வயிற்று உபவாஸம் மாதிரியே இதற்கும் தர்ம சாஸ்திரத்தில் அநேக காலங்களை விதித்திருக்கிறது. “மௌநேந போக்தவ்யம்” என்று கேள்விப்பட்டிரூப்பீர்கள். சாப்பிடுகிற காலங்களில் பேசப்படாது என்று அர்த்தம். வாய்க்கு உள்ள இரண்டு வேலைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது, இன்னொரு வேலையான பேச்சையும் தரப்படாது. இப்படி விதித்தபோதே ருசியையும் கட்டுப்படுத்தியதாக ஆகிறது. மௌனமாக போஜனம் செய்யும் போது, ‘இது வேண்டும், அது வேண்டாம். இதற்கு உப்புப் போடு, அதற்கு நெய் விடு’ என்றெல்லாம் சொல்ல முடியாதல்லவா? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
Similar to the way in which Dharma Sastras have prescribed days on which fasting can be observed specific periods have also been mentioned for observing silence. It is also stated that one should not talk while eating. Since the mouth has to do the work of both talking and eating, only one work should be given to it at one time. This rule enables one to control the taste also. When one is eating quietly, one cannot choose the food or ask for more of salt or ghee, is it not? – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply