Periyava Golden Quotes-989

வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி’ என்கிறபோது சாப்பாடு,  பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதுதான் தாத்பர்யம். ஆனால் நேர்மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு வேலையும் தேவைக்கு அதிகமாகக் கொடுக்கிறோம். வாய்தான் ரொம்ப over-worked! அமித போஜனமாக ஓயாமல் ஏதாவது சாப்பாடு, நொறுக்குத் தீனி, பானம் என்று உள்ளே தள்ளிக் கொண்டேயிருக்கிறோம். எப்போது பார்த்தாலும் வெட்டியாக ஏதாவது பேசிக் கொண்டேயிருக்கிறோம்.

இந்த இரண்டையும் ரொமபக் குறைத்துக் கொள்ள வேண்டும். ‘கண்டதைத் தின்று கெடுதலை வரவழைத்துக் கொள்ளாதே; ஸாத்விக ஆஹாரம் மட்டும் மிதமாகச் சாப்பிடு; அதுவுங்கூட இல்லாமல் அவ்வப்போது உபவாஸமிரு’ என்கிறது சாஸ்திரம். இதேபோல, ‘வாயில் வந்ததைப் பேசிக் கொண்டே போகாதே; அதனால் பிறத்தியானையும் கெடுக்காதே, பகவத் விஷயமாகப் பேசு, பாடு, பஜனை பண்ணு’ என்று சொல்லிவிட்டு, உபவாஸத்தில் ஸாத்விகாஹாரம் கூடப் பண்ணப்படாது என்று வைத்திருக்கிற மாதிரியே, ‘பகவத் பரமான பேச்சும் கீர்த்தனமுங்கூட இல்லாமல் அவ்வப்போது வாயை மூடிக் கொண்டு மௌனமாக இரு’ என்று பெரியோர்கள் உபதேசித்திருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

The true meaning of the idiom that one should control the stomach and the mouth must be that one should exercise control over one’s food and talk. But we do something absolutely contrary to this. We overwork the mouth. We go on consuming one form of food or other like meals, snacks, drink and continue to talk unnecessarily.

We have to reduce both. Our scriptures direct us not to invite ill health by eating all sorts of ill-suited food, to eat mild saathvik food and to go on fasting periodically. Similarly it instructs us not to indulge in meaningless talk and not to harm others by our talk. It also advises us to sing and talk in praise of Bhagawan. Just as fasting is observed where even saathvik food is avoided complete silence has also been advocated by our scriptures when even spiritual matters are not discussed. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: