Samayantasta, Samayachara Tatpara by Maha Periyava

Many Jaya Jaya Sankara to Smt. Mahalakshmi Mami for the share and Shri ST Ravikumar for the translation. Sri Periyava beautifully emphasizes how it is improper to start differentiating between the various forms of god and how we should worship them equally in five ways. Rama Rama

ஸமயாந்தஸ்தா, ஸமயாசார தத்பரா

ஸமயம், ஸமயம் என்று மதத்துக்கு ஒரு பேர் சொல்கிறோம். இந்து சமயம், சமண சமயம், சமய குரவர் என்றெல்லாம் படிக்கிறோம். மதத்திற்கே பொதுப் பெயராகிவிட்ட இந்த ‘ஸமயம்’ என்ற வார்த்தை சிவ-சக்திகளின் ஸமத்வத்தை வைத்து உண்டான பேர்தான்.

சாக்த, சைவ சாஸ்த்ரங்களில் ‘ஸமயாசாரம்’ என்பது உபாஸனா மார்க்கங்களில் ஒன்று; வெளிப் பூஜையாயில்லாமல் ஹ்ருதயத்திலே பாவனா ரூபமாகப் பண்ணும் உசந்த உபாஸனை. அதற்கு ஏன் ஸமயம் என்று பேர் என்றால் அதில் அம்பாளையும் ஈச்வரனையும் ஐந்து விதத்தில் ஸமமானவர்களாக பாவிக்க வேண்டும்.

‘பஞ்ச ஸாம்யம்’ என்பார்கள். ஒன்று – அவர்களுடைய நாமம் ஸமம் – அவர் சிவன் என்றால் அவள் சிவா. அவர் ஹம்ஸன் என்ற பேருடன் இருக்கிறபோது அவளுக்கு ஹம்ஸி என்று பேர். அவர் பைரவர் என்ற பேரில் இருந்தால் அப்போது அவள் பைரவி.

ஸமயன் என்றேகூட அவருக்கு ஒரு பேர். அப்போது அவள் பேரும் ஸமயா. இரண்டு – அவர்கள் ரூபத்திலேயும் ஒரே மாதிரி ஸமமாக இருப்பவர்கள் – காமேச்வர-காமேச்வரிகளில் இரண்டு பேருக்குமே சிவப்பு வர்ணம், சதுர்புஜம், த்ரிநேத்ரம், சிரஸில் சந்த்ர கலை, சதுர்புஜத்தில் அதே நாலு ஆயுதங்கள்: தநுர் பாண-பாச-அங்குசங்கள். மூன்று – அவர்கள் இருக்கிற இடமும் ஒன்றே: அதே மேரு சிகர மத்தி; அம்ருத ஸாகரத்தில் மணித்வீபத்தின் மத்தி; ஸ்ரீசக்ரத்தின் மத்ய பிந்து. நாலு – இரண்டு பேரும் செய்யும் கார்யமும் ஒன்றே. பஞ்ச க்ருத்யம் என்ற ஐந்தொழில். ஐந்து – அவர்களால் லோகம் பெறுகிற அநுக்ரஹங்களும் ஒன்றாகவே இருக்கின்றன.

இப்படியெல்லாம் ஸமத்வம் சொல்கிறது ஒரு பக்கம். நம் மனஸின் ஆழத்தில் அந்த அபிப்ராயந்தான் இருக்க வேண்டும். ஜீவகோடிகளைப் பார்க்கும்போதுகூட ஸம பாவந்தான் இருக்க வேண்டும் என்கிறபோது தெய்வங்களுக்குள்ளே உசத்தி தாழ்த்தி சொல்லப்படாதுதான். அதிலும் தம்பதியாக, நமக்குத் தாயும் தந்தையுமாக இருக்கிறவர்களிடம் வித்யாஸம் பண்ணுவது ஸரியேயில்லைதான். ஆகையினால் அடி மனஸில் [இருவரும்] ஒன்று என்ற எண்ணமே இருக்க வேண்டும்.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளை “ஸமயாந்தஸ்தா” (ஸமயத்தினுள் விளங்குபவள்) என்றும், “ஸமயாசார தத்பரா” (ஸமயாசார வழிபாட்டு முறையில் ப்ரியமுள்ளவள்) என்றும் வர்ணிக்கிறது.

பெரியவா சரணம்!

தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural

An initiative of Kanchi Periva Forum – www.periva.org | www.anusham.org

_____________________________________________________________________________________________________________ 

 Samayantasta, Samayachara Tatpara

We ascribe a name, Samayam (in tamizh) to religion.  We keep reading words like, Hindu Samayam (Hindu religion), Samana Samayam (Religion of Jains), Samaya Kuravar (Religious preceptors) etc.  The word, ‘Samayam’ which has become a common name for religion, actually has its origin to the equality of Shiva and Shakti.

In Sakta, Saiva Sastras, observance to conventional or established religious practices is one of the ways of worship.  It is a very high form of worship done within the heart, in a contemplative form without an outwardly performed Puja.  The reason why it is called Samayam is, Ambal and Eswara should be contemplated in five ways as equals.

They call as ‘Pancha Samayam’ (Five equalities).  One, their names are equal.  If He is Shivan, She is ShivA.  When He is with the name, Hamsan, her name is Hamsi.  If He is with the name, Bhairavar, then She is Bhairavi.  He even has a name as Samayan itself.  That time, her name is also SamayA.

Two, they are similar even in appearance.  As Kameswara-Kameswari, both have reddish color, four hands, three eyes, moon as a head ornament, the same arms in the four hands: Bow, Arrow, Cord, and Goad.

Three, the place where they are, is also one.  The same, centre of the Meru Peak; Middle of Mani Dweepa Island in the ocean of nectar;  Middle point of Sri Chakra.

Four- the task done by both is also same.  The five-fold task called, Pancha KRtya.

Five-The grace received by mankind also happens to be the same.

Citing equality in these ways, is one part.  In the deep recesses of our hearts, we should only have that feeling.  When it is prescribed that we should only have equanimity even when looking at living beings, there should not be any talk of superior and inferior among Gods.  That too, when they are as husband and wife, as our mother and father, it is not proper at all to discriminate.  Therefore, we should only have the thought in the depths of our heart that (both of them) are only one and the same.

In Lalitha Sahasranama, Ambal has been described as “Samayantasta” (Being innermost in piety) and Samayachara Tatpara (who is dear to the way of worship of observance to conventional or established practices).

Periavaa Charanam

Compilation: Periavaa Kural I https://t.me/Periavakural

An initiative of Kanchi Periva Forum – www.periva.org | www.anusham.org

 



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading