Periyava Golden Quotes-1003

ஆரம்பத்தில் எல்லாக் காரியத்தையும், எண்ண ஓட்டத்தையும் விட்டு மௌனமாயிருப்பதென்றால் முடியாதுதான். அந்த நிலையில் சைகை, எழுதிக் காட்டுவது இவற்றோடாவது மௌனம் இருக்க ஆரம்பித்துவிட வேண்டியதுதான். என்ன ஜாடை காட்டினாலும், எழுதினாலும் பேசுகிற அளவுக்கு வளவளப்பும் வ்ருதாவும் இருக்காதல்லவா? ஸதா அரித்துக் கொண்டிருக்கிற நாக்கை எப்படியும் அன்றைக்குக் கட்டிப் போடுகிறோமல்லவா? அந்த மட்டுக்கும் நல்லதுதான். இப்படி ஆரம்பித்து, அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாகச் சித்த ஆட்டங்களை விட்டு விட்டு, மௌனம் என்றால் மனஸுக்குப் பரம சாந்தி என்று ஆக்கிக் கொண்டு, அப்படியே அலையில்லாத ஸமுத்ரம் மாதிரி ஆகிவிட வேண்டும். குறைபாட்டுடனாவது ஏதோ ஒரு இடத்தில் ஆரம்பித்து விட வேண்டும். அப்யாஸத்தினால் குறைகள் குறைத்து கொண்டே போய் பூர்ண நிலை வரும்; நிஜ மௌனம் ஸித்திக்கும். இப்போது ஆரம்பிக்கிற மௌனம் ஈஸ்வர ஆராதனைக்கு ஒரு ஸாதனம். பிற்பாடு பூர்த்தி ஸ்தானத்தில் அந்த மௌனமே, ‘ஈஸ்வரன் வேறேயாக இல்லை. அவனுக்குத் தனியாக ஆராதனை என்று பண்ண வேண்டியதில்லை’ என்ற ஸாத்ய லக்ஷ்யமாக நிஜ ரூபத்தில் பிரகாசிக்கும். வாய் பேசவில்லை என்பது மட்டுமின்றி, கண் பார்க்கவில்லை, காது கேட்கவில்லை, எல்லாவற்றுக்கும் மேலே மனஸில் ஒரு எண்ணங்கூட எழும்பவில்லை என்று ஆகிவிடுவதுதான் அந்த லக்ஷ்ய ஸ்திதியான நிஜ மௌனம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

In the beginning, it will be impossible, indeed, to put an end to all tasks and thoughts and keep quiet. At such a stage, it is better to start keeping quiet with at least the aid of gestures and written communication. After all, even if one communicates through gestures and writing, one cannot be as talkative as he or she is while employing the instrument of speech. Does not one exercise some control over the tongue which is all the time desirous of uttering one thing or other? That is a good beginning. Gradually one can give up the activities of the restless mind, and achieve that state of silence which is like an ocean without waves, a state of true peace. One should start at some point even if there may be some drawbacks. With practice, the drawbacks will disappear and one will be blessed with that seamless state of complete silence. This practice is an instrument for the worship of Eswara. Later at the stage of completion, this Silence will glow with Divinity as true Realization wherein the Divinity is revealed in the Silence when we realize that Eswara is not separate and we don’t have to worship him. The ideal state of True silence is wherein not only does the mouth not speak but the eye does not see, the ear does not listen and above all, thoughts too are stilled. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. pranams to MAHA PERIYAVA.

    Words cannot express HIS GREATNESS .
    HE WAS AN AVATARA PURUSHA in the 20th century.

Leave a Reply

%d bloggers like this: