Thai Velli Periyava Collage

Should I really call out that the artist is Sudhan?!

Thai Velli is so special to ambal. Let us chant whatever stuthi that we have learnt on Her to receive the blessings. Following is what Mahaperiyava said in DK.

வெள்ளிக்கிழமை வைபவம் – அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

நாதரூபா

கல்வி தெய்வமான சரஸ்வதி கையிலே வீணை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். பரமேசுவரனின் பத்தினியான சாக்ஷாத் பராசக்தியும் கையிலே வீணை வைத்திருப்பதாகக் காளிதாஸர் ‘நவரத்னமாலா’ ஸ்தோத்திரத்தில் பாடுகிறார்.
அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக் கொண்டிருப்பதாகவும், ஸரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்களின் ஸாதுரியத்தில் திளைத்து ஆனந்திப்பதாகவும் பாடுகிறார்.

அவர் ஸ்லோகத்தைச் செய்துகொண்டு போயிருக்கிற ரீதியைக் கவனித்தால், அம்பிகை ஸங்கீதத்தில் அமிழ்ந்திருப்பதாலேயே சாந்த ஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதேபோல ஸங்கீத அநுபவத்தினால்தான் அவளுடைய உள்ளம் மிருதுளமாக—புஷ்பத்தைப்போல் மென்மையாக, கருணாமயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.

சாக்ஷாத் பராசக்தியை இப்படி ஸங்கீத மூர்த்தியாகப் பாவிக்கும்போது அவளுக்கு சியாமளா என்று பெயர். ஸங்கீதத்தில் தோய்ந்து ஆனந்த மயமாகவும், சாந்த மயமாகவும், குழந்தை உள்ளத்தோடும் உள்ள சியாமளாதேவியைத் தியானித்தால், அவள் பக்தர்களுக்குக் கருணையைப் பொழிவாள். அவளது மிருதுவான இதயத்திலிருந்து கருணை பொங்கிக் கொண்டேயிருக்கும்.

தெய்வீகமான ஸங்கீதம் ததும்பும் சந்நிதியில், சாந்தமும் ஆனந்தமும் தாமாகவே பொங்கும்; சிவகாந்தாவிடம் சரண் புகுந்தால் நமக்கு இந்தச் சாந்தமும் ஆனந்தமும் கைகூடும்.

அம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. நாதம் ஈசுவரன் அல்லது பிரம்மம். அம்பாள் சங்கீதத்தில் சொக்கி ஆனந்தமாயிருக்கிறாள் என்றால், பிரம்மமும் சக்தியும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றிய அத்வைத ஆனந்தத்தையே குறிக்கும்.

அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, ஸங்கீதத்தின் மூலம் அவளை உபாஸிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள்.

இதற்கு பொருத்தமாக, லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பாளை “நாதரூபா” (நாத வடிவானவள்) என்று சிறப்பாக சொல்லப்படுகிறது.

பெரியவா சரணம்!

தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural_An initiative of Kanchi Periva Forum – http://www.periva.org | http://www.anusham.org



Categories: Photos

Tags:

2 replies

  1. thanks a lot for sharing this. Great work by Sudhan !

  2. Sri Paraskthi Mathaki Jai. Janakiraman,Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: