமையுடன் பதில் சொன்னதிலேயே வ்யாஸருக்கும் ஆறுதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல், ஆத்ம ஞானமும் ஆழமாக வேரூன்றி இருக்க வேண்டும். ஒரு ரூபத்தில் மாத்திரம் பிள்ளை இருக்கிறதென்றால் அதைப் போகவிடப்படாது என்று பிடித்து வைத்துக் கொள்ளத் தோன்றும். அத்தனை ரூபத்திலும் இருக்கிறது என்றால்? அது எப்படிப் பிரிந்து போகும்? இவர் எங்கேயிருந்தாலும் அங்கேயும்தானே பிள்ளை இருப்பதாகும்? அதனால், அதற்காக அழ வேண்டியதே இல்லைதானே? வ்யாஸரும் ஸாமான்யப் பட்டவரில்லையே! ஆகையால் பிரிய முடியாததாக, எங்கும் நிறைந்திருப்பதாக ஒன்றைத் தெரிந்து கொள்ளும்போது அதை ஒரு ஊஹமாகவோ, புத்திவாதமாகவோ மட்டும் தெரிந்து கொள்ளாமல் அனுபவித்தே அறிந்திருப்பார். பிள்ளையாக அறிந்தவரை எல்லாமாகி, எங்கும் நிறைந்த தத்வமான ப்ரஹ்மமாகவே அறிந்திருப்பார். எல்லாமாகி, எங்கேயும் நிறைந்திருப்பதென்றால் அப்போது (வ்யாஸராகிய) தாமுமாகி, தமக்குள்ளேயும் அதுதான் நிறைந்திருக்கிறதென்று கண்டு கொண்டிருப்பார். அதாவது ஆத்ம ஞானத்தில் ஆழமாக வேரூன்றி இருப்பார்.
கொஞ்சங்கூட அன்போ அநுதாபமோ இல்லாத மாதிரி ஒரு ரூபத்திலிருந்து கொண்டு தகப்பனாரைப் பிரிந்து சென்று கதறக் கதற அடிக்கும்போதே, ஸகல ரூபங்களிலும் இருந்து கொண்டு அவருடைய பாச பந்தத்தைப் போக்கி, அவருடைய ஞானம் ஸ்திரமாக வலுப்படுவதற்குப் பெரிய உபகாரத்தை சுகர் செய்திருக்கிறார்!
அப்படிப்பட்டவரிடம் உபதேசம் பெற்ற சிஷ்யர் கௌடபாதர்.
அவருடைய கதையைப் பார்க்கலாம்.
அவருடைய கதைக்கு முன் அவருடைய குருவின் கதையைக் கொஞ்சம் சொல்ல வேண்டும். அதோடு ஒட்டுப் போட்டுக் கொண்டுதான் இவர் கதை வரும்.
குரு என்றால் ஸந்நியாஸ குரு அல்ல. இவருக்கு ஸந்நியாஸம் தந்த குரு சுகர். அவர் கதைதான் சொல்லியாயிற்றே! சொல்ல வேண்டியது அவருடைய (கௌடபாதருடைய) வித்யா குருவைப் பற்றி. லோகத்தில் ப்ரஹ்ம வித்யை ப்ரசாரமாகக் காரணமாக இருந்த கௌடபாதர் மூலம்தான் வ்யாகரண சாஸ்த்ரமும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த சாஸ்த்ரத்தை அவருக்கு உபதேசித்த வித்யா குருவைப் பற்றியே இப்போது சொல்லப் போவது.
பதஞ்ஜலி என்ற அந்த குருவின் கதையையும், அவரிடமிருந்து இவர் உபதேசம் பெற்ற கதையையும், இன்னும் பல கதைகளையும் சொல்லிக் கடைசியில் இவருடைய சிஷ்யரிடம் நம் ஆசார்யாள் சிஷ்யராகி ப்ரஹ்ம வித்யா உபதேசம் வாங்கிக் கொண்டது உள்பட எல்லா விருத்தாந்தங்களையும் “பதஞ்ஜலி சரிதம்” என்ற காவ்யம் சொல்கிறது. அந்தக் கதைகள் கொஞ்சம் சொல்கிறேன்2.
_____________________________________________________________
2ஸ்ரீசரணர்கள் முற்றிலும் ‘பதஞ்ஜலி சரிதத்’தையே பின்பற்றாமல் வேறு புராணக் கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் ஆகியவற்றையும் அநுஸரித்து உபந்நியஸித்திருப்பதாகக் காண்கிறோம்.
____________________________________________________________________________________________________________
Suka Brahmam
Seeing his son running away, Vyasacharya ran behind him to stop him and bring him back. He was not able to run coping with him. He (Suka) had gone far ahead! He was going behind, crying, “Putra, Putra”. “Dvaipaayano Virahakaatara Ajuhaava Putrethi” [द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति]. Vyasa, the Dvaipaayana, wallowing in separation, went running behind, calling, “Putra”.
What happened then? A miracle happened.
Taravo (A)bhinedu : [तरवोऽभिनेदु:]
The response call given by surrounding trees in the forest to Vyasa running and calling, is what is referred to as ‘Taravo (A)bhinedu:’. It prompts us to think of the meaning for (A)bhinedu, in a new way.
Abinetru [अभिनेतृ] means one who demonstrates by acting. It is what they say as, ‘Actor’. What does an actor do? He becomes the representative of some character in the story and does all that he is supposed to do, himself. Rama had lived long, long ago and gone. He is now comfortably residing in the highest state. But everywhere you see, not only in India, but also in countries like Siam (Thailand), Java, etc., dramas and films are made on Ramayana. Some unknown people put on the role of Rama as ‘Abhinetrus’. While the real Rama remains unaffected by any of these and sits atop at a highest state, these ‘actors’, instead of him, as a representative, carry out the Vanavasa, lose Sita, kill Ravana etc. Whenever Dasaratha or Viswamitra or Ravana, calls Rama in the drama, the real Rama does not respond. Only this actor gives the response.
In the same way, when Vyasa went running, calling out “Putra, Putra”, Suka did not respond. But the trees in the forest, responded, “why, why”, as his representatives! “Taravo (A)bhinedu” Tarus did the job of Abhineta. That is, on behalf of Suka, the trees responded (answered)!
If it is asked why should they respond, when he was being called, who was he (Suka)? He was ‘Sarva Bhuta Hrdaya’, one who resides in all elements. He was an omnipresent Brahma Gnani. Therefore, he resides in everything, animate and inanimate. Therefore, all these, became one with him (Tanmayataya) and responded back, “why, why”. Not only trees, but also animals, birds, mountains, rivers, everything, responded. Still, don’t we generally refer to someone who is not sensitive to anything, as being Jada (inanimate) ‘like a tree’? When we lose sensation, don’t we say, it has become ‘numb like wood’? Therefore, when the trees responded on behalf of Suka, it is mentioned by Soota Pouranika (the one who gave the discourse on Srimad Bhagawatha Purana) that it is only to show emphatically that the entire animate and inanimate world gave the response, as his representative.
The sloka stops with saying only that much. It does not mention what happened subsequently to Vyasa, after the trees, animals etc. gave the response.
However, we can make a guess.
Suka, who appeared to have lived in a physical body, did not bother and like a seasoned Gnani, went off on his own, without responding. Howsoever a Gnani he may be, Eswara would not allow without making his heart secrete love! Therefore, he (Suka) being ‘Sarva Bhuta Hrdaya’ [ सर्वभूतह्रदय ], arranged to provide the response to comfort the wailing father, through the trees etc., which were like his other bodies. When such a person was running off silently, without any passion and all the other objects responded so affectionately, it must have not only given consolation to Vyasa but the realisation about Self also should have got more deep-rooted. If the son lived in only one form, it might occur to not let him go off, and keep him with himself. If he is there in all forms? How will he go away separately? Would it not be that wherever he was, his son was also there? Therefore, is it not that there is no need for him to be crying for him? Vyasa was also not an ordinary person! Therefore, when coming to know that there was something which was inseparable, omnipresent, instead of learning it only as a guess or as a mental reasoning, he must have learnt it by experiencing it. He must have recognised the person who was his son as the ‘be all’ and omnipresent truth. If he is, be-all and omnipresent, he would have found out that the same thing is himself and is filled within him (Vyasa) also. That is, he must have become deep rooted in the realisation of Self.
Suka had extended a great help, having been in a form which appeared to be not having even a little love or sympathy and made the father cry so badly leaving him, but by being in all the forms and by removing the bondage of love, making his (supreme) knowledge strengthened permanently.
Gowdapada was a disciple who got the teachings from such a great person.
Let us look at his story.
Before his story, we have to talk about the story of his Guru. His (Gowdapada) story would only come linked with him (his Guru’s).
Guru, means not the ascetic Guru. The Guru who gave him Sanyasa, was Suka. Have we not talked about his story already? What is to be told is about his (Gowdapada’s) academic Guru. We have been able to get Vyaakarana Sastra also through Gowdapada, who was only instrumental in the world getting to know widely about Brahma Vidya. We are about to discuss about the Guru who taught him that Sastra.
An epic, called, “Patanjali Charitam” [पतंजलि चरितम् ], discusses about various stories, including the story of the Guru, known as Patanjali, the story about he (Gowdapada) getting the teachings from him and after narrating several other stories ends with our Acharya becoming a disciple to his disciple and obtaining Brahma Vidya. Let me tell you some of these stories.
_______________________________________________________________
2 It is seen that Sri Charana has not entirely followed the “Patanjali Charitham” and has rendered discourses, adhering with some other Purana stories, stories of yore, etc.
____________________________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
Reblogged this on Gr8fullsoul.