இத்தனை வாதப் பிரதிவாதச் சண்டையும் பேச்சால் தானே? மௌனம் அநுஷ்டித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இராது. “மௌனம் கலஹம் நாஸ்தி” இதுவும் ஒரு ஸமூஹ ஸேவைதான். சண்டை வராது என்பதாக ஒரு கெடுதலை இல்லாமல் பண்ணுவது மட்டுமில்லை; நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மௌனத்துக்கு உண்டு. ஸகல புருஷார்த்தங்களையும் பெற்றுத்தர அது உபாயம் என்பதால்தான் “மௌனம் ஸர்வார்த்த ஸாதகம்” என்று சொல்வது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
Is speech not the root cause of all arguments? When we observe silence for one day, such arguments will be avoided at least on that day. ‘Mounam Kalaham Naasthi’, this is also a social service. Silence has the power not only to prevent such wrong things but also to bestow lots of good things upon us in the form of different kinds of prosperity! (‘Mounam Sarvaartha Saathakam’) – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
மௌனம்
மஹா பெரியவாளின் மஹோன்னத தியானம்.
யோக நிலை வரவேற்பறையின் ஆனந்த ராகம்.
தன்னுள்ளே தன்னைத் தேடும் தவறா ஞானயுக்தி.
ஒப்புதல் மறுத்தல் தவிர்த்திட அருமைச் சாதனம். அளவோடு கடைப்பிடித்தால் ஆரோக்கிய வழிமுறை.